பிரில் ஸ்டோரி : சமந்தாவின் பிரில் சாறி மற்றும் திகைப்பூட்டும் ஒப்பனை சமூக வலைத்தளங்களில் அனலை பரப்புகிறது !!

பிரில் ஸ்டோரி : சமந்தாவின் பிரில் சாறி மற்றும் திகைப்பூட்டும் ஒப்பனை சமூக வலைத்தளங்களில் அனலை பரப்புகிறது !!

சேலையில் - சாதாரண மடிப்பு, பாவாடை தாவணி ஸ்டைல்,முழங்கால் நீள ஜாக்கெட் உடன் சேலை அல்லது ஜீன்ஸ் உடன் சேலை என்று பல்வேறு ரகங்கள் சேலையில் உள்ளது. இதில் பிரில் சாறி(frill) இனொரு சிறப்புமிக்க வகை !ஏனெனில் இது ஒரு இளமையான தோற்றத்தை அளிக்கும் மில்லேனியல் சேலை (millenial) என்று கூறலாம் !!


இதை சமந்தா மிக அட்டகாசமாக தனது சமீபத்திய போட்டோ ஷூட்டில் அணிந்திருக்கிறார். அவரின் இந்த பழுப்பு நிற சேலையை வடிவமைப்பாளர் மற்றும் முன்னாள் மிஸஸ்.இந்தியா ஷில்பா ரெட்டி வடிவமைத்திருக்கிறார். இது பிரில் சேலையின்  மீது காதல் கொள்ள வைக்கும் அளவிற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. நான் நிச்சயம்  அடுத்து ஒரு பிரில் சேலையை தான் வாங்குவேன் !


இதில் நாம் கவனிக்க வேண்டியது -


20190226 130630


படம்


  1. வித்யாசமான அணிகலன் - இதுபோன்ற ஒரு ஆடையில் சமந்தா நம்மை கொஞ்சம் மாற்றி யோசிக்க சொல்லும் அளவிற்கு அணிந்திருக்கிறார் இந்த பல்வேறு நிறங்கள் கொண்ட ஒரு அழகிய சோக்கரை. இதற்கு நீங்கள் ஒக்ஸிடைஸ்ட் கழுத்தணிகளையும் முயற்சிக்கலாம்

  2. ஆடையில் - ப்ரோகேட் பிளவுஸ் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதில் ஸ்ட்ராப்லெஸ் ஒன்றை அணிந்து இந்த பிரில் சேலைக்கு ஒரு ஈர்க்கவைக்கும் தோற்றத்தை அளித்திருக்கிறார் இந்த மெர்சல் படத்தின் கதாநாயகி .

  3. ஒப்பனையில் - அடர் அழகிய புருவங்களுடன் அதே பழுப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் மிதமான ப்ளஷ் இந்த தோற்றத்தை முற்றிலும் நிறைவு செய்திருக்கிறது.


இந்த யூ -டேர்ன் படத்தின் கதாநாயகியின் பேஷன் எப்போதுமே பூரணமான தோற்றத்தில் ட்ரெண்டிற்கு (trend) ஏற்ப இருக்கும் என்றதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரின் இன்ஸ்டாகிராம் பக்கங்களே அதற்க்கு சாட்சி !! படங்களில், இவர் விஜய் சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ்' எனும் படத்தில் நடித்து மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது . இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது !


சமந்தாவின் பிரில் சாறி தோற்றத்தை நீங்களும் முயற்சி செய்ய மஜெந்தா வுமன் ராஃபிள் சாறி உடன் சில்வர் டோன்ட் டெம்பிள் நெக்லஸ் அல்லது கோல்ட் டோன்ட் சொக்கர் அணிந்தால் மிக அற்புதமாக இருக்கும். 


frill styleஇதுபோல் பிரில் ஆடையில் சேலையில் மட்டும்தான் அணிய முடியும் என்று கிடையாது. கற்பனைக்கு அளவே இல்லை என்றதுபோல் ஆடை வடிவமைப்பிலும் வானம் தான் எல்லை ! நாங்கள் ரசித்த மற்ற சில பிரபலங்கள் அணிந்திருந்த பிரில் ஆடைகள்...இதோ !


அமலா பாலின் பிரில் கொண்ட கிராப் டாப் உங்கள் கோடைகாலத்திற்கு ஏற்ற ஒன்று. பிரில்ஸ் இளமையான தோற்றத்துடன் ஒரு கூல் கேர்ள் எனும் ஆளுமையை முன்வைக்கும்.


 amalapaul BuISttNn60b


படம்


தமன்னாவின் ட்ரெஸ்ஸில் பிரில்ஸ், கோடையில் நீங்கள் அணிய இனொரு ஆடை வடிவமைப்பு!


20190226 130455


படம்


கபாலி பட கதானாயகி ராதிகாவின் முழங்கால் நீள டிரஸ்சும் உங்களுக்கு நிச்சயம் பிரில் வைப்சை (frill vibes) அளிக்கும்.


20190226 130229


படம்


பிளவுஸில் பிரில்ஸை மறக்கலாமா?  அதை நினைவூட்டுகிறார் கீர்த்தி சுரேஷ் இந்த சாறி(saree) மற்றும் பிளவுஸ் காம்பினேஷனில் .


20190226 130511


படம்


உங்கள் பிரில் ஸ்டோரிக்கு ஏற்ற ஆடைகளை நாங்கள் அளித்திருக்கிறோம் என்று நம்புகிறோம்.இனி என் ஸ்டைல் பிரில் ஸ்டைல் என்று கொண்டாடுங்கள் !! 


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.