அமோர் (Amour – Love!)
பாரிஸ்! என்றாலே எங்கிருந்து ஆரம்பிக்க என்று எனக்கு புரியவில்லை. ஏனெனில் இந்த ‘சிட்டி ஆப் லவ் ” எனும் பாரிஸில் அவ்வளவு அழகிய விஷயங்கள் இருக்கிறது -பார்க்க மற்றும் பகிர. இந்த ஐரோப்பிய நகரம் ஃபேஷன், கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களிற்கான உலகளவில் ஒரு பெரிய மையம். மேலும், காஸ்ட்ரோநாமி (சிறந்ந்த சமையல் மற்றும் உண்ணும் விதம் ) கலைக்கு புகழ்ப்பெற்ற நகரம் பாரிஸ் ஆகும் !
இங்கு பல்லாயிரம் விஷயங்களை நாம் பார்க்கலாம் என்றாலும், நான் உங்களுக்கு மிக முக்கியமான 5 விஷயங்களை கூற உள்ளேன்.
ஈபிள் கோபுரம் (Eiffel Tower) –
‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசயம் … ‘ எனும் ஜீன்ஸ் பட பாட்டில் 7 அதிசயங்களில் இதுவும் ஒன்றாக பார்த்திருப்பீர் ( எனக்கு மிகவும் பிடித்த படம்!). இந்த ஈபிள் டவர் உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் வீழ்த்தி விடும். உலக அளவில் மிகவும் அதிகமாக பார்வையிடப்பட்ட ஒரு புகழ்வாய்ந்த நினைவுச்சின்னமான ஈபிள் டவரை இதை கட்டிய என்ஜினீயர் கஸ்டாவ் எபிலின் பெயரில் வைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட லிஃட்டில் தான் செல்ல வேண்டும். இதில் இருக்கும் மேல் மாடியில் இருந்து பார்த்தால் , ஆஹா!!! பாரிஸ் (paris) நகரம் அதன் கட்டிடக்கலையுடன் மிக அழகாய் காட்சி அளிக்கும்.அமோர் (Love) !!
இங்கு நான் சென்றிருந்தபோது, அங்கு உள்ள சுற்றுலா பயணிகள் இந்த கோபுரத்தை முழுமையாக படம் பிடிக்க வெவேறு கோணங்களில் முயற்சித்ததுதான் எனக்கு ஞாபகம் வருகிறது! உண்மையில், அது ஒரு சிறப்புமிக்க கிளிக் தான்.
க்ரொசான் (crossaint) –
க்ரொசான் எனும் இந்த பிறை வடிவம் கொண்ட ரோல் ஒரு இனிப்பு வகை ஆகும்! அதை பெரும்பாலும் பாரிஸியன்ஸ் (Parisians) காலையில் சேர்க்கும் ஒரு உணவாகும்.எனக்கும் இது மிக பிடித்த ஒரு உணவு! இதை வாயில் வைத்தால் அது அப்டியே உருகிக்கொண்டபடி உள்ளே போய்விடும். இதன் ருசியோ அலாதி ! இதை நீங்களும் ருசித்து பார்க்க வேண்டிய ஒன்று.இந்த அழகிய நகரத்தை இன்னும் அதிகமாக காதலிக்க வைக்கும் இந்த க்ரொசான்!
இலூவா அருங்காட்சியகம் (Louvre Museum) –
உங்களை கலை, ஓவியம் மற்றும் வரலாற்று மிக்க கதைகள் கவர்ந்து விடும் என்றால், இந்த மியூசியம் உங்களுக்கு ஏற்ற ஒன்று ! உலக புகழ் பெற்ற லியோனார்டோ டா வின்சியின் ‘மோனா லிசா ‘ (Mona Lisa) எனும் ஓவியமும் இங்குதான் உள்ளது! இது உலகிலயே மிக பெரிய கலை அருங்காட்சியகம் மற்றும் ஒரு நினைவுச்சின்னம் ஆகும். இதில், பல்வேறு கதைகள், ஓவியங்கள் இருக்கின்றது. இதை சுற்றி பார்க்க நிச்சயம் ஒரு நாள் போதாது!
ஷாப்பிங் –
நாம் உண்ணும் உணவைக்கூட மறந்துவிடுவோம் … ஆனால் ஷாப்பிங்கை மறந்துவிடுவோமா என்ன? அதிலும் நல்ல தரத்திற்கு பெயரும் புகழும் வாங்கிய நகரமான பாரிஸில் இருக்கும்போது நிச்சயம் மனதிற்கு பிடித்ததை வாங்குவது அவசியம். வாசனை திரவியங்கள் தான் எனக்கு இங்கு மிகவும் பிடித்ததில் ஒன்று ! மேலும், ட்ரெண்ட், பேஷன்நிற்கு புகழ்வாய்ந்த நகரம் ஆன பாரிஸில் உங்களுக்கு பிடித்த அனைத்தும் வாங்க பாட் (PAD), களறியா விவெண் (Galerie vivienne) எனும் ஷாப்பிங் மால்களிற்கு செல்லுங்கள்.சாம்ஸ் எலிசே (Champs-Elysées) எனும் ஆடம்பர ஷாப்பிங் வீதியில் அணைத்து பிராண்டட் கடைகளையும் (லூயி விட்டோம் , ஷனல் ) பார்க்கலாம். வாங்கலாம்!
ஸ்ட்ரீட் வாக் –
நீங்கள் பாரிஸில் இருக்கும்போது, அங்குள்ள தெருக்களில் உலா வருவதே சிறப்பான ஒரு விஷயம். ஏன் என்றால்… இதில் இருக்கும் அழகிய வடிவம் கொண்ட கட்டிடங்கள், ஒரே கோட்டில் இருக்கும் கட்டிடங்கள், கலை நயத்துடன் இருக்கும் கடைகள், சாலை ஓரத்தில் இருக்கும் சிறு கஃபேகல் (cafe) , ஐஸ் கிரீம் பார்லர்கள் இவை அனைத்தும் காதல் காற்றை வீசுவது போல் இருக்கும்!
மேலும் படிக்க – நீண்ட பயணத்திற்கு பிறகு புத்துணர்ச்சியுடன் தோன்றுவது எப்படி?
பாரிஸில் பார்க்க நிறைய விஷயங்கள் இருந்தாலும், மேல் இருக்கும் ஐந்தை மறக்காதீர். நீங்கள் தனியாக சென்றாலும் சரி அல்லது உங்களின் அன்பார்ந்தவருடன் சென்றாலும் சரி, இந்த நகரம் என் மனதை கொள்ளை கொண்டது போல், உங்கள் மனதையும் வெல்லக் காத்துக்கொண்டிருக்கிறது!
நீங்கள் யாருடன் செல்ல ஆசை படுகிறீர் என்று எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பாரிஸில் இருந்து திரும்பிய பிறகு எனக்கு ‘மெற்சி போகொப் ‘ என்று கூறுங்கள்!
பட ஆதாரம் – instagram,pexels,pixabay,canva
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.