வாணி போஜனுக்கு அடித்த அதிஷ்டம் : பிரபல நடிகர் படத்தில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வாணி போஜனுக்கு அடித்த அதிஷ்டம் : பிரபல நடிகர் படத்தில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தெய்வமகள் வாணி போஜனுக்கு மிக பெரிய ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியாக உள்ளனர். இன்றைய தமிழ் சினிமாவில் நடித்து வரும் பல நடிகைகள் எல்லாம் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும்,விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். 

அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைக்கிறார் வாணி போஜன் (vani). நீலகிரி மாவட்டத்தை சார்ந்த வாணி போஜன் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்ஸில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து வந்துள்ளார். 

இதன் மூலமாக சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் நடிகை வாணி போஜன் முதலில் மாயா என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார்.

twitter

சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த “தெய்வமகள்” சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். 

இதனை தொடர்ந்து எந்தவொரு சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார். இதனையடுத்து நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டானார். 

மேலும் படிக்க - உடை எடையை குறைத்து அழகான நடிகை நமீதா : புடவையில் பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இந்த வாய்ப்பை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நாயகியாக கமிட்டானார். மேலும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

twitter

இந்த வெப் சீரிஸில் நடிகர் பரத் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனிடையே அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில்  ‘ஓ மை கடவுளே’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் சீரியலில் நடித்து புகழ் பெற்ற வாணி போஜன் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் தொலைக்காட்சியில் இருந்து சிவகார்த்திகேயன், பிரியா பவானி ஷங்கர் போல் இவரும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என அவரது ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க - லாஸ்லியாவின் அப்பாவுடன் சம்பந்தம் பேச தயார்.. வைரலாகும் பிரபலத்தின் ட்வீட் !

twitter

தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருவதையொட்டி வாணி போஜன் (vani) மகிழ்ச்சியாக இருக்கிறார். மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார். சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகை வாணி போஜன் விருந்தினராக வருகை தந்திருக்கிறார்.

மிக அழகான உடையில் வந்திருந்த வாணி போஜன் தேவதை போல இருந்ததாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஏற்கனவே சீரியலில் இருந்து வெள்ளித்திரை வந்து செம்ம ஹிட் அடித்த நடிகைகள் போல வாணி போஜனும் (vani) ஜொலிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க - அம்பிகாவிற்கு இத்தனை அழகான மகனா! அவர் லிவிங்ஸ்டன் மகளுடன் என்ன செய்கிறார் ?!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!