சமூக வலைத்தள அச்சுறுத்தல்களில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி!

சமூக வலைத்தள அச்சுறுத்தல்களில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி!

சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் உருமாறியிருக்கின்றன. சமூக வலைத்தளங்களை மன அமைதிக்காக பயன்படுத்த நினைத்த இளைஞர்கள் கடைசியில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக ஆண்களைவிட பெண்கள் தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

சமூக வலைத்தளங்களில் (social media) பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான அச்சுறுத்தல் பாதுகாப்பு தான். வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் கிடைக்கின்ற கமென்ட்களும், லைக்களுக்கு பலர் அடிமையாக உள்ளனர். 

வீட்டிலேயே தலைமுடி நன்கு வளர எப்படி தைலம் செய்வது? பயனுள்ள குறிப்புகள்

ஆனால் சமூக வலைத்தளங்களில் பேசுபவர்களின் பாதிக்கும் மேற்பட்டோர் விஷமிகள் என்பதை தெரியாமலே உள்ளனர். பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், கூகுள் பிளஸ் என நீளும் சமூக வலைதளங்களின் பட்டியலில் இணைந்திருப்பதே பெருமை என்று இளம் தலைமுறையினர் பலரும் நினைக்கின்றனர்.

pixabay

தகவல் பகிரவும், தொடர்பு கொள்ளவும் பேருதவியாக இருக்கும் சமூக வலைதளங்களால் ஏற்படும் நன்மைகளைப் போலவே, தீமைகளும் ஏராளமாக இருக்கின்றன. இதை பல பெண்கள் அறிவதில்லை. பெரும்பாலானோர் தங்களின் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்கின்றனர். இவர்கள் வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. 

இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க பெண்கள் தங்களது படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது. பெண்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகளை வைத்தே அவர்களின் குணத்தை அறிந்து, அந்த புகைப்படம் மற்றும் காணொளிகளுக்கு லைக் செய்து வலைகளை வீசுகின்றனர். 

இளைய சமுதாயத்தைக் கவரும் டாட்டூக்கள்.. அழகும் ஆபத்தும்..

மேலும் அந்த பதிவிற்கான கருத்துக்களை பதிவு செய்து அவர்களிடம் பேச அல்லது அவர்களை பேச வைக்க முயல்கின்றனர். பெரும்பாலான சமூக தளங்களில் இருக்கும் புகைப்படங்களில் 69 சதவீதம் புகைப்படங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தப்படுவது தான் என சமீபத்தில் புள்ளி விவரம். 

pixabay

எனவே எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றும் முன் ஒரு கேள்வி கேளுங்கள். “இது அவசியம் பதிவேற்ற வேண்டுமா?”. அவசியம் என்றால் மட்டுமே பதிவு செய்யுங்கள், இல்லையேல் விட்டு விடுங்கள். இன்னொரு ஆபத்தான ஏரியா சேட்டிங். உரையாடுங்கள் என்ற வசீகர அழைப்புடன் எக்கச்சக்கமான செயலிகள் இப்போது உள்ளன. வாட்ஸப், மெசஞ்சர், டெலிகிராம் என ஏகப்பட்ட செயலிகள் இருக்கின்றன. 

இத்தகைய தளங்களில் உரையாடும் போதும் கவனம் அவசியம். நாம் ஒருவருக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி நேரடியாக அவரிடம் போவதில்லை. முதலில் நமது மொபைபில் பயணிக்கிறது, பிறகு நமது மொபைல் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின்னர் அடுத்த நபரின் நெட்வர்க்கில் பயணிக்கிறது, பின் அவரது மொபைபில் போகிறது, இரண்டு மொபைல்களிலும் உள்ள ஆப் வழியாக செல்கிறது.

இந்த பயணத்தின் எந்த ஒரு ஒரு இடத்தில் வேண்டுமானாலும் உங்களுடைய தகவலை சம்பந்தப்பட்ட நெட்வர்க்கோ அல்லது மொபைல் நிறுவனமோ அல்லது ஆப் நிறுவனமோ மிக எளிதாக எடுக்க முடியும் என்பதால் கவனம் தேவை. சமூக வலைத்தளங்களில் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பது வம்பை விலைக்கு வாங்குவது போல. 

pixabay

தேவையற்ற தகவல்களை இணையத்தில் கொட்டாமல் கவனமாய் இருங்கள். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை சமூக வலைத்தள பக்கங்களில் ஷேர் செய்யாதீர்கள். நமது பெற்றோர் பெயர், அட்ரஸ், மொபைல் நம்பர் போன்ற எதுவுமே இணையத்தில் இல்லாமல் இருப்பதே சிறந்தது. நமது பிறந்த ஊர், நம்முடைய வங்கி விவரங்கள் போன்ற தகவல்களெல்லாம் பல்வேறு தகவல் திருட்டுகளுக்கு பயன்படலாம் என்பதில் கவனமாய் இருங்கள்.

சமூக வலைத்தளத்தை (social media) மொபைலில் வைத்திருக்கிறீர்களெனில் மொபைலுக்கு ஒரு வலிமையான பாஸ்வேர்ட் போடுங்கள். ஆப்ஸ்களை அணுக தனி பாஸ்வேர்ட் போட்டு வைப்பதும் நல்லது. சமூக வலைத்தளங்களில் யாரேனும் தவறாய் அணுகினால் அவர்களை பிளாக் செய்யவோ, நேரடியாக திட்டிவிட்டோ விலகிக் கொள்வதோ மிகவும் முக்கியமான தேவை. 

சாகும்வரை 1 ரூபாய்க்குத்தான் இட்லி விற்பேன்..ஊருக்கெல்லாம் ஆக்கிப்போடும் கமலாத்தாள்பாட்டி!

அடுத்த நபர் என்ன நினைப்பாரோ? காயமடைவாரோ எனும் சந்தேகத்து உங்களை குழப்பி கொள்ளாதீர்கள். குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அப்படி பயன்படுத்துகிறார்களெனில் பெற்றோர் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் பிள்ளைகளை வைத்திருக்க வேண்டும். எதை செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்பதை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

pixabay

சமுக வலைதளங்களின் மூலமாக உங்கள் கணினியில் வைரஸ்கள், spyware, malware ஆகியவை பரவ வாய்ப்புண்டு. இதனால் பெண்கள் தங்கள் கணினி அல்லது லேப்டாப், மொபைல் சாதனங்களிலும் தேவையில்லாதா தகவல்கள் மற்றும் புகைப்படங்களை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். 

எந்த விதமான பிரச்சனையாக இருந்தாலும் உங்களின் பெற்றோரிடம் உடனடியாக தெரிவித்து அதற்கான தீர்வுகளை காணுங்கள். உங்களின் பெற்றோர்நடந்ததை தெளிவாக தெரிவியுங்கள். இல்லையேல் காவல் நிலையத்திலோ அல்லது மகளிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படும்  பெண்கள் பாதுகாப்பு மையத்தின் அலைபேசி 181 என்கிற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். 

சமுக வலைகளை (social media) முற்றிலுமாக அழித்து விட முடியுமா என்றால் அதுவும் முடியாது. சில நன்மைகளும் இருப்பதால் நாளுக்கு நாள் இவை பெருகிக் கொண்டே தான் போகும். கவனமான முறையில் சிந்தித்து பயன்படுத்தினால் நன்மையே!.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!