logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பிறருக்கு சுகமளிப்போர் உன் போல்  உண்டோ வெண்ணிலாவே!! பௌர்ணமி முழு நிலவின் சுவாரசியங்கள்!

பிறருக்கு சுகமளிப்போர் உன் போல் உண்டோ வெண்ணிலாவே!! பௌர்ணமி முழு நிலவின் சுவாரசியங்கள்!

மனித மனதை பிரமிக்க வைக்கும் பூமியின் இயற்கை செயற்கைக்கோள் சந்திரன். மாதத்தில் ஒரு முறை சந்திரன் தன் முழு முகத்தையும் பூமிக்கு காண்பிக்கும் தருணம்தான் பௌர்ணமி(pournami). அதுதான் நிலாவின் பிரகாசமான கட்டம். விஷ்ணு பகவான், சுப்ரமணியன், புத்தா(புத்த பூர்ணிமா) போன்ற இந்து கடவுள்கள் பௌர்ணமி அன்று பிறந்ததாகக் கூறப்படுகிறது. சத்ய நாராயண பூஜை போன்றவை இந்த நாளில் சிறப்பாக செய்யப்படும்.வட இந்தியாவில் பூர்ணிமா என்று பௌர்ணமியை அலைகிறார்கள்.

பௌர்ணமி விரத நன்மைகள்

இந்து கலாச்சாரத்தில், பௌர்ணமியன்று விரதம் இருப்பது வழக்கம். அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன் குளித்து விரத்தைத் துவங்குவார்கள். பின்னர், முழு நிலவு தோன்றியபின் கடவுளை வணங்கி பூஜை செய்தபின் உணவு உண்பார்கள்.பௌர்ணமியின் விரதத்தின் முழு விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

விரதம் இருப்பதால் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் உண்டு. 

  • உடல் எடையை குறைக்க உதவும். அதனால், நீரழிவு நோய் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம். விளையாட்டு வீரர்கள் கூட போட்டிக்காக உடலில் குறைந்த கொழுப்பு அளவை பராமரிக்க விரதம் மேற்கொள்வார்கள்.
  • விரதம் இருந்தால், முகப்பரு போன்றவற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாத்து, சருமத்தை சுத்தமாக வைக்க உதவும். 
  • எவ்வளவுநேரம் விரதம் மேற்கொள்ளுகிறீர்களோ உடல் அதற்கு ஏற்றவாறு ஹார்மோன்களை வெளியேற்றும். ஹோர்மோன் சீராக வேலை செய்தால், உங்களுக்கு அப்போதுதான் உண்மையான பசி தோன்றும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரதம் உதவும். செல்களில் ஏற்படும் அலெர்ஜி, செல் சேதமடைதல் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
  • இருதயத்தை பாதுகாப்பாக வைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். 
  • மூளை நன்றாக வேலை செய்ய உதவும். 
  • இரவு நல்ல உறக்கம் வரும்.
  • வயது முதிர்வைத் தடுத்து, உங்கள் வாழ்நாளை அதிகரிக்கும்.

பௌர்ணமியும் 12 மாதங்களும்

ADVERTISEMENT

Pexels

தென்னிந்தியாவில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஒரு முக்கியமான பண்டிகை நாளாக ஒவ்வொரு மாதமும் அமைந்திருக்கும். அதனால் 12 பண்டிகைகள் நமக்கு உண்டு.

  1. மார்கழி மாதம் வரும் பௌர்ணமியில் விரதம் இருந்து ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் உங்களுக்கு அமையும் என்று நம்பப்படுகிறது.
  2. தைப்பூச பௌர்ணமியில் விரதம் இருந்து முருகனின் அருள் பெறுங்கள். 
  3. மாசி மகப் பௌர்ணமியில் விரதம் இருந்து ஜெகத்தை ஆளும் வாய்ப்பு பெறுங்கள்.
  4. பங்குனி உத்திர பௌர்ணமியன்று விரதம் இருந்து திருமண வரம் வேண்டுங்கள். சிவன் பார்வதி, வள்ளி-முருகன் திருமணங்கள் இந்நாளில்தான் நடைபெற்றது.
  5. சித்திரை மாத பௌர்ணமியன்று விரதம் இருப்பது சித்திர குப்தன் அவதரித்த நாள் என்பதால், மோட்சம் கிடைக்கும்; முருகன் அவதரித்த 
  6. வைகாசியில் பௌர்ணமி விரதம் இருந்து, இன்பமான வாழ்வு அமைய வைகாசி விசாகம் கொண்டாடுங்கள்.
  7. இறை தரிசனம் கிடைக்கப்பெற மாங்கனித் திருவிழா கொண்டாடி ஆணி மாதத்தில் பௌர்ணமி விரதம் மேற்கொள்ளுங்கள்.
  8. ஆடிப் பௌர்ணமியில் விரதம் இருந்து, அம்மன் ஆலயத்தில் மாவிளக்கேற்றி மங்கள வாழ்வு பெறுங்கள்.
  9. சகோதர ஒற்றுமையை பலப்படுத்த ஆவணி மாத பௌர்ணமியில் விரதம் மேற்கொள்வார்கள்.
  10. முன்னோர்கள் ஆசி பெற, புரட்டாசி பௌர்ணமியில் விரதம் மேற்கொள்வார்கள்.
  11. வறுமை நீங்க ஐப்பசி மாத பௌர்ணமியில் விரதம் இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
  12. பிரகாசமான எதிர்காலத்திற்கு கார்த்திகை மாத பௌர்ணமியில் தீபத் திருநாளில் விரதம் மேற்கொள்வார்கள்.

