logo
ADVERTISEMENT
home / அழகு
முகப்பொலிவு கிரீம்கள் பயன்படுத்துவோர் கவனத்திற்கு : கிரீம்களால் இவ்வளவு தீமைகளா?

முகப்பொலிவு கிரீம்கள் பயன்படுத்துவோர் கவனத்திற்கு : கிரீம்களால் இவ்வளவு தீமைகளா?

முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படும் விஷயம். தங்கள் முகம் மாசு மருவின்றி அழகாக வெள்ளையாக பளிங்கு போல மினுங்க வேண்டும் என்பது தான் பெண்களின் விருப்பம்.

தங்கள் முகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே பலரும் ஆசைப்படுகின்றனர். இந்த ஆசை தூண்டி தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்ளவே முகப்பொலிவு கிரீம் (fairness cream) தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்புகளை போட்டி போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

pixabay

ADVERTISEMENT

முகப்பொலிவு கிரீம்களின் வேலை

முகப்பொலிவு கிரீம்கள் நிஜமாகவே நம் சருமத்தை வெள்ளையாக்குதா என்றால் இல்லை என்பதே உண்மை. நம் சருமத்தில் இருக்கும் மெலனின் (Melanin) என்னும் நிறமி தான் நம் தோலுக்கு நிறத்தை கொடுக்கிறது. வெயிலில் நம் தோல் கறுத்து போவதற்கு முக்கிய காரணம் இந்த மெலனின் தான். 

பாத வெடிப்புகள் பாடாய்படுத்துகிறதா? குளிர்காலம் தொடங்குமுன் குணப்படுத்தி விடலாம் வாருங்கள்

மெலனின் அளவு அதிகரிக்கும் போது தோல் கறுத்து போகும். மெலனின் அளவு கம்மியாக இருக்கும் போது தோல் வெளுப்பாக தெரியும். முகப்பொலிவு கிரீம்கள் நம் சருமத்தில் இருக்கும் தைரோசினேஸை (Tyrosinase ) தடுத்து  மெலனினை அதிகரிக்க செய்கிறது. இவ்வாறு தைரோசினேஸை தடுப்பதற்காக கிரீம்களில் ஹைட்ரோகுவினோன் எனும் வேதியல் பொருள் சேர்க்கப்படும்.

ADVERTISEMENT

pixabay

இவற்றோடு சேர்க்கப்பட்டிருக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன், புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தி விடுகிறது. இதனால் நம் சருமத்தின் நிறம் இந்த முகப்பொலிவு கிரீம்களால் சிறிது அதிகரித்தது போன்ற தோற்றத்தை தருகிறது. நாம் இந்த முகப்பொலிவு கிரீம்களை (fairness cream) உபயோகம் செய்வதை நிறுத்தி விடும் போது நம் சருமம் திரும்பவும் பழைய நிறத்துக்கு திரும்புகிறது.

முகப்பொலிவு கிரீம்கள் – தீமைகள்

  • சரும பாதுகாப்பு நிறுவனங்கள் விற்கும் எல்லா வகையான கிரீம்களில் அதிக அளவிலான ரசாயனங்கள் கலந்துள்ளதால் அது சருமத்தை பாதித்து சருமத்தின் இயற்கை பாதுகாப்பு அமைப்பை சீர்குலைகிறது. 
  • முகப்பொலிவு கிரீம்களில் சிலிகேட் டால்க் போன்ற ரசாயனங்கள் இருப்பதால் அவை புற்றுநோயை உண்டாகும். மேலும் நுரையீரலில் தொற்றும் ஏற்படும். கிரீம்கள் சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வியர்வையை தடுத்து சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும்.

ஒப்பனைக்கு புதுசா? 8 ஒப்பனை அத்தியாவசியங்களுடன் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தை அடையுங்கள்!

  • அழகு சாதன கிரீம்கள் அனைத்திலும் மார்பக புற்றுநோயை உருவாக்கக்கூடிய பேராபென்ஸ்  என்ற வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் புற்றுநோய், நரம்பு கோளாறை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

pixabay

  • நீங்கள் பயன்படுத்தும் முகப்பொலிவு கிரீம்களில் ஈயம், பாதரசம், ஆர்சனிக் போன்ற வேதிப்பொருள்களின் சேர்க்கை குறித்த தகவல்களை சரி பாருங்கள், பெரும்பாலான கிரீம்களின் லேபிள்களில் இடம் பெறாதது. அவற்றை பயன்படுத்த வேண்டாம். 
  • முகப்பொலிவு கிரீம்கள் மூலம் தோலுக்கு நிறம் அளிக்கும் நிறமியான மெலனின் அளவை படிப்படியாக குறைந்து பல்வேறு சரும பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. 
  • மெலனின் அளவு குறைவதால் சருமத்தின் சூரிய ஒளியின் வெப்பத்தை தாங்கக்கூடிய திறன் குறைவதோடு, சூரியனில் இருந்து வெளியாகும் ஆபத்தான யூவி கதிர்கள் சரும பாதிப்பை உண்டாக்கும். 

உங்கள் பெஸ்டியின் திருமணத்தில் முயற்சிக்க 17 அழகான சிகை அலங்காரங்கள்!!

  • தோலில் மெலனின் உற்பத்திய  தடுக்கும் வைட்டமின் சி கிரீம்களில் அதிகம் உள்ளது. ரெட்டினோயிக் அமிலம் வைட்டமின் ஏ வகையை சார்ந்த தோலின் மேற்பரப்பு படலங்களை அகற்ற உதவும். இதன்மூலம் தோலின் அடர்நிற செல்கள் நீக்கப்பட்டு தொற்றுகள் ஏற்படுகிறது.

pixabay

ADVERTISEMENT
  • ஸ்டீராய்டு உள்ள கிரீம்கள், கோஜிக் அமிலம் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள கிரீம்களை நீங்கள் உபயோகித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதனை பயன்படுத்தாதீர்கள்.
  • கிரீம்களில் சேர்க்கப்பட்டுள்ள ஹைட்ரொகுவினோன் ரசாயனம் தோலை வெண்மையாக்க பயன்படுத்தப்படுகிறது. இது தோலுக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும். 
  • முகப்பொலிவு கிரீம்களுக்கு (fairness cream) பதிலாக சத்தான காய்கறி, பழங்களை பெண்கள் தினமும் சாப்பிட்டு வந்தாலே சருமம் பொலிவாகும். வெற்றிக்கு நிறம் ஒரு தடையல்ல என்பதை உணர்ந்து வாழ்வோம். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

09 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT