logo
ADVERTISEMENT
home / Bollywood
உங்கள் அன்பு என்னை அழகாக்குகிறது.. மீடியாவை நேசிக்கும் சாரா !

உங்கள் அன்பு என்னை அழகாக்குகிறது.. மீடியாவை நேசிக்கும் சாரா !

பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மற்றும் அம்ரிதாவின் மகள் சாரா அலிகான்  ( Sara alikhan ) இப்போதைய இளம் வரவுகளில் ஒருவர். அறிமுக நடிகை என்றாலும் சாரா அலிகான் நடித்த கேதார்நாத் மற்றும் சிம்பா ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகி வசூலில் வாரி குவித்தது.

மீடியா மக்களுக்கு சாரா அலிகான் மிக பிடித்த நடிகையாக இருக்கிறார். அவரது தனிப்பட்ட நிகழ்வுகளையும் கூட படம் பிடித்து வெளியிடுகின்றனர். இது பற்றி அவர் கூறுகையில் நான் எங்கு போனாலும் பத்திரிகைகளை சேர்ந்த போட்டோகிராபர்கள் என்னை சூழ்ந்து விடுகின்றனர். அவர்கள் என்னை பின் தொடர்வது எனக்கு பிரச்னையே இல்லை.

இயக்குனர் ஆகிறார் ஐஸ்வர்யா ராய் .. அடுத்த படம் பற்றிய ஸ்பெஷல் தகவல்கள் உள்ளே !

ADVERTISEMENT

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உண்மையில் அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கவே விரும்புகிறேன். என்னை மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து வெளியிடுகின்றனர். அவர்களால் நான் அழகாகிறேன் அதற்கு நன்றி என்று நன்றி கவிதை பாடுகிறார் சாரா அலிகான்.

நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே நான் சயீப் அலிகான் மகள் என்பதால் எனக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிகிறது என்பதை நான் உணர்ந்துதான் இருக்கிறேன். நான் கண்டிப்பாக எனது சொந்த உழைப்பால் இந்த பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பேன். இவ்வளவு அன்பு எனக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று நெகிழ்கிறார் சாரா அலிகான்.

“ரஜினியின் படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆனேன்” – ஹாலிவுட் டைரக்டர் ஜோ ரஸ்ஸோ – அவெஞ்சர்ஸ்

ADVERTISEMENT

பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க விரும்பப்படும் மிக சிறந்த இயக்குனரான இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் உடன் தற்போது நடித்து வருகிறார் சாரா அலிகான். இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கின. இது 2020 காதலர் தினத்தில் வெளியிட படும் என எதிர்பார்க்க படுகிறது.

சாராவும் சுஷாந்த்தும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் கார்த்திக் ஆர்யன் மற்றும் சாராவிற்கான நெருக்கம் அதிகமாக இருப்பதாக செய்திகள் வருவதால் சுஷாந்த் இவர் மீது கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

ADVERTISEMENT

—                                                                  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.                                                               

              

ADVERTISEMENT
07 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT