logo
ADVERTISEMENT
home / Accessories
MET GALA 2019 – பேஷன் ஐகான் என மீண்டும் நிரூபித்த ப்ரியங்கா சோப்ரா!

MET GALA 2019 – பேஷன் ஐகான் என மீண்டும் நிரூபித்த ப்ரியங்கா சோப்ரா!

பேஷனில் எப்போதும் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் ப்ரியங்கா சோப்ரா(priyanka) பல சவாலான புதுமையை பேஷனில் புகுத்தியுள்ளார். பல கிண்டல் இன்னல்களை தாண்டி தான் அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். கோலிவுட்டிலிருந்து டஸ்கி ஸ்கின் என அனைவராலும் கிண்டல் செய்யப்பட்டாலும் தனது விட முயற்சியால் தனக்கென தனி இடத்தை பிடித்து உயரத்தை தொட்டுள்ளார்.

தற்போது தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது.  ஹாலிவுட் இசைக்கலைஞர் மற்றும் நடிகருமான நிக்கி ஜோன்ஸை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு அனைவரின் எதிர்பார்ப்பு ப்ரியங்கா(priyanka) MET GALA 2019 எப்படி வருவார் என்ன மாதிரியான உடை அணிந்திருப்பார் என்ன மாதிரியான ஹேர் ஸ்டெயிலில் இருப்பார் என்பதை குறித்ததாகவே இருந்தது.

அனைவரும் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அவர் வந்திருந்தார்.

சில்வர் கலர் உடையில் நாடகங்களில் பார்க்கும் ராணியை போன்று உடை அணிந்திருந்தார். ப்ரியங்காவின்(priyanka) கணவரும் ராஜா போன்ற உடையில் இருவரும் சில்வர் கலர் தீமில் சும்மா கலக்கி இருந்தனர்.

ADVERTISEMENT

சில்வர் கலர் உடையில் ப்ரியங்கா(priyanka) பார்க்க மிகவும் தைரியம் வாய்ந்த பெண்மணி போன்று காட்சியளித்தார். மேல் பகுதி முழுவதும் சில்வர் கலராலும் கீழே கால் பகுதியில் கெவுனில் பிங்க் கலர் பெதரால் வடிவமைக்கப் பட்டிருந்தது. இருவரும் சில்வர் கலரில் காலணி அணிந்திருந்தனர்.

ராணியை நினைவு படுத்தும் வகையில் சில்வர் கலரில் ஆன குரோன் தரையில் வைத்திருந்தார். தலை முடியை சுருள் சுருள்ளான விக் வைத்திருந்தார். பேஷன் ஐகானாக திகலும் ப்ரியங்காவின்(priyanka) தைரியத்தை அனைத்து பேஷன் டிசைனர்களும் பாராட்டி வருகின்றனர். வழக்கம் போன்று சிலர் கிண்டல் செய்து வந்தாலும் அதையெல்லாம் ப்ரியங்கா பெரிது படுத்துவது போன்று தெரியவில்லை. ரெட் கார்பெட்டில் ப்ரியங்காவும்(priyanka) நிக்கும் அழகாக உதட்டு முத்தம் கொடுத்துக் கொண்டது பார்ப்பவர்களை ரசிக்கும் படியாகவும் சிறந்த தம்பதிகள் என நினைக்கும் படியாகவும் இருந்தது.

இதில் குறிப்பாக இவரின் ஐ மேக்கப் மிகவும் அனைவரையும் கவர்ந்தது மட்டுமின்றி உற்று பார்க்கவும் வைத்தது. ஐ சேடோ மட்டும் ஐ மேக்கப் வித்தியாசமாகவும் யாராலும் செய்ய முடியாததை செய்து போன்ற உணர்வை தந்தது. ப்ரியங்கா(priyanka) ஒரு பேஷன் ஐ கான் என்பதை மீட்டும் நிருபித்துள்ளார்.

கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!

ADVERTISEMENT

முகத்தை பளபளப்பாக்கும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்தலாம்

மார்பகத்தை அழகாக வைக்க உதவும் சில ரகசிய டிப்ஸ்!

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

07 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT