பிகில் டீமிற்குத் தங்க மோதிரம் பரிசளித்து அசத்திய நடிகர் விஜய்!பெருமையில் பூரிக்கும் குழு!

பிகில் டீமிற்குத் தங்க மோதிரம் பரிசளித்து அசத்திய நடிகர் விஜய்!பெருமையில் பூரிக்கும் குழு!

முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் (vijay) தொட்டதெல்லாம் வெற்றியாகும் காலமாக இந்த காலம் இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையே இல்லை. விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் விமர்சனங்களைக் கடந்து மாபெரும் வெற்றி அடைந்தது.

அதன் பின்னர் தெறி மெர்சல் மூலம் இணைந்த அட்லீ விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக பிகில் திரைப்படம் மூலம் இணைந்தனர். இதன் படப்பிடிப்பு நேரங்களில் நடந்த பல விஷயங்கள் வைரலாகின.
விஜய் தனது ரசிகர் கூட்டத்தின் மீது வேலி விழாமல் தாங்கி பிடித்தது, விஜய் பைக்கில் சென்றது என எல்லாமும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின.

தற்போது அதில் இன்னொரு மகுடமாக பிகில் திரைப்படம் உருவாகக் காரணமாக இருந்து உழைத்த அனைத்து நபர்களுக்கும் நடிகர் விஜய் தனது மரியாதையை தெரிவிக்கும் வகையில் "பிகில்" என்று எம்பாஸ் செய்யப்பட்ட தங்க மோதிரத்தை படக்குழுவினர் அனைவருக்கும் வழங்கி இருக்கிறார்.

Youtube

விஜய்யின் திரை வரலாற்றில் இது முக்கியமான செய்தியாக பார்க்கப்படுகிறது. இதனைப் பற்றி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மிகப் பெருமையுடன் ட்வீட் செய்திருக்கிறார். பிகில் திரைப்படத்திற்காக ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் உழைத்த குழுவினர் அனைவரின் உழைப்பையும் விஜய் மதித்து அவர்களை பாராட்டும் பொருட்டி அனைவருக்கும் தங்க மோதிரம் பரிசளித்திருப்பதாக தனது ட்வீட்டில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  

இது குழுவினர் அனைவரின் மனதையும் பாசிட்டிவ் அதிர்வுகளால் தொடுகிறது. எங்கள் தளபதி தான் பெஸ்ட் என்று தனது ட்வீட்டில் அவர் கூறியிருக்கிறார். உடன் நடித்தவர்களில் ஒருவரான வர்ஷா பொலம்மா தளபதி இடம் இருந்து விலை மதிப்பு மிக்க பரிசைப் பெற்ற போது உலகின் சிறந்த பரிசு இதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்.                           

தற்போது பிகில் திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. படத்திற்கு நெருக்கமானவர்களின் கூற்றுப் படி திரைப்படம் 10 நாட்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெகு விரைவில் எடிட்டிங் வேலைகள் முடிக்கப்பட்டு பாடல்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.                       

எப்போதும் விஜய் சைலன்ட் ஆனவர் என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னை நோக்கி வீசப்படும் முட்களை ரோஜாக்களாக்கி கொள்வதில் அவர் தேர்ந்தவர். தற்போது சைலண்டாக அவர் குழுவினருக்கு செய்த பதில் மரியாதை மீடியாவில் வைரலாக மாறி வருகிறது.                              

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                              

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.