பௌர்ணமியும் அறிவியலும்

சரி, பக்தி – கலாச்சார அடிப்படையில் பௌர்ணமியின் விசேஷங்களை பார்த்தோம். இந்த அழகிய முழு நிலவு நாள் அறிவியல் ரீதியாக என்ன கூறுகிறது?

  1. பௌர்ணமி அல்லது முழு நிலா என்பது பிறப்பு, மறுபிறப்பு, முழுமை, பூரணமான, உருவாக்கம் போன்றவற்றைக் குறிக்கிறது. 
  2. பல நூறு அல்ல பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே, சந்திரன் பூமியில் உள்ள உயிரினங்களின் இயற்கையான தன்மையை பாதிக்கிறான் என்பதைக் கூறியிருக்கிறார்கள். அதை அறிந்தே சந்திரனை கடவுளாக எண்ணி வணங்குகிறார்கள். 
  3. பௌர்ணமியன்று கடல் சீற்றங்கள் அதிகமாவதைப் பார்க்கிறோம். நிச்சயம் நிலவுக்கு ஒரு ஆற்றல் இருக்கிறதுதானே!
  4. அறிவியல் ரீதியாகவும், பௌர்ணமி நம் மனதிற்கும், உடலிற்கும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 
  5. பௌர்ணமியன்று (full moon day) புவியீர்ப்புவிசை அதிகமாக இருக்குமாதலால், வயிற்றுப் பொருமல் நீங்கும், உடல் சக்தியை அதிகரிக்கும், மேலும் மனம்-உடல் ஆகிய இரண்டிற்கும் இடையில் நல்ல சமன்நிலை உண்டாகும்.

மாதவிடாய் சுழற்சியும், நிலாவின் சுழற்சியும்

ADVERTISEMENT

Pexels

மாதவிடாய் சுழற்சியும், நிலாவின் சுழற்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?

நிலா பூமியை ஒரு சுற்று சுற்ற, 27 நாட்கள், 7 மணி, 43 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது. ஒரு வருடத்தில் இது 29 நாட்கள் வரைகூட சராசரியாக மாறுபடும். அதுபோல, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சியும் பொதுவாக 28 நாட்கள் நீடிக்கிறது. அதனால், இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். புரிதலுக்காக ஆரம்ப காலகட்டங்களில் இப்படியொரு ஒப்பீடு வந்திருக்குமே தவிர, அனைத்து பெண்களுக்கும் எப்போதும் இது பொருந்தாது. வாழ்நாளில், ஒரு சில சுழற்சி முறை வேண்டுமால் ஒன்றாக இருக்குமே தவிர, எப்போதும் இரண்டும் ஒன்றாக அமைவது அரிது.

பௌர்ணமியும் ஆன்மீகமும்

கடைசியில் , ஆன்மீக ரீதியாக இந்த தினம் என்ன கூறுகிறது? வேத சாஸ்திரத்தில், நிலவை மனதோடு ஒப்பிடுகிறார்கள். ஒருவரது எண்ணங்களையும், உணர்வர்களையும் சந்திரனோடு சம்மந்தப்படுத்தியிருக்கிறார்கள். ஆன்மீக ரீதியாகவும், மன உணர்வின் அடிப்படையிலும், பௌர்ணமி தினத்தன்று, முழுவதும் நேர்மறையான வாய்ப்புகளைத் தர இருக்கிறது. ஆன்மீகத்திலும், பௌர்ணமியன்று நல்ல ஆற்றல் பெருகுவதால், அன்று தவம் புரிவார்கள்.

ADVERTISEMENT

இப்போது பௌர்ணமி பற்றி நிச்சயம் உங்கள் கண்ணோட்டம் மாறியிருக்கும் என்று நம்புகிறோம்! வரப்போகும் பௌர்ணமியை சிறப்பாக வழிபட்டு உங்களுக்கான நல்ல நேர்மறை சக்திகளை சேகரித்து மகிழுங்கள்!

மேலும் படிக்க – தெய்வ தரிசனம் : தமிழகத்தின் சிறப்பு மிக்க நவகிரக கோயில்களை வலம் வருவோம்!

பட ஆதாரம்  – Pinterest

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

ADVERTISEMENT
09 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT