ஜயேஷ்பாய் ஜோர்தார் படம் வெளியானால் நல்ல நடிகையாக வெளிப்படுவேன் : ஷாலினி பாண்டே நம்பிக்கை!

ஜயேஷ்பாய் ஜோர்தார் படம் வெளியானால் நல்ல நடிகையாக வெளிப்படுவேன் : ஷாலினி பாண்டே நம்பிக்கை!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார், அவர் ஜோடியாக நடித்திருந்தவர் ஷாலினி பாண்டே. இந்த படத்தின் மூலம் ஷாலினி பாண்டே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 

தற்போது இந்த திரைப்படம் தமிழ் உட்பட சில மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு பிரபலமான அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தது. தமிழில், ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, 100% காதல், ஜீவா ஜோடியாக கொரில்லா படங்களில் நடித்தார். 

இதையடுத்து தமிழ், தெலுங்கில் உருவாகும் நிசப்தம் படத்திஷாலினி பாண்டே (shalini pandey) நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்புக்குச் சரிவர ஒத்துழைக்காத காரணத்தால் அவரை நீக்கிவிட்டது படக்குழு. 

twitter

தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்து வருகிறார். பின்னர் யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’ படத்தில் ஷாலினி பாண்டே (shalini pandey) ஒப்பந்தமானார். அந்த படத்திற்க்காக கடுமையான டயட் இருந்து உடம்பை குறைத்துள்ளார். 

 
 
 
View this post on Instagram
 
 

A grateful heart🙏🏽

A post shared by Shalini (@shalzp) on

சமீபத்தில் உடம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தினார். மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வைரலாகினார். இந்திப் படத்தில் ஒப்பந்தமானதால் தான் தென்னிந்திய மொழிகளில் சமீபமாக ஷாலினி பாண்டே ஒப்புக் கொள்ளவில்லை என தகவல் வெளியானது. 

அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..

தெலுங்கிலும் அனுஷ்கா நடித்த ‘நிசப்தம்’ மற்றும் ‘இடரி லோஹம் ஒக்கடே’ தவிர தற்போது வரை எந்த படத்தையும் அவர் ஒதுக்கவில்லை. ‘ஜயேஷ்பாய் ஜோர்தார்’  படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே. இந்த படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக உள்ளார். 1983ம் ஆண்டு இந்திய ஜெயித்த உலகக் கோப்பை போட்டியைப் பின்னணியாகக் கொண்ட '83' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் ரன்வீர் சிங்.

twitter

இந்தப் படத்தைத் தொடர்ந்து யாஷ்ராஜ் நிறுவனம் தயாரிக்கும் 'ஜயேஷ்பாய் ஜோர்தார்' படத்தில் நடித்து வருகிறார். ரன்வீர் சிங் படத்தின் மூலம் இந்தியில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார் ஷாலினி பாண்டே (shalini pandey). படத்தை திவ்யங் தக்கார் இயக்குகிறார்.  யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் காமெடி படம் இது.

'ஜயேஷ்பாய் ஜோர்தார்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படம் விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை யாஷ்ராஜ் நிறுவனம் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கவில்லை. 

புடவையில் தேவதை போல் இருக்கும் யாஷிகா ஆனந்த் : வைரலாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் திணறல்!

இந்நிலையில் இதுகுறித்து பேசிய நடிகை ஷாலினி பாண்டே,  'ரன்வீர் சிறந்த நடிகர் என்பது தெரியும். அவர் 200 சதவிகிதம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். ஸ்கிரிப்ட் என்ன கேட்கிறது என்றாலும் அதைவிட நடிப்பில் இன்னும் நுணுக்கங்களைச் சேர்ப்பவர் அவர்.

 

twitter

அதில் அவர் மேதையாக இருக்கிறார். நடிகையாக அதைப் பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவருடன் நடிக்கும்போது நானும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று தோன்றும். 

அதனால் நானும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இதனால் நடிகையாக நம்பிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது. இந்தப் படம் வெளிவந்தால் நல்ல நடிகையாக, நான் வெளிப்படுவேன் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!