எதிர்பாராமல் விழுந்த வேலி - துரிதமாக செயல்பட்டு ரசிகர்களை காப்பாற்றிய விஜய்! வைரலாகும் வீடியோ !

எதிர்பாராமல் விழுந்த வேலி - துரிதமாக செயல்பட்டு ரசிகர்களை காப்பாற்றிய விஜய்! வைரலாகும் வீடியோ !

நடிகர் விஜய் தான் திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோதான் என்பதை நிரூபிக்கும்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.அதில் நடிகர் விஜய்யின் அக்கறையை கண்ட ரசிகர்கள் இணையம் முழுவதும் அந்த சம்பவத்தை வலம் வர வைத்து வைரலாக்கி உள்ளனர்.


விஜய்க்கு எப்போதும் தனது ரசிகர்கள் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. எப்போது பேசினாலும் வலது கையை தன் நெஞ்சில் வைத்தபடி என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார்.


சமீபத்தில் கூட தனது காரை பின்தொடர்ந்து வேகமாக வந்த ரசிகரை காரின் கண்ணாடிகளை இறக்கி விட்டு இரு சக்கர வாகனத்தில் இவ்வளவு வேகத்தில் வந்தெல்லாம் பின் தொடர வேண்டாம் என்று அன்பு கட்டளை இட்டார். இந்த விடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இந்நிலையில் மார்ச் 13 அன்று விஜய் அட்லீ இணையும் மூன்றாவது படமான விஜய் 63 படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.


நயன்தாராவோடு விஜய் இணையும் இப்படத்தில் விஜய் 16 பெண்கள் கொண்ட விளையாட்டு அணிக்கு கோச் ஆக நடிக்கிறார். இதற்காக அவர் தனிப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.சென்னையில் இருந்து கொஞ்சம் தள்ளி உள்ள SRM கல்லூரியில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது.


படப்பிடிப்பு முடிந்ததும் தனது ரசிகர்களை காண விஜய் வருகையில் ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். கூட்டத்தில் திடீர் நெரிசலால் தடுப்பு உடைந்து விழ ஆரம்பித்தது. இதனை கவனித்த விஜய் அத்தனை கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தடுப்பு மேலும் விழாமல் தாங்கி பிடித்தார்.உடன் இருந்தவர்களும் பிடிக்க பெரிய நெரிசலில் ஏற்படக்கூடிய விபத்து ஒன்று உடனடியாக தவிர்க்கப்பட்டது. எப்போதும் தன் ரசிகர்களின் மீதான அக்கறையை தெரிவிக்கும் விஜய் இந்த சம்பவத்தில் செயலில் அதனைக் காட்டியது அவரது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.


அதன் பின்னர் காரில் ஏறிய விஜய் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.


மீண்டும் இன்று அதே இடத்தில் தனது ரசிகர்களை சந்தித்து தன் அன்பை உறுதி செய்திருக்கிறார் விஜய்.


எப்போதும் தன்னை நேசிக்கும் இதயத்திற்கு பதில் மரியாதை செய்யும் விஜய்க்கு ரசிகர்களாக இருப்பது மிகவும் பெருமையான விஷயம்தான் என்று இந்த நிகழ்வை வலைத்தளத்தில் கொண்டாடி மகிழ்கின்றனர் இளைஞர்கள்.


vijay %281%29


   


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்                                                       


----


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.