இளையராஜா.. இசை பற்றிய அறிவை மக்களுக்கு கொண்டு சேர்ந்ததில் முக்கியமானவர். இவர் இல்லாமல் 80,90களில் தமிழ் சினிமாவே இல்லை என்பதுதான் உண்மை. உணர்வுகளுக்கு ஏற்ப இசையை பயன்படுத்தி நெஞ்சங்களை நெகிழ வைத்தவர் இளையராஜா.
இசைக்கான சரியான மரியாதைகள் கிடைக்காத இந்தியாவில் தனது இசைக்கான ராயல்டி கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அவருடைய இசைக்கான காப்பிரைட் கேட்பதில் குறையொன்றும் இல்லை.
ஆனால் அதனை புரிந்து கொள்ளாத மக்கள் இளையராஜா தலைக்கனம் பிடித்து போய் பேசுகிறார் என்றெல்லாம் கூறி கண்டனங்களை பதிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இளையராஜா தனது சொந்த அறிவை பயன்படுத்தி உருவாக்கிய இசையை சர்வ சாதாரணமாக தமிழ் சினிமாக்களில் இடை செருகலாக செருகி அவரது இசையை பயன்படுத்தி படத்தை ஹிட் செய்கின்றனர். இதற்கு இளையராஜாவை இசையமைக்க நேரடியாகவே கேட்டிருக்கலாம்.
அதற்கு பதிலாக வேறொரு இசையமைப்பாளரின் பெயரில் இளையராஜாவின் இசையை படம் முழுதும் பயன்படுத்துவது தவறு என்கிற கோணத்தில் இளையராஜா தனது பாடல்கள் மற்றும் இசைக்கோர்ப்புக்களுக்கு ராயல்டி கோரியிருந்தார்.
இதற்கிடையில் பிரம்மாண்ட ஆர்கெஸ்ட்ராக்களில் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு இசை கலைஞரின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை மட்டுமே தொடர்ந்து பாடி மிக பெரிய வருமானத்தை உலகளவில் ஈட்டி கொண்டிருந்ததால் இளையராஜாவிற்கு கோபம் ஏற்பட்டது. தனது பாடல்களை பாட தனது அனுமதி வேண்டும் என்பதில் கறாராக இருந்தார்.
NGK – நந்த கோபால குமரன் – எனது பார்வை
இதனால் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் மனம் வருந்த நேரிட்டது. ஆனாலும் இளையராஜா பக்கத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்த பாடகர் எஸ்பிபி இறுதியாக மீண்டும் இளையராஜாவுடன் இனைந்து பாட ஆரம்பித்திருக்கிறார்.
சமீபத்தில் இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த இசை விழாவில் எஸ்பிபி ஜேசுதாஸ் மற்றும் இளையராஜா ஆகிய மூவரும் இணைந்து மக்களை இசையால் மூழ்கடித்தனர். அங்கு நடந்த சில விஷயங்களும் சர்ச்சைக்குள்ளாகின.
இளையராஜா எப்போதும் நேர்த்தி மற்றும் ஒழுக்கத்தில் கண்டிப்பானவர் என்பதை அவ்வப்போது செய்திகளில் நாம்தெரிந்து கொண்ட ஒரு விஷயம்தான். அவரது இசை நிகழ்ச்சிகளிலும் ஆடாமல் அசையாமல் பாடும் பாடகர்கள் மற்ற கலைஞர்கள் மூலம் இதனை நன்றாகவே நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
— மீனவன் ஐயர் (@itzjackmails) June 2, 2019
இந்நிலையில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது ஒருவர் குறுக்கே சென்று அதனை தொந்தரவு செய்ததால் இளையராஜா அவருடன் கனிவான கண்டிப்புடன் சில விஷயங்களை கூறினார், அவர் மீதுள்ள மரியாதையால் அவரது கோபத்தை மேலும் அதிகப்படுத்த விரும்பாமல் அந்த நபர் இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றார். இதனையே மக்கள் பெரிது படுத்தி கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் ஒழுக்கம் என்பதை வாழ்வில் கடைபிடிக்கும் இசைஞானி இளையராஜாவிற்கு 1000 ரூபாய் டிக்கெட் வாங்கி விட்டு 10000 டிக்கெட் இடத்தில் அமர்ந்த பலரின் ஒழுங்கீன செயல்தான் அவருக்குள் கோபத்தை தூண்டி விட்டிருக்கிறது.. அதனை மேடையில் இருந்து கவனித்த படியே இருந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோரிடமும் இதனை மைக்கில் பகிர்ந்து இருக்கிறார்.
10000 டிக்கெட் வாங்கியவர்கள் எங்கு சென்று அமர்வார்கள் .. இப்படி நடந்து கொண்டால் என்னைத்தானே எல்லோரும் குறை சொல்வார்கள் என்கிற தகப்பனின் ஆதங்கமே அதில் மேலோங்கி இருக்கிறது. தங்களது குற்றங்களை ஏற்று கொள்ளாத ஒரு கும்பல்தான் இதனை பெரிய பிரச்னையாக பார்க்கிறது.
“போடா எல்லாம் விட்டுத்தள்ளு… பழசையெல்லாம் சுட்டு தள்ளு..
புதுசா இப்போ பிறந்தோம் என்று எண்ணி கொள்ளடா டோய்”நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜாவுடன் மேடையேறிய எஸ்.பி.பி. தன் நண்பனிடம் நட்பை வெளிப்படுத்திய தருணம் அவ்வளவு அழகானது… #RajathiRaja #Ilaiyaraja pic.twitter.com/5WZoN4402X
— We Luv Coimbatore (@weluvcoimbatore) June 2, 2019
இப்படி பல சர்ச்சைகள் இளையராஜாவை சுற்றி சுழன்றாலும் இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை பயன்படுத்த கூடாது என்கிற ஹைகோர்ட்டின் முடிவு (verdict) அவருக்கும் அவரை புரிந்து கொண்ட ரசிகர்களுக்கும் மகிழ்வை கொடுத்திருக்கிறது.
இந்த நீண்ட போராட்டம் மற்றும் தீர்ப்பு என்பது அவருக்கானது மட்டுமல்ல.. பின்வரும் இசைக்கலைஞர்களை இதனை பயன்படுத்தி கொள்ள தனக்கான நியாயத்தை பெற்று கொள்ள முடியும் என்பது இன்னொரு சந்தோஷ செய்தி.
திரைப்பிரபலங்கள் தங்கள் காதலை எப்படி ப்ரொபோஸ் செய்தனர் ! சுவாரஸ்ய காதல் கதைகள் !
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.