இதுக்கப்புறம் கல்யாணம் தான்.. விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் நயன்தாரா ரகசிய தீர்மானம்!

இதுக்கப்புறம் கல்யாணம் தான்.. விக்னேஷ் சிவன் பிறந்த நாளில் நயன்தாரா ரகசிய தீர்மானம்!

கோலிவுட்டின் நீண்ட கால காதல் ஜோடி யார் என பார்த்தால் அது கண்டிப்பாக நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிதான். முதலில் நயன்தாராவிடம் காதலுக்கு சம்மதம் வாங்கவே நீண்ட நாள் காத்திருந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அதன் பின்னர் அந்தக் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய நயன்தாரா கூடவே பல்வேறு கண்டிஷன்களையும் போட்டிருந்தார். முன்னாள் காதலால் ஏற்பட்ட மனவலி கூடவே அவரது பண இழப்புகள் போன்றவை நயன்தாராவை மிகவும் இறுக்கமாகவே மாற்றி இருக்கின்றன.

அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் காட்டப்படும் இறுக்கம் போலவே அவரது நிஜமும் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் தொடர்ந்து துரோகம் செய்யப்படும் பெண்கள் ஒரு கட்டத்தில் இறுகிப் பாறையாய் போவது சகஜம்தான்.

Instagram

அதன் பின்னர் விக்னேஷ் சிவனின் உறுதியான காதல் நயன்தாராவை மெல்ல மெல்ல தளர வைத்தது.வெளியாரிடம் தாங்கள் காதலிக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் ஒன்றாகவே சுற்றினார்கள். அது கோலிவுட் கிசுகிசுக்களில் முதல் இடத்தில் அவர்களை வைத்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாராவுக்கு இந்த வருட இறுதியில் திருமணம் நடக்க இருப்பதாக வதந்திகள் உருவானது. அதனை உறுதியாக்கும் விதமாக விக்னேஷ் சிவனின் அம்மாவுடன் நயன்தாரா புகைப்படம் எடுத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு புகைப்படங்கள் வெளியாகின.

தர்பார் மற்றும் பிகில் படப்பிடிப்பு முடிந்த உடன் அதிகார பூர்வமாக அறிவிப்பு ஏதாவது வெளிவரலாம் என நயன்தாரா ரசிகர்கள் காத்திருந்தனர். அறிவிப்பும் வெளியானது. அது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா அடுத்து நடிக்க இருக்கும் "நெற்றிக்கண்" பற்றிய அறிவிப்புதான்.

Instagram

இதனால் ரசிகர்கள் மீண்டும் நடிக்க போகிறாரா அப்போ கல்யாணம் எப்போ எனக் கவலையில் இருந்தனர்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னாள் விக்னேஷ் சிவன் எனும் நயன்தாராவின் செல்ல காதலர் "wiki"க்கு பிறந்த நாள் வந்தது. அந்த நாளை நயன்தாரா விக்கி என்றும் மறக்க முடியாத நாளாக மாற்றி விட வேண்டும் என்று முடிவெடுத்து பிரம்மாண்டமான முறையில் Wikiயின் பிறந்த நாளை கொண்டாடி விட்டார்.

தங்க நிறத்தில் மூன்று அடுக்கு கேக் சுற்றிலும் ரோஜாப்பூக்கள் என அசத்தி இருக்கிறார் நயன்தாரா. அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதே சமயம் அந்த பார்ட்டியின் போது நயன்தாராவின் நெருக்கமான தோழிகளும் உடன் இருந்தனர்.

Instagram

அப்போது நயன்தாரா இந்த டிசம்பருக்குள் திருமணம் முடிவாகி விடும் என்று கூறியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. அப்படிப் பார்த்தால் விக்னேஷ் சிவன் காதலராக கேக் கட் செய்யும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இந்த வருடத்துடன் முடிவடைகிறது. அடுத்த பிறந்த நாளில் அவர் நயன்தாராவின் கணவராகி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.                                                         

அதிர்ஷ்டகரமான பெண்ணை அடைவதற்காகவே பிறந்த விக்னேஷ் சிவன் என்கிற Wiki ..! உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!