உனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி

உனக்கு someone else பிடிக்குமா I dont kno.. கொள்ளை கொள்ளும் குரலோடு மீண்டு(ம்) வந்த சுச்சி

"சுச்சி லீக்ஸ்"  (suchi leaks) இந்தப் பெயரைக் கடக்காத இணையவாசிகள் யாரும் இருக்கவே முடியாது. பிரபலங்களின் அந்தரங்க தருணங்களை பொதுவெளியில் பார்வையாக்கி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெயர். பாடகி சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் இருந்தே இந்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டு இருந்தன.

இதனால் திரையுலகமே அதிர்ச்சி ஆனது. இதனை அடுத்து சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் சுசித்ராவின் (suchithra) டிவிட்டர் கணக்கு ஹாக் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தார். பரபரப்பான பத்திரிகை உலகம் இது பற்றி மேலும் பல தகவல்களை திரட்டி கொண்டிருந்தது.

 

Youtube

இந்நிலையில் கார்த்திக் குமார் சுசித்ரா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தும் விட்டனர். அதனை தொடர்ந்து சில வருடங்கள் சுசித்ரா பற்றிய எந்த தகவலும் வெளிவரவில்லை. மிகவும் துணிச்சலான பெண்ணாக அறியப்பட்டவர் சுசித்ரா. மனதில் பட்டதை வெளிக்காட்ட அவர் தயங்கியதே இல்லை.

வானொலியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் துவங்கிய சுசித்ரா, அதன் பின்னர் தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் படங்களில் பின்னணி குரல் கொடுத்தார். அதன் பின்னர் பாடகியாக அவதாரமெடுத்த அவர் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா உள்ளிட்டோரின் இசையமைப்பில் பல ஹிட் பாடல்களையும் பாடினார். மிகவும் உற்சாகமான குரல்வளம் கொண்டவர் சுசித்ரா. இது தவிர ஜே.ஜே. மற்றும் ஆயுத எழுத்து போன்ற திரைப்படங்களில் நடித்தும் இருந்தார்.

 

Youtube

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் சுசித்ரா பற்றிய செய்திகள் வெளியானது. தன்னுடைய சகோதரி சுசித்ராவை காணவில்லை என்று அவரது சகோதரி சுஜிதா காவல்துறையில் புகார் செய்திருந்தார். அதனை அடுத்து சுசித்ரா தான் காணாமல் போகவில்லை என்றும் சுஜிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய குடும்பத்தார் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவரை போல நடத்துவதாகவும் அது தனக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் அதனாலேயே விலகி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதே சமயம் தன்னுடைய பாடல் ஒன்றை கூடிய விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சுச்சி குக் எனும் சேனலை விரைவில் தொடங்க இருப்பதாக கூறிய சுசித்ரா
Suchislife என்கிற பெயருடன் ஐ டோன் நோ எனும் பாடலை பாடகர் ரஞ்சித் உடன் பாடி youtube மூலம் வெளியிட்டிருக்கிறார். அற்புதமாக வந்திருக்கிறது அந்த ஆல்பம். வெளியான சில நாட்களில் மூன்று லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறது.

Youtube

சுச்சி என்றாலே ட்ரெண்டிங்காக இருப்பவர் என்கிற பெயருக்கேற்ப பாடல் ட்ரெண்டிங்காக இருக்கிறது. வழக்கமான காதலை பேச்சு வழக்கில் இருக்கும் ஆங்கில சொற்களை கோர்த்து அழகான காதலாக மாற்றி பாடி அசத்தி இருக்கிறார் சுசித்ரா.

பாடலை கேட்ட பலரும் மீண்டும் சுசித்ரா பழைய ஃபார்முக்கு வந்து விட்டதாக சொல்லி பாடலை பகிர்ந்து வருகின்றனர். அவரது youtube பக்கத்தில் கமெண்டுகள் கூறியும் வருகின்றனர். நானும் கேட்டு பார்த்தேன். உண்மையாகவே பாதி வயது குறைந்துதான் போனது. என்ன காதல் சொல்ல யாருமில்லை என்றாலும் காதல் செய்ய இயற்கை இருக்கிறதே! பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் மிக மிக யதாரத்தமாக எழுதப்பட்டிருக்கிறது. அதே சமயம் ஆழமாகவும்...

நட்பிற்கும் காதலுக்கும் இடையேயான குழப்பங்களை இந்த பாடலில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது என்றுமே இனிக்குமா ஐ டோன் நோ.. நாள் போகத்தான் வலிக்குமா ஐ டோன் நோ.. போன்ற இடங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. ஒரு ஆல்பம் சாங் இத்தனை அழகாக வந்ததற்கு சுச்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள். வெல்கம் பேக் சுச்சி.. we want to hear your more !

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!