logo
ADVERTISEMENT
home / Health
கோடைக்காலத்தில் வெயிலிலிருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி?

கோடைக்காலத்தில் வெயிலிலிருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி?

கோடைக்காலம் உச்சத்தை அடைந்திருக்கிறது. எப்போதும் இல்லாத வெயில்(Summer) தமிழ்நாட்டை வாட்டி வதைக்கத் தொடங்கியிருக்கிறது. ஃபானி புயல் வேறு ஈரப்பதத்தை உறிஞ்சிச் சென்றுவிட்டது. இந்த வெயிலிலிருந்து(Summer) தப்பித்துக்கொள்ள நாம் படாதபாடுபடுகிறோம். வெளியே வெப்பம் குறைந்தாலும் வீட்டுக்குள் வெப்பம் குறைவதில்லை. பகலில் அடித்த வெயில்(Summer) இரவில் வீட்டுக்குள் வெப்பமாகக் கனன்று கொண்டிருக்கிறது. இந்த வெப்பத்தின் தாக்குதலில் இருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி எனப் பார்ப்போம்.

மேல் கூரைக்கு வெள்ளை
வீட்டின் மேற்கூரையிலிருந்துதான் வீட்டுக்குள் வெப்பம் இறங்கும். அதனால் வீட்டின் மேற்கூரையில் படும் வெயிலைக்(Summer) குறைக்க இப்போது டைல்ஸ் பதிக்கும் பழக்கம் இருக்கிறது. வெள்ளை நிறத்திலான டைல்ஸ் வீட்டுக்குள் கடத்தப்படும் வெப்பத்தின் அளவைக் குறைக்கிறது. டைல்ஸ் போல மேல் கூரைத் தளத்தில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கும் வழக்கம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தைக் கடத்தும் தன்மை அற்றது. அதனால் வீட்டுக்குள் வெப்பம் கடத்தப்படுவது குறையும்.
summer house003

மார்பகத்தை அழகாக வைக்க உதவும் சில ரகசிய டிப்ஸ்!

மாடித் தோட்டம் அமைத்தல்
முன்பெல்லாம் மொட்டை மாடியின் மீது படும் வெயிலைக்(Summer) குறைப்பதற்காக தென்னை மட்டைகளை வெட்டிப் போடுவார்கள். வெயிலைத்(Summer) தென்னை மட்டை உறிஞ்சிக் கொள்வதால், வீட்டுக்குள் வெயில்(Summer) இறங்குவது குறையும்.  இது ஓரளவு பலன் தந்தாலும் அதனால் முழுப் பயன் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. இப்போது அதற்கு மாறாக மாடியில் தோட்டம் போடுவது நல்ல யோசனையாக முன்வைக்கப்படுகிறது. இதன் மூலம் வெயிலைச்(Summer) செடிகள் உறிஞ்சுக் கொள்வதால் வீட்டுக்குள் வரும் வெப்பமும் குறைகிறது. அதே நேரம் செடிகளும் வெயிலை(Summer) உட்கொண்டு வளர்கிறது. அதனால் நமக்கு இரட்டிப் பலன் கிடைக்கும்.

ADVERTISEMENT

ஜன்னல் திரைகள்
ஜன்னல் திரைகள் அடர் நிறத்தில் இருந்தால் அவற்றை மாற்றி மென்நிறத் திரைகளை இட்டுப் பாருங்கள். உங்கள் வீடு சற்றே குளிர்ச்சியானதாக மாறிவிடும். மேலும் வெற்றிவேர் திரைகளைப் பயன்படுத்தினால் வீட்டுக்குள் ஏசி வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனச் சொல்லும் அளவுக்குக் குளிர்ச்சி வரும். அந்த வெற்றிவேர் மீது லேசாகத் தண்ணீரைத் தெளித்துவிட்டால் வீட்டுக்குள் நுழையும் காற்று குளிர்ச்சி அடைந்து நல் நறுமணத்தையும் தரும். இதற்கு மாற்றாக மூங்கில் திரைகளும் நல்ல பலன் தரும் எனச் சொல்லப்படுகிறது.

முகத்தை பளபளப்பாக்கும் வைட்டமின் ஈ ஆயில் எப்படி பயன்படுத்தலாம்

தேவையற்ற மின்விளக்குகளைத் தவிர்த்தல்
கோடைக்கால(Summer)வெப்பம் போதாது என்று நாமும் வீட்டுக்குள் வெப்பத்தை உருவாக்குவோம். அதாவது தேவை இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் மின்விளக்குகளைப் பயன்படுத்துவோம். அதுபோல யாருமே இல்லாத அறையில் மின்விசிறி, மின்விளக்கு எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கும். இதன் மூலமும் வீட்டின் வெப்ப அளவு அதிகரிக்கும். டிவி, ஆடியோ சிஸ்டம் போன்ற மின்னணு சாதனங்கள் குறைந்த அளவுதான் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. என்றாலும் அதுவும் வெப்பத்தை உமிழும். அதனால் அவசியம் என்றால் மட்டும் மின் விளக்கைப் பயன்படுத்த வேண்டும். மின்சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் மின்சாரம் சிக்கனமாகும். வீட்டின் வெப்ப அளவும் குறைக்கப்படும்.

சுத்தம் அவசியம்
கோடைக்காலத்தில் கிருமித் தொற்று அதிகமாக வரும். அது வீட்டையும் நம்மையும் பாதிக்கக்கூடியது. அதனால் வீட்டை நாளுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாகக் கழிவறையைச் சுத்தம் செய்வது மிக அவசியம். அதுபோல வீட்டில் பூச்சிகள் தொல்லைகளும் அதிகமாகும். அதையும் கவனித்துச் சரிசெய்ய வேண்டும்.

ADVERTISEMENT

உள் அலங்காரச் செடிகள்
வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடி வகை கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரக் கூடியவை. இம்மாதிரிச் செடிகளை வீட்டுக்குள் வைப்பதன் மூலம் வெய்யிலில் சுற்றிவரும் நம் மனதுக்கு இதமாக இருக்கும். பால்கனியில் மணிபிளாண்ட் போன்ற கொடிகளை வளர்க்கலாம். இதனால் வீட்டுக்குள் வரும் வெப்பக் காற்றின் தன்மை குறையும் வாய்ப்புள்ளது.
கோடையில் அழுது வடியும் எண்ணெய் பசை சருமத்தை பராமரிப்பதற்கான எளிய டிப்ஸ்!

summer house004

நீர்த் திரைகள்
வீட்டுக்குள் வரும் வெப்பத்தின் அளவைக் குறைக்க ஜன்னல்களில் நீர்த் திரைகள் அமைக்கலாம். மெல்லிய திரைகளில் லேசாக நீரைத் தெளிப்பதன் மூலம் காற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடையும். அதுபோலக் காற்று உள்நுழையும் வாசலில் வாய் அகன்ற ஒரு வாளியில் தண்ணீரைப் பிடித்துவைக்கலாம். இதனால் காற்று அந்தத் தண்ணீரில் பட்டுக் குளிர்ச்சி அடைந்து வரும்.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

 

10 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT