logo
ADVERTISEMENT
home / Bollywood
தீபிகா படுகோன் கர்ப்பம்..? விவரங்கள் உள்ளே..!

தீபிகா படுகோன் கர்ப்பம்..? விவரங்கள் உள்ளே..!

பாலிவுட்டின் தேவதை தீபிகா படுகோன் ( Deepika padukone) தற்போது கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பி இருப்பதால் பாலிவுட் பரபரப்பாகி இருக்கிறது.

2018 நவம்பரில் காதல் கணவர் ரன்வீரை தீபிகா படுகோன் இத்தாலியில் வைத்து திருமணம் செய்தார். திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. இந்நிலையில் தற்போது ரன்வீர் மற்றும் தீபிகா இருவருமே அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி தங்கள் நடிப்பு வாழ்க்கையை தொடர்கின்றனர்.

அமில வீச்சில் பாதிக்கப்பட்டு உடைந்து போகாமல் மீண்டு வந்து திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி பல்வேறு சமூக சேவை செய்து வரும் லக்ஷ்மி அகர்வால் எனும் பெண்ணின் உண்மை கதை திரைப்படமாகிறது. அதில் லக்ஷ்மி கதாபாத்திரத்தை தீபிகா படுகோன் ஏற்றிருக்கிறார்.

ADVERTISEMENT

இதற்கான மேக்கப் டெஸ்ட் முடிந்து புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தீபிகா படுகோன் கர்ப்பம் என்று செய்திகள் பரவி வருகின்றன.

இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தீபிகா அவை சுத்த பொய் என்று கோபமடைந்திருக்கிறார். நான் இப்போது கர்ப்பம் இல்லை. அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும்.. மணமான உடனே குழந்தை பெற்று கொள்ள பெண்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். இது சரியில்லை.

இப்போது நான் சாபக் திரைப்படத்தில் என் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். என் வாழ்வில் மிக முக்கிய அங்கமாக இருக்க போகும் திரைப்படம்தான் சாபக் என்று தெரிவித்து அவர் ரசிகர்களுக்கு நிம்மதி அளித்திருக்கிறார் தீபிகா.

ADVERTISEMENT

தீபிகா சொல்வது உண்மைதான் எல்லாமே மற்றவரின் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். அவரவர் சுதந்திரம் பற்றிய யோசனை எதுவும் அவர்களுக்கு இருப்பதில்லை. எந்த வித அழுத்தங்களும் நம்மை அணுகாமல் தடுப்பது நம் சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும்.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்         

உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா ..நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா

ADVERTISEMENT

சூப்பர் டீலக்ஸ் – பெண்கள் மீதான பார்வையை அகலமாக்குகிறது       

—                                                

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                                                              

ADVERTISEMENT
14 Apr 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT