உலகில் அனுதினமும் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. சில விஷயங்கள் நம்மை மகிழ வைக்கிறது. சில விஷயங்கள் நம்மை நெகிழ வைக்கிறது. இப்போது சொல்லப் போகும் செய்தி உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கலாம்!
நெய்வேலி அருகே உள்ள மந்தாரக் குப்பத்தில் மளிகை கடை வைத்திருப்பவர் ஜெயராஜ். இவர் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று வழக்கம் போல வியாபாரம் முடித்து விட்டு மளிகைக் கடையை நல்ல கனமான பூட்டு ஒன்றைப் போட்டு பாதுகாப்பாகப் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அடுத்த நாள் காலை கடையைத் திறக்க வந்த ஜெயராஜுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையை திறந்து உள்ளே சென்றவர் மளிகை பொருள்கள் எங்கும் இரைந்து கிடப்பதை பார்த்திருக்கிறார். பூட்டிய கதவுக்குள் யார் வந்திருக்க முடியும் என்று யோசித்தவாறே அண்ணாந்து பார்க்க திருடன் கூரையைப் பிரித்து இறங்கி இருப்பது புரிந்திருக்கிறது.
சுவையான பால் கொழுக்கட்டை செய்யலாம் வாருங்கள் !
pixabay
கடைக்குத் திருட வந்த திருடன் கல்லாப்பெட்டி காலியாக இருந்ததைப் பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கிறான். அதனால் கோபம் அடைந்த திருடன் ப்ளேடு மூலம் கடையில் உள்ள அரிசிமற்றும் மாவு மூட்டைகளைக் கிழித்து எறிந்திருக்கிறான். அதில் உள்ள அரிசியை கைகளால் எடுத்து வாரி கடை முழுதும் இரைத்திருக்கிறான்.
அப்போதும் கோபம் தீராத திருடன் அங்கிருந்த பேனாவை எடுத்து பில் போடப்பட்ட பேப்பரில் தனது அழகான கையெழுத்து மூலம் லெட்டர் ஒன்றை எழுதி இருக்கிறான். “உயிரைப் பணயம் வைத்து திருட வந்தா காசு இல்லாம கல்லாவத் தொடச்சு வச்சு என்னை ஏமாற்றலாமா? அதுக்காகத்தான் இந்த குரங்கு வேலை” என்று தெளிவான தமிழில் பிழையே இல்லாமல் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறான்!
ஜெயராஜ் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இந்த வித்யாசமான புகாரை மந்தாரக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருட வந்த திருடனின் விளையாட்டு லட்டர் (letter) அந்த ஏரியாவைக் கலகலப்பாக்கி இருக்கிறதாம். நம்மையும்தான் !
சென்னையில் உங்கள் டேஸ்ட் பட்களுக்கு சவால் விடும் சில ஸ்ட்ரீட் ஃபுட் கடைகள் !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.