30 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகைகள்

30 வயதை தாண்டியும் திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகைகள்

தமிழ் சினிமாவில் 30 வயதையும்(30 years) தாண்டி மிகப்பெரிய நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு சிம்மாசம் அமைத்து அமர்ந்திருக்கும் நடிகைகளை பற்றி தான் இக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம். இவர்கள் யாருக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகள் என்றாலே 26 வயது தான். அதற்கு மேல் சென்று விட்டால் இளமை இல்லை ரசிகர் பட்டாளம் வெகுவாக குறையத்தொடங்கும் என இயக்குநர்கள் தயங்குவார்கள். ஆனால் இவர்களின் கால் ஷீட்டிற்கு காத்துகிடக்கின்றனர் என்று சொன்னாள் நம்ப முடியவில்லை.


இன்று தமிழ் மக்கள் மட்டுமின்றி கனடா, தெலுங்கு என அனைத்து மொழி சார்ந்த படங்களிலும் நடிக்கின்றனர். அங்கேயும் தனக்கென தனி முத்திரையை படைத்து வருகின்றனர்.


பொதுவாக 30 வயதை(30 years) தாண்டி விட்டாலே நடிகைகள் வாய்ப்பு தேடி இயக்குநர் வீ்ட்டு வாசலில் காத்துகிடப்பார்கள். பெரும்பாலும் அண்ணி, அக்கா, அம்மா, போன்ற குணசித்திர கதாபாத்திரங்கள் தான் கிடைக்கும். ஆனால் இன்று இவர்கள் கதாநாயகியாக நடித்து கொண்டிருப்பது கூடுதல் திறமையே. அதற்காக அவர்கள் உழைத்த உழைப்பு தான் காரணம் என சொல்லலாம். சரி நாங்கள் இப்படி புகழ்ந்து வரும் நடிகைகள் யார் என உங்களுக்கு சொல்லவே இல்லையே. நீங்கள் யோசிப்பது சரி தான்


1.   த்ரிஷா


2.   நயன்தாரா


3.   வரலெட்சுமி


4.   தமன்னா


1.   த்ரிஷா
1999ம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். படத்தில் ஏதோ ஒரு மூலையில் கூட்டத்தோடு கூட்டமாக தனது முத்திரை பதித்தார். அதன் பிறகு வெளிவந்த மௌம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரகிகர்களையும் தன் பக்கம் கட்டிவைத்தவர் இன்று விடாமல் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். 30 வயதை(30 years) தாண்டி கடந்த 20 ஆண்டுகளில் கதாநாயகியாக மட்டுமே வலம் வருகின்றார் என்பது கூடுதல் தகவல்


2.   நயன்தாரா
ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்குவதில் இவர் இணையானவர். லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் பாராட்டப்படுவர். இவரது கால் ஷீட்டை புக் செய்த பிறகு தான் ஹீரோவை புக் செய்கிறார்கள் தற்போது. பெண்கள் என்றால் மரத்தை சுற்றி பாட்டுப்பாட ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ண வேண்டும் என்கிற டிரெண்டையே மாற்றியவர் என்று கூறலாம். முன்னணி ஹீரோ படத்திற்கு எப்படி தனி ரசிகர்கள் இருக்கிறார்ளோ அதே போன்று இவரது படித்திற்கு முதல் நாள் ஓபனிங்கிள் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வசூலிலும் இவரது படம் சாதணை படைத்து வருகின்றது. தியேட்டர் பிரச்சணைகள் கிடையாது. இவரது படம் என்றால் உடனடியாக தியேட்டர்கள் கிடைத்துவிடும். போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்கிறது நாளே தியேட்டர்கள் விநியோகஸ்தர்கள் நயன்தாரா படத்தை வாங்க முன்வருகின்றனர். 2003ல் தனது பயணத்தை தொடங்கிய இவர் தனது கடின உழைப்பால் 30 வயதை(30 years) தாண்டியும் 16 வருடங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகின்றார்.


3.   வரலெட்சுமி
சரத்குமாரின் மகளாக இருந்தாலும் தனது தாயை அதிகமாக முன்நிறுத்துவதில் முனைப்பு காட்டியவர். வாரிசின் மகள் என்பதை இது வரை அவர் பயன்படுத்தியதே இல்லை. மிகவும் துடிப்புடன் நடிக்கக்கக்கூடியவர். சமீபத்தில் நெகட்டிவ் ரோல்கள் அநேகம் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். கடின உழைப்பால் முன்னேறியவர். தனது வயதை குறித்தோ தோற்றத்தை குறித்தோ யாரும் விமர்சிப்பதை கண்டுக்கொள்ளாத நடிகை என்றே கூறலாம். நடிப்பை தாண்டி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு அதிகமாக குரல் கொடுப்பவர். மீடூ அனைவரும் எதிர்த்த போதும் தைரியமாக முன் வந்து ஆதரவு கொடுத்தவர். இவர். 2012ல் தமிழ் படத்தில் அறிமுகமானர் 30 வயதை(30 years) தாண்டி 7 வருடமாக தமிழ் சினிவாவில் நட்சத்தரமாக திகழ்ந்து வருகின்றார்.


4.   தமன்னா
2005ம் ஆண்டு சினிமா துறைக்கு அறிமுகமான இவர் பல்வேறு ஏற்ற இரக்கங்களை சந்தித்த போதிலும் இன்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார். 30 வயதை(30 years) தொட்டாலும் தனது கடினமாக உடற்பயிற்சி மற்றும் யோகா காரணமாக இன்றும் தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றார். அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடனும் தனது நடிப்புத் திறமையால் நடித்து உள்ளார். அனைத்து மொழி சார்ந்த படங்களிலும் நடித்திருக்கின்றார்.


தமிழ் சினிமாவில் மிகவும் கலரான நடிகை என்ற பெயரும் இவருக்கு உண்டு. பல்வேறு கிசுகிசுக்களையும் தாண்டி இன்றும் வெற்றி நடை போட்டு வருகின்றார்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo