மதுரையை (madurai) சேர்ந்த ஜெர்லின் அனிகா தைவான் நாட்டில் நடந்த சர்வதேச காதுகேளாதோர் யூத் பேட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியை சேர்ந்த ஃபின்ஜா ரோசெண்டலை என்பவரை இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். இந்நிலையில் முதல்நிலை வீராங்கனையான ஃபின்ஜா ரேசெண்டாலை 21-12, 21-13 செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியனானார் ஜெர்லின் அனிகா. மேலும் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
மதுரை (madurai) வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயரட்சகன், லீமாரோஸ்லின் தம்பதியினர். இவர்களின் மகள் ஜெர்லின் அனிகா வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே பேட்மிட்டன் விளையாட்டில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 5வது இடமும், 2018ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 வெள்ளிப் பதக்கங்களும், 1 வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
தற்போது சீனாவின் தைபேயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிக்கான 2019ம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 1 தங்கப் பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கங்களும், 1 வெண்கலப் பதக்கமும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். ஜெர்லின் அனிகாவை குறித்து பேசிய அவரத தந்தை ஜெயரட்சகன், ஜெர்லினுக்கு பிறந்ததிலிருந்தே பேசவோ கேட்கவோ முடியாது. ஆனா எல்லாத்தையுமே கூர்ந்து கவனிப்பா. நண்பர்கள் சில பேர் பேட்மின்டன் விளையாடுவாங்க.
அவங்கள பார்க்கப் போகும்போது ஜெர்லினை அழைச்சிட்டுப் போவேன். அவங்க விளையாடறதைப் பார்த்து, இவளும் விளையாட ஆசைப்பட்டா. எட்டு வயசுல கோச் சரவணன் சார்கிட்ட சேர்த்துவிட்டேன். ஒரு வருஷம் முடியிறதுக்குள்ளேயே ரொம்ப நல்லா விளையாடுறா… பெரிய போட்டிகள்ல நிச்சயம் விளையாடி ஜெயிப்பானு கோச் அப்போதே சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நடந்துட்டு இருக்கு. வெற்றிக்கு எதுவும் தடை இல்லை என ஜெர்லினு நிரூபித்துள்ளார் என்றார் மகிழ்ச்சியாக.
மாடர்ன் உடையில் மனதை கரைய வைக்கும் ப்ரியா பவானி சங்கர் : லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!
மேலும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற்று தமது நாட்டிற்கு பெருமை சேர்த்திடுவார் என நம்புவதாகவும், அமெரிக்காவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொண்டு வெற்றிப்பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே தனது மகளின் ஒரே இலக்காக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவரது நம்பிக்கையும், விடாமுயற்சியும் கண்டிப்பாக வெற்றியை பெற்று தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
youtube
அவரது நம்பிக்கை நிறைவேற வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது. காலையில அஞ்சு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் பிராக்ட்டிஸ் செய்யும் ஜெர்லின் , அதன் பின்னர் மதியம் ஒரு மணி வரைக்கும் பள்ளிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து மறுபடியும் மூணு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் பிராக்டிஸ் செய்வாராம். கடந்த ஐந்து வருடங்களாக இது தொடர்வதாகவும், ஒருநாள் கூட பிராக்டிஸூக்குப் போகாம ஜெர்லின் இருக்க மாட்டார் என அவரது தந்தை கூறியுள்ளார்.
திருச்சி சுற்றுல்லா ஸ்தளம் – உச்சி பிள்ளையார் கோயிலின் சிறப்பு!
மேலும் எந்தச் சத்தத்தையும் ஜெர்லினால் கேட்க முடியாது. ஆனால் அதனால் மனம் தளராத ஜெர்லின், அதை அவளுக்கு ப்ளஸா மாத்திக்கிட்டா. அதாவது பிராக்டிஸ் பண்ணும்போது வேறெதிலும் கவனம் சிதறாம முழு ஈடுபாட்டோடு இருக்க முடியும்னு சொல்லுவா. போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது எப்படி ஜெயிப்பது என்பதைத் தவிர வேறெதிலும் கவனம் போகாது. ஜெர்லினுக்கு தான் எவ்வளோ பெரிய வெற்றி அடைஞ்சிருக்கோம்னு தெரியல. விளக்கிச் சொன்ன போது, ‘ஓ! அப்படியானு சாதாரணமாகத்தான் ரியாக்ட் பண்ணினா.
இந்தக் குணம் அவளோட சின்ன வயசுலேருந்தே இருக்கு. அதனாலதான் விளையாடுற போட்டியை மட்டும்தான் மனசுல நினைப்பா. இதுக்கு முன்னாடி ஜெயிச்சது, தோற்றது பத்தி நினைக்கிறது இல்ல என்று தகவல் அளித்துள்ளார். தனது மகள் தங்கத்தை வென்றபோது இந்தியாவின் கொடி அவிழ்க்கப்படுவதைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் விட்டதாக ஜெர்லினின் தாய் லீலா உணர்வுபூர்வமாக தெரிவித்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளிலும் அவர் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்று கூறிய அவர், ஜெர்லினை ஆதரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
வாழ்த்துக்கள் ஜெர்லின் அனிகா!
பார்ப்பவர்களை வுவாவ் என சொல்ல வைக்கும் 6 அற்புதமான இரகசிய மேக்கப் குறிப்புகள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.