ராஜா ராணி ஜோடி ஆல்யா மானஸா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம் - படங்கள் உள்ளே !

ராஜா ராணி ஜோடி ஆல்யா மானஸா - சஞ்சீவ் நிச்சயதார்த்தம் - படங்கள் உள்ளே !

சின்னத்திரை ஜோடியான ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவிற்கு ( Alya manasa and sanjeev ) ஏகப்பட்ட ரசிகர்கள். ராஜா ராணி சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவின.


வழக்கம்போலவே ஆரம்பத்தில் மறுத்த இந்த ஜோடி பின்னர் காதலிப்பதாக கூறி நிறைய செல்ஃபி மற்றும் டப்ஸ்மாஷ்களை வெளியிட்டு அதிரடி காட்டினர்.ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவிற்கு திருமணம் எப்போது நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இவர்களின் நிச்சயதார்த்த செய்தி பாலை வார்க்கலாம்.


ஆமாம் சீரியலில் கணவன் மனைவியாக வாழ்ந்த இந்த ஜோடி நிஜத்திலும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள்.


கடந்த வாரத்தில் நடந்த இவர்கள் நிச்சயதார்த்தம் கோவிலிலோ அல்லது திருமண மண்டபத்திலோ ஹோட்டலிலோ நடக்கவில்லை. மாறாக இவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த விஜய் டிவி விழாவில் நடந்திருக்கிறது.விழாவிலே மாலை மாற்றி மோதிரம் அணிவித்து நிச்சயம் செய்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவில் இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாக இருப்பதால் இது தற்போது ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனை சஞ்சீவும் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.


 
மானஸா மற்றும் சஞ்சீவ் இருவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.                          


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் மற்றும் இன்ஸ்டாக்ராம்


உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா ..நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா !


தீபிகா படுகோன் கர்ப்பம்..? விவரங்கள் உள்ளே..!


---                                                                              


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.