நடிகர் நடிகைகள் விருது விழா.. முதல் வரிசை டிக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் நடிகைகள் விருது விழா.. முதல் வரிசை டிக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா?

விருது விழா என்றால் எப்போதுமே ஒரு கலை கட்டிவிடும். அதுவும் நடிகைகள்(celebrities) பங்கு பெறும் விருது விழா என்றால் சொல்லவே வேண்டாம். திருவிழா போன்ற பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. மிகப்பெரிய நடிகர் நடிகைகள் திரையுலக ஜாம்பவான்கள் இவர்களை பார்க்கவே ஒரு கூட்டம் அலை மோதும்.


பொது மக்களிடம் இருந்து நடிகர் நடிகைகளை(celebrities) பாதுகாப்பதற்கென்றே சிறப்பாக ஆட்களை விழா குழுவினர் நியமித்திருப்பார்கள். காரணம் திரையில் மட்டுமே பார்க்கும் நடிகர் நடிகைகளை(celebrities) நேரில் பார்க்க மக்கள் காட்டும் ஆர்வம் தான் இத்தணைக்கும் காரணம். அதிலும் சில புகழ் பெற்ற நடிகர் நடிகைகள்(celebrities) என்றால் சொல்லவே வேண்டாம். எப்படியாவது பார்க்க புகைப்படம் எடுக்க மக்கள் காட்டும் ஆர்வம் இருக்கே அடேகப்பா.. நமக்கே பொறாமையாக இருக்கும். காரணம் அந்த அளவிற்கு மக்கள் மனதில் அவர்கள் இடம் பிடித்தி இருப்பது தான்.


நயன் தாரா வருகிறார் என்றால் தனி கூட்டமே அலை மோதும். எப்படியாவது தூரத்தில் இருந்தாவது நயன் தாராவை பார்த்து விட வேண்டும் என சிலர் பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள். குறித்த திரைப்பட விருது விழாவிற்கு டிக்கெட் கிடைப்பதே தற்போது எல்லாம் பெரிய விஷமாகி விட்டது. டிக்கெட் அறிவித்த சிறிது நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விடுகின்றன. இதற்கு எல்லாம் காரணம் மக்கள் தங்களுக்கு விருப்பமான நடிகர் நடிகைகள்(celebrities) மீது வைத்திருக்கும் தீராத காதல் மற்றும் மரியாதை என்றாலும் இந்த நிறுவனங்கள் இப்படி டிக்கெட் விலையை கண்ணா பின்னா என்று உயர்த்தி வைத்திருப்பதும் கண்டிக்க தக்கது.


தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளை(celebrities) பார்ப்பதற்காக ஆவலாக வரும் ரசிகர்களிடம் டிக்கெட்டின் பல் மடங்கு உயர்த்தி வாங்கப்படுகின்றது.  அதில் முதல் கிளாசில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்றால் லட்ச கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த பணத்திற்கு ரசிகர்கள் பல்வேறு திரைப்படங்களை பார்த்து விடுவார்கள்.


விருது விழாக்கள் என்றால் அனைத்து டாப் நடிகர் நடிகைகள்(celebrities) மற்றும் சினிமா துறை பிரபலங்கள் வருவார்கள் என்பதால் அவர்களை பார்ப்பதற்காகவே பெரிய ரசிகர்கள் கூட்டம் வரும்.


இதை பயன்படுத்தி டிக்கெட் விலையை கண்ணாபின்னா என ஏற்றி விழா நடத்துபவர்கள் கல்லா கட்டிவிடுவார்கள்.


இந்த வாரம் சனி கிழமை மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்குபெறும் பிலிம்பேர் விருது விழா நடக்கவுள்ளது. அதில் குறைந்தபட்ச டிக்கெட் விலை 10 ஆயிரம் ருபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முதல் வரிசை டிக்கெட் விலையை கேட்டால் உங்களுக்கு நிச்சயம் தலைசுற்றும். முதல் வரிசையில் அமர்ந்து பார்க்கவேண்டும் என்றால் 3 லட்சம் ருபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டுமாம்.


அடேங்கப்பா ஒரு சாதாரண ரசிகன் தனது விருப்பமான நடிகர் நடிகைகளை(celebrities) பார்ப்பதற்கு பத்தாயிரம் முதல் 3 லட்சம் வரை கொடுத்து தீர வேண்டும்.


நடிகர் நடிகைகளை வைத்து இந்த வணிக நிறுவனங்கள் பயங்கரமாக கள்ளா கட்ட விரும்புவது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் இது தான் உண்மை நிலை என்பதை மக்கள் தான் புரிந்து செயல் பட வேண்டும். நீங்கள் உங்களுக்கு பிடித்தமான நடிகர் நடிகைகளை(celebrities) பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கடன் வாங்கி சிலர் இந்த டிக்கெட் வாங்குகின்றனர். அது வேண்டாம். உங்கள் ஆர்வம் சரி தான். அதற்கு வேறு வழிகளை முயற்சி செய்யலாம். ஏனென்றால் இந்த நிறுவனங்கள் உங்களை மிகவும் ஏமாற்று கின்றன.


உங்களை பார்க்க கூடாத அளவிற்கு நடிகை நடிகைகள்(celebrities) ஒன்றும் அந்த அளவிற்கு மோசமானவர்கள் கிடையாது. ரசிகர்களை பார்க்க அவர்களும் அதிக ஆர்வம் காட்டித்தான் வருகின்றன. சிலர் நடிகர்கள் தானாக முன்வந்து போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர்.


இது போன்ற நிறுவனங்களை நம்பி ஏமாந்தி விடாதீர்கள். தீர விசாரித்து கட்டாயம் டிக்கெட் கிடைக்கும் என்றால் மட்டும் பல தடவை உறுதி செய்த பிறகு முயற்சி செய்யுங்கள். நடிகர் நடிகைகள்(celebrities) கட்டாயம் தங்களது ரசிகர்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். உங்களை பார்க்க தடை விதிக்க மாட்டார்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo