logo
ADVERTISEMENT
home / Age Care
வீட்டில் இருந்தபடியே பப்பாளி ஃபேசியல் செய்வது எப்படி!

வீட்டில் இருந்தபடியே பப்பாளி ஃபேசியல் செய்வது எப்படி!

வீட்டில் இருந்தபடியே பப்பாளி(papaya) ஃபேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
காய்ச்சாத பால்
பப்பாளி(papaya) பழக்கூழ்

ஃபேசியல் செய்யும் முறை :
மசாஜ் செய்யும் போது முகத்தில் மேல் நோக்கி செய்ய வேண்டும். பாலைப் கழுத்திலிருந்து முகம் வரை தடவி, பின் பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். பப்பாளி(papaya) கழுத்து மற்றும் முகம் முழுவதும் பூசி கழுத்திலிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும் மீது விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்ந்தாற் போல் வைத்து செய்ய வேண்டும்.

மசாஜ் செய்யும்போது எந்த காரணத்தைக் கொண்டும் நடுவில் கையை எடுக்காமல் செய்யவேண்டும். அவ்வாறு எடுக்க நேரிட்டாலும் ஒரு கை முகத்திலேயே இருக்க வேண்டும். முகம் முழுவதும் நுனி விரல்களைக் கொண்டு மெதுவாக தட்டிவிட வேண்டும். மசாஜை கழுத்திலிருந்து ஆரம்பித்து விரல்களை மெதுவாக மேல்நோக்கி தாடைக்கு கொண்டு வரவேண்டும்.

ADVERTISEMENT

தாடையின் நடுப்பகுதியிலிருந்து பக்கவாட்டில் செய்ய வேண்டும். தாடையிலிருந்து மேல்நோக்கி கன்னப்பகுதிகளில் செய்ய வேண்டும். உதட்டினைச் சுற்றியும், உதட்டின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.முதல் மூன்று விரல்களைக்கொண்டு சிரிப்பு வரிகளின் (Laugh Line) மீது மசாஜ் செய்ய வேண்டும்.

papaya facial003
கன்னத்தில் முதல் மூன்று விரல்களைக் கொண்டு கிள்ளியும் மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் மேலும், மூக்கின் ஓரங்களிலும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். கண்களுக்கு நடுவில் குறுக்காக முதல் விரலைக்கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களையும் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். புருவங்களை பிடித்தும் விட வேண்டும்.

நெற்றியில் முதல் இரு விரல்களைக் கொண்டு வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் இரண்டு முதல் மூன்று முறை செய்ய வேண்டும். பிரஷர் பாயிண்ட்ஸ் உள்ள இடங்களில் அழுத்திவிட வேண்டும்.

பிரஷர் பாயிண்ட்ஸ் உள்ள இடங்கள் தாடையின் நடுப்பகுதி, மூக்கின் பக்கவாட்டு இடம், நெற்றி மேல்முடிவில், புருவங்களின் நடுவில், கண்புருவங்களின் முடிவின் சிறிது கீழ்பகுதி, மூக்குத்தண்டிற்கும், கண்களின் ஆரம்ப பகுதி ஆகும் தூக்கம் வராதவர்களுக்கு கைகளை சுண்டுவிரல்களின் பக்கமாக வைத்து நெற்றியில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

இவ்வாறு மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும். கண்பாவைகளை மெதுவாக அழுத்திவிட வேண்டும் இது தான் ஃபேசியல் செய்யும் முறையாகும். அனைத்து விதமான பழங்களையும் ஃபேசியல் செய்ய பயன்படுத்தலாம். மேலே கூறப்பட்டுள்ள முறைப்படி வீட்டில் இருந்தபடியே குறைந்த செலவில் உங்களை அழகு படுத்திக் கொள்ளலாம்.

Also Read இயற்கையான மாய்ச்சுரைசர் தயாரிக்கும் முறை

papaya facial004

பப்பாளி(papaya) டிப்ஸ்
பப்பாளி(papaya) மற்றும் தேன்:
வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பப்பாளி(papaya) மற்றும் தேன் சிறந்த தீர்வு. தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். பப்பாளியின்(papaya) விழுது முகத்தில் உள்ள துளைகளில் ஆழமாக சென்று சுத்தம் செய்கிறது.

ADVERTISEMENT

பப்பாளியின்(papaya) விழுது – ¼ கப்
தேன் – ½ தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

பப்பாளி(papaya) மற்றும் ஆரஞ்சு:
பப்பாளி(papaya) மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கலந்து பயன்படுத்துவதால் அதிகபடியான எண்ணெய் சுரப்பது குறைந்துவிடும். மேலும் முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.

பப்பாளி(papaya) விழுது – தேவையான அளவு
ஆரஞ்சு சாறு – 3 தேக்கரண்டி
ஒரு பௌலில் பப்பாளி(papaya) விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.

பப்பாளி(papaya), வாழைப்பழம் மற்றும் வெள்ளரி:
உங்கள் சருமத்தை பிரகாசமாக்க வாழைப்பழம், வெள்ளரி மற்றும் பப்பாளி(papaya) ஆகிய மூன்றையும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சருமத்தை ஈரப்பதத்துடனும் மென்மையாகவும் வைக்க உதவும். பப்பாளி(papaya), வெள்ளரி மற்றும் வாழைப்பழம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவி விடவும். இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படுகிறது.

ADVERTISEMENT

பாரம்பரிய உணவான நாவூரும் சுவையான குழி பனியாரம்!

நாவூரும் பிரியாணி செய்வதற்கான ரகசிய டிப்ஸ்கள்

காதலை சுண்டி இழுக்கும் டாப் 10 ரொமான்ஸ் பாடல்கள்

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube, shutter stock

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

19 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT