தந்தையின் வெற்றியை தமிழ்ப் பாடலால் கொண்டாடிய ஸிவா ! CSK vs RR!

தந்தையின் வெற்றியை தமிழ்ப் பாடலால் கொண்டாடிய ஸிவா ! CSK vs RR!

ஞாயிறு அன்று IPL 2019 விளையாட்டில் CSK மற்றும் RR நேருக்கு நேர் சந்தித்தது. விறுவிறுப்பான ஆட்டம் சளைக்காத போட்டியாளர்கள் என சிதம்பரம் ஸ்டேடியம் நேற்று கொண்டாட்டத்தில் இருந்தது.


CSK என்றாலே மஹி என்று செல்லமாக அழைக்கப்படும் மஹிந்தர் சிங் தோனி தான் பெரிதாக பேசப்படுவார். அவரை பற்றி கூறும்போதெல்லாம் அவரோடு எல்லா மேட்ச்களிலும் கலந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்தும் அவரது மனைவி சாக்க்ஷி மற்றும் அவரது மகள் ஸிவா ஆகிய இருவரையும் பற்றி பேசியாக வேண்டிய கட்டாயம் வரும்.


நேற்று சிதம்பரம் ஸ்டேடியத்தை மஹி எடுத்துக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். அடுத்தடுத்து CSK விக்கெட்கள் வீழ்ந்த போதிலும் முதலில் களமிறங்கிய தோனி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து 46 பந்துகளை 75 ரன்கள் எடுத்தார். இதில் முக்கியமாக பேசப்படுவது அவரது சிக்ஸர்கள்.


பிரீ ஹிட்டிற்கு கொடுத்த சிக்ஸர் மற்றும் கடைசி ஓவர் கடைசி பந்துகளில் அவர் கொடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் அவரை ஆட்ட நாயகனாக மட்டுமல்லாமல் IPL நாயகனாகவே ஆக்கும் என்பதில் சந்தேகமில்லை.


மிகுந்த விடா முயற்சி மற்றும் தோனியின் மாற்று சிந்தனை மூலம் இறுதி ஓவரில் வெற்றியை பறித்தது CSK. இந்த வெற்றியை அவரது மகளான ஸிவா பெவிலியனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். நான்கு வயதான ஸிவா தனது தந்தையின் வெற்றியை பிரசித்தி பெற்ற தமிழ் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி கொண்டாடினார்.ஆடுகளம் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையில் வந்த "ஒத்த சொல்லாலே" பாடலுக்கு தான் ஸிவா அழகாக நடனம் ஆடினார். அது மட்டும் அல்லாமல் கூடவே ஹர்பஜன் சிங் மகள் ஹினாயா சிங்மற்றும் ரெய்னாவின் மகள் கிரேசியா ரெய்னா ஆகிய இருவரையும் நடனம் ஆட அழைத்துக் கொண்டிருந்தது பார்க்கவே க்யூட் ஆக இருந்தது.


 நேற்றைய மேட்சில் சாக்ஷியோடு பிரியங்கா ரெய்னா கீதா பஸ்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.


ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லியுடன் ஆடிய போது ஸிவாவின் "கோ பாபா கோ " என்று உற்சாக கூச்சலிட்ட வீடியோ வைரலாகி இருந்த நிலையில் இன்று மீண்டும் இவரது ஒத்த சொல்லாலே பாடல் மேலும் அவரை லைம் லைட்டிற்கு கொண்டு சேர்த்துள்ளது.

அந்தப் பாடலைப் போலவே தோனி எனும் ஒற்றை சொல்லால் ரசிகர்களின் உயிரைத் திருடிப் போகிறது CSK அணி !


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.