ராணாவிடம் கெத்து காட்டிய சாய்பல்லவி.. படப்பிடிப்பில் மயங்கி விழுந்த த்ரிஷா?

ராணாவிடம் கெத்து காட்டிய சாய்பல்லவி.. படப்பிடிப்பில் மயங்கி விழுந்த த்ரிஷா?

சாய் பல்லவி காட்டில் தற்போது பெருமழை பெய்வதால் அவர் சந்தோஷமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கெத்து காட்டியும் வருகிறார் என்கிறது தகவல்கள்.


சமீபத்தில் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமானார் சாய்பல்லவி. வேணு உருகுடா இயக்கத்தில் வெளியாகும் இப்படம் விரத பர்வதம் 1992 என பெயரிடப்பட்டிருக்கிறது. உடன் நடிக்கும் ராணா படப்பிடிப்புக்கு வராமல் இருந்ததால் சாய்பல்லவியின் தேதிகள் விரயமாகியிருக்கின்றனர்.


க்ரஷ்ஷால் தொடங்கிய நட்பு.. கஜோல் பற்றி கரண் ஜோகர்இதனால் கடுப்பான சாய் பல்லவி படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதை சொல்லாவிட்டால் படத்தை விட்டு விலக போவதாக இயக்குனர் மற்றும் ராணா இருவரிடமும் தெரிவித்திருக்கிறார்.சாய்பல்லவியின் இந்த கண்டிஷனிற்கு பின்னர் வரும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.


தனுஷுடன் மாரி திரைப்படத்தில் நடித்த சாய்பல்லவி ஐடியல் கமர்சியல் நடிகை ஆகி விட்டார். உச்ச நடிகர்களோடு நடிக்க தயாராகி வருகிறார். கூடவே வாய்ப்புகளுக்காக நான் யாரையும் சென்று கேட்க போவதில்லை. திறமைக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்துவேன். வராவிட்டால் இருக்கவே இருக்கிறது மருத்துவ துறை என்று கெத்து காட்டுகிறார் சாய்பல்லவி.


கத்ரீனாவிற்காக கால் கடுக்க காத்திருந்த விஜய்.. காலம் கடந்து நெகிழும் நடிகை..தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக ஒரே நிலையில் பிடிவாதமாக இருந்து வருபவர் த்ரிஷா. தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து கொண்ட த்ரிஷாவிற்கு 96 திரைப்படம் நல்லதொரு வெற்றியை தேடி தந்தது.


இந்நிலையில் எங்கேயும் எப்போதும் திரைப்பட இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ராங்கி எனும் திரைப்படத்தில் நடிக்கிறாராம். கதாநாயகியை முக்கியமாக கொண்ட கதை என்பதால் ஒப்பு கொண்ட திரிஷா இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடுவே மயங்கி விழுந்ததாக கூறுகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் இணையதளத்தில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.த்ரிஷாவின் அம்மா இதனை மறுத்து அவர் ராங்கி படப்பிடிப்பில் இரவுபகலாக கலந்து கொள்கிறார் என்றும் அவர் ஆரோக்கியமாகவே இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் gossips         


ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடும் NGK ட்ரைய்லர் !


---                                                            


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                        


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.