ஆல்பபெட்ஸ் கற்று கொடுக்கும் ஸிவா.. அட்டகாசமாக கற்று கொள்ளும் ரிஷப் பண்ட் .. தோனியின் வைரல் வீடியோ !

ஆல்பபெட்ஸ் கற்று கொடுக்கும் ஸிவா.. அட்டகாசமாக கற்று கொள்ளும் ரிஷப் பண்ட் .. தோனியின் வைரல் வீடியோ !

தோற்றாலும் ஜெயித்தாலும் தோனி எப்போதும் டாப் தான். வெற்றி தோல்விகள் பற்றிய கவலைகள் எல்லாம் எங்களுக்கு இல்லை எங்கள் ஆசையெல்லாம் தோனியை மேட்சில் பார்ப்பது மட்டுமே என்பது தோனி ரசிகர்களின் தாரக மந்திரம்.


மும்பைக்கு எதிரான மேட்சில் இரண்டு ரன்னில் சிஎஸ்கே தோற்றாலும் எப்போதும் எப்போதும் எல்லோருடைய இதயங்களையும் சிஎஸ்கே ஜெயித்திருக்கிறது. உடல் நலம் இல்லாத போதும் விளையாடி வென்ற தோனியின் ஸ்டம்பிங் , ஓடியே ஓடியே சாதனை புரிந்த இம்ரான் தாஹிர் ஆடி விக்கெட் எடுக்கும் பிராவோ என பலவிதமான கலவைகளில் சிஎஸ்கே வீரர்கள் அவர்களின் ரசிகர்களை பலவிதமாக சந்தோஷப்படுத்தினார்கள். வாட்சனின் ஸ்டைல் இந்த மேட்ச்சிற்கு புதியது.


ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்சிஎஸ்கே விளையாடிய ஒவ்வொரு மேட்சிலும் தோனிக்கும் மற்ற வீரர்களுக்கும் ரசிகர்கள் உருவானதை போலவே தோனியின் மகள் ஸிவா (ziva) விற்கும் ரசிகர்கள் உருவானார்கள். நான்கு வயதாகும் ஸிவா எது செய்தாலும் அழகு பொங்குகிறது. ஆகவே அவரது செயல்கள் வீடியோ ஆக்கப்பட்டு அது வைரல் விடுகின்றது.


பெரும்பாலான விடியோக்கள் தோனி மனைவி சாக்ஷி மூலமாக இணையத்தில் வெளிவருகிறது. ஒரு சில விடீயோக்களை மீடியாக்கள் வெளியிட்டு வைரலாக்குகின்றன. ஸிவா கற்று கொடுக்கும் இந்த வீடியோ தோனி மூலம் வெளியாகி இருப்பதால் வைரல் அதிகமாகி இருக்கிறது.


திருமணம் செய்வதற்கு பணம் இல்லை..வாடகை தாய் மூலம் தந்தை.. ஸ்மார்ட் மூவ் செய்யும் சல்மான் கான்!கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு தோனி மகள் உயிர் எழுத்துக்களை சொல்லி கொடுக்கிறார். அவரது மழலை குரலில் அவர் சொல்லி கொடுக்கும் பாங்கும் அதற்கும் ரிஷபின் எதிர்வினைகளும் அட்டகாசமாக இருக்கின்றன.


அ எனும் போது ரிஷபிற்கு புரிய வேண்டுமே என்பதற்காக கைகளை குறுக்கி குவித்து காட்டியும் ஆ எனும்போது கைகளை அகலமாக்கி விரித்து காட்டியும் அழகாக ஆல்பபெட்ஸ் சொல்லி கொடுக்கிறார் ஸிவா.


நெஞ்சை கவர்ந்த நெஞ்சம் மறப்பதில்லை அமித் பார்கவ் .. அக்ஷய த்ரிதியை அன்று அப்பாவாகியிருக்கிறார் !
 

 

 


View this post on Instagram


 

 

Back to Basics !


A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni) on
விளையாடிக் கொண்டே கற்று கொடுக்கும் ஸிவா திடீரென சில வார்த்தைகளை மறந்து விட்டதாக அதனையும் சொல்லி கொடுக்கிறார். ரிஷப் தனது புது குட்டி டீச்சருக்கு தேங்க்ஸ் சொல்கிறார்.


அழகியலோடு இதனை படம் பிடித்திருப்பவர் நம்ம மஹி எனும் தோனியே தான்! தேங்க்ஸ் பாஸ் ! நாங்க சந்தோஷமா என்ஜாய் பண்ணோம்.


செல்லுலாயிட் பெண்களின் ஸ்லிம் ரகசியங்கள்!புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்               


எல்லாம் தெரிந்துதான் சினிமாவில் இருக்கிறேன்.. மற்றவர்களுக்கு எது பிரச்னையோ எனக்கு அது கிக்.. கீர்த்தி சுரேஷின் வெற்றி பார்முலா !               


---                                                                                                                         


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.