இந்தியன் 2 படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸில் இணைந்த நடிகை காஜல் அகர்வால்!

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் வெப் சீரிஸில் இணைந்த நடிகை காஜல் அகர்வால்!

வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வாலும் நடிப்பது உறுதியாகியுள்ளது. நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பன்முகம் கொண்டவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்று உருவாகி வருகிறது. 

இந்த வெப் சீரிஸில் வைபவ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'சரோஜா' படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ். இவரும் இயகுநர் வெங்கட் பிரபுவும் நெருங்கிய நண்பர்கள். சென்னை 28 படத்தில் ஜெய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது வைபவ் தான்.

ஆனால் அப்போது அவர் வேறொரு தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த படத்தில் நடிக்கமுடியவில்லை. அதற்கு பதிலாக தனது அடுத்த படமான 'சரோஜா'வில் வைபவ்வை நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு.

twitter

'கோவா', 'மங்காத்தா', 'சென்னை 28' இரண்டாம் பாகம் உள்ளிட்ட வெங்கட் பிரபு படங்களில் வைபவ் நடித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு தயாரித்துள்ள 'ஆர்கே நகர்' படத்தின் நாயகனும் வைபவ் தான். தற்போது வெப் சீரிஸ் இயக்க வெங்கட் பிரபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதிலும் வைபவ் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.  

சரோஜா படத்தில் காஜல் அகர்வாலைக் (kajal agarwal) காதலிக்கும் கதாபாத்திரத்தில் வைபவ் நடித்திருந்த நிலையில் தற்போது இந்த வெப் சீரிஸிலும் காஜலுடன் வைபவ் நடிக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கயல் ஆனந்தி மற்றும் பலர் நடிக்கின்றனர். 

நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்கும் சாக்ஷி அகர்வால் : ஒருதலை காதலில் சிக்கி தவிர்ப்பு!

தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியில் தெறிக்கவிட்ட யோகி பாபுவும் இப்படத்தில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.  பத்து எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸ் பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது. 

twitter

காஜல் அகர்வால் கடைசியாக தமிழில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் ராஜமுந்திரி சிறை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு போபால் நகரில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியன்-2 படக்குழுவினர் தைவான் நாட்டிற்கு செல்ல உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

twitter

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்திருந்த நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நான் தற்காப்பு கலை தெரிந்த பெண்ணாக நடிக்கிறேன். ஆனால் என் வயது என்ன என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. 

அடுத்தமாதம் தைவானில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்புகள் நிறைவடைந்த பின்னர் நடிகை காஜல் அகர்வால் (kajal agarwal), வெப் சீரிஸில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் சினிமாவின் ஆதர்ஷ நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரன் ! ஆச்சர்யம் தரும் புகைப்படம் !

வெப் சீரிஸில் படப்பிடிப்புகள் கடந்த மாதமே தொடங்கிய நிலையில், தற்போது ஏற்காட்டில் நடைபெற்று வருகிறது. இதன் ஷூட்டிங்கில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார். நடிகர் பிரேம்ஜியுடன், யோகி பாபு இருக்கும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. 

twitter

விரைவில் நடிகை காஜல் அகர்வாலும் இவர்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க பேசி இருக்கின்றனர். ஆனால் அந்த வாய்ப்பை காஜல் நிராகரித்துள்ளார். 

படத்தின் படப்பிடிப்பில் பெரும்பாலான பகுதி கர்நாடகாவின் காட்டுப்பகுதிகளில் நடக்கும் என கூறியுள்ளனர். அது தனக்கு பாதுகாப்பாக இருக்காது என கருதி காஜல் அகர்வால் அந்த படத்தை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்த அவரிடம் தற்போது சில படங்களே கைவசம் இருக்கின்றன. இதனால் தான் வெப் சீரிஸில் நடிக்க காஜல் அகர்வால் (kajal agarwal) ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அற்புதமான ஜோடிகளாக நிகழும் 8 பொருத்தமான ராசி ஜோடிகள் இவைதான்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!