logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நவதானிய ரெசிபிகள் : வீட்டிலேயே செய்யலாம்!

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நவதானிய ரெசிபிகள் : வீட்டிலேயே செய்யலாம்!

உடல் பருமன் என்பது இன்றைய காலத்தில் ஒரு நோய் போல ஆகிவிட்டது. குறிப்பாக இன்றைய குழந்தைகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது நமது உணவு முறைதான். குழந்தைகளுக்கு கொழுப்பு, புரதம் என்று அனைத்து சத்துக்களும் அவசியம். 

இதை பூர்த்தி செய்ய நவதானிய உணவுகள் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. சிறு தானியங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்றவை மிக முக்கியமானவை. மனிதர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் சிறு தானியங்கள் (millets) முக்கியப் பங்கு வகிக்கின்றன. உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சில நவதானிய உணவுகளை வீட்டிலேயே எப்படி செய்வது (ரெசிபி) என இங்கு காண்போம்.

pixabay

ADVERTISEMENT

1. நவதானிய அடை

தேவையான பொருட்கள் : 

கோதுமை – 1 கப், 
அரிசி – 1 கப், 
துவரம் பருப்பு – 1 கப், 
பச்சைப்பயிறு – 1 கப், 
கொண்டைக்கடலை – 1 கப், 
மொச்சை – 1 கப்,
எள்ளு – 1 கப், 
கறுப்பு உளுந்து – 1 கப்,
கொள்ளு – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 3,
இஞ்சி – ஒரு துண்டு,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிது. 

youtube

ADVERTISEMENT

செய்முறை : 

மேலே கொடுக்கப்பட்ட நவ தானியங்களை (millets) முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் ஊறவைத்த தானியங்களுடன், மற்ற பொருட்களுடன் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை தோசைக்கல்லில் அடையாக சுட்டு இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிட்டு மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும். ருசியான நவதானிய அடை (millets) ரெடி! 

2. நவதானிய வகை சூப்

தேவையான பொருட்கள் : 

நவதானிய வகைகள் – 1 கப், 
இஞ்சி – சிறு துண்டு,
பச்சை மிளகாய் – 1,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு, உளுந்து – 1 ஸ்பூன், 
கடலைப் பருப்பு  – 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

ADVERTISEMENT

youtube

செய்முறை :

முதலில் நவதானிய வகைகளை (millet recipes) சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டு தாளியுங்கள். பிறகு கறிவேப்பிலை, பெருங்காயம், வேகவைத்த நவதானியங்கள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு இறக்கி வைத்து பரிமாறலாம். 

ADVERTISEMENT

மேலும் படிக்க -தொடர்ந்து வெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

3. நவதானிய தயிர் வடை

தேவையான பொருட்கள் : 

கருப்பு உளுந்து –  1 கப், 
சிறு பருப்பு – 1 கப், 
கேழ்வரகு – 1 கப், 
கம்பு – 1 கப், 
கோதுமை – 1 கப், 
கொண்டைக்கடலை – 1 கப், 
காராமணி – 1 கப், 
புளிப்பில்லாத தயிர் –  2 கப், 
மிளகு, சீரகத் தூள் – சிறிது, 
இஞ்சி – பொடியாக நறுக்கியது, 
பச்சை மிளகாய் – 2, 
கொத்தமல்லி – சிறிது, 
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, 
கொத்தமல்லி சட்னி – சிறிது, 
சாஸ் – சிறிது.

ADVERTISEMENT

youtube

செய்முறை : 

முதலில் நவதானியங்களை ஊற வைத்துக் கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் வடைகளாக தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

பின்னர் தயிரை நன்கு அடித்து வைத்து கொள்ளவும். வடைகளை பாதி தயிரில் ஊற வைக்கவும். மீதி தயிரை வடைகளின் மீது ஊற்றி, கொத்தமல்லி சட்னி,  சாஸ் விட்டு அலங்கரித்து, மிளகு, சீரகத் தூள் தூவிப் பரிமாறவும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க – ஆரோக்கிய வாழ்விற்கு வைட்டமின் டி – முக்கியத்துவம் & வைட்டமின் டி சத்து நிறைந்த ஆதாரங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

15 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT