சிறு குழந்தைகளை நாம் எவ்வளவுதான் கவனமாக வளர்த்தாலும் சில சமயங்களில் நமது கவனிப்பு திசைமாறும் போது அது பெரும் சிக்கலில் நம்மை விட்டு விடும். (Parenting challenges)
இப்படித்தான் வாஷிங்க்டன் பகுதியில் டேரியன் டிபிரிட்டா என்கிற பெண்ணும் தனது ஒரு வயது குழந்தையால் பெரும் ஆபத்தை சந்திக்க இருந்தார்.
ஒரு வயது பெண் குழந்தை செய்த குறும்பால் ஏற்பட்ட பதட்டம் மற்றும் மருத்துவர்களின் அதிர்ச்சி ஆகியவற்றை விரிவாக தனது முகநூல் பக்கத்தில் விளக்கி இருக்கிறார் டிபிரிட்டா.
கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. இது மட்டும் போதுமா குழந்தை வளர்க்க.. ?
குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமான கட்டமானது ஒரு வயது முதல் மூன்று வயது கட்டமாகும். இந்த சமயங்களில் குழந்தைகள் கீழே என்ன இருந்தாலும் அதனை வாயில் வைத்து பார்ப்பார்கள்.
அது சின்ன பொருளோ பூச்சியோ எறும்போ அவர்களின் பார்வைக்கு அதனை பிடித்து வாயில் போட வேண்டும் போல இருக்கும் போல. போட்டு விடுவார்கள். அதுதான் சிக்கலை உண்டாக்கும். சில குழந்தைகள் விழுங்கி விடவும் செய்யும். குழந்தை வளர்ப்பில் இது முக்கியமான காலம்.
மே 31ம் தேதி அன்று தனது குழந்தையோடு வழக்கமாக விளையாடி கொண்டிருந்த டிபிரிட்டாவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் வாயின் மேற்புறத்தில் ஏதோ ஒன்று வட்ட வடிவமாக கருப்பாக இருந்திருக்கிறது.
பதற்றத்தை எப்படி கையாளுவது? சில எளிய குறிப்புகள் உங்களுக்காக!
அதனை வழக்கமான அம்மாக்கள் போல கையை விட்டு எடுக்க நினைத்த டிபிரிட்டாவிற்கு அது கையில் எடுக்க வரவில்லை. உடனடியாக அவரது அம்மா சாண்ட்லரை அழைத்த டிபிரிட்டா மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றிருக்கிறார்.
அங்கிருந்த நர்ஸ் குழந்தையின் வாயை துடைத்து விட அப்போதும் அது வெளியே வரவில்லை. நர்ஸ் இது குழந்தை வாயில் இருக்கும் அடையாளம் ஆக இருக்கலாம் என்று கூறினார். ஆனால் டிபிரிட்டோ அதனை மறுத்திருக்கிறார். தினமும் குழந்தையின் வாயை சுத்தம் செய்வதால் அது போன்ற ஒன்றை இதற்கு முன் தான் பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார்.
உடனே மருத்துவர்களை அந்த நர்ஸ் அழைத்திருக்கிறார். மருத்துவர்களும் வந்து சோதனை செய்து பார்த்து விட்டு இது ஒரு மெடிக்கல் மிராக்கிள் உங்கள் குழந்தையின் வாயில் துவாரம் இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.
மருத்துவர்கள் காட்டும்போது பார்த்த டிபிரிட்டா தனது குழந்தை வாயில் எதையோ விழுங்க நினைத்து அது மேலண்ணத்தில் ஒட்டியிருப்பதை உணர்ந்திருக்கிறார். அதன் பின்னர் மருத்துவர் உதவியுடன் அதனை சுரண்டி எடுக்க அது அட்டை பெட்டியின் ஒரு துண்டு என்பது புரிந்தது.
ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு இவ்வளவு கலாட்டா நடந்ததும் மருத்துவர்கள் கண்டுபிடிக்க முடியாததை தானே கண்டுபிடித்ததும் பற்றி விளையாட்டாக பதிவிட்டிருக்கிறார் பிரிட்டா.
அந்த குழந்தையின் அதிர்ஷ்டம் அது தொண்டையில் சிக்காமல் வயிற்றில் சென்று குடலில் ஒட்டாமல் பின்னால் பெரும் விளைவுகளை ஏற்படுத்தாமல் உடனடியாக அந்த அட்டைப்பெட்டி துண்டு குழந்தையின் வாயில் இருந்து அகற்றப்பட்டது.
ஆகவே குழந்தை முக்கியமாக 1 வயது முதல் 3 வயது குழந்தையை நீங்கள் மிக கவனமாக வளர்க்க வேண்டும். விளையாட்டு ஒருமுறை வினையானாலும் காலம் முழுதும் நீங்கள் வருந்த நேரலாம்.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo