logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
ஓ பேபி  சமந்தாவிற்கு பிறக்கப் போகுது நிஜ பேபி ! கர்ப்பமாக இருக்கிறார் சமந்தா!

ஓ பேபி சமந்தாவிற்கு பிறக்கப் போகுது நிஜ பேபி ! கர்ப்பமாக இருக்கிறார் சமந்தா!

சமந்தா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவரது புன்னகைதான். அமைதியும் மென்மையும் நிறைந்த சமந்தாவிற்கு தமிழ் திரையுலகம் பல வாய்ப்புகளை வழங்கியது. பானா காத்தாடி மூலம் அறிமுகம் ஆனாலும் அதன் பின் தனக்கான சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க அவர் கற்றுக் கொண்டார்.

இங்கிருந்து கற்றுக் கொண்ட சமந்தாவை தெலுங்கு திரையுலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. சமந்தா நடித்த ஒவ்வொரு படமுமே ஹிட் கொடுக்க ராசி நடிகையான சமந்தா தெலுங்கு திரை உலகில் முன்னணி இடத்தை பிடித்தார்.

தமிழை விட்டு கொடுக்காத சென்னைப் பெண் சமந்தா (samantha) நல்ல கதையம்சம் உள்ள கதைகள் கிடைத்தால் தமிழிலும் நடிக்கத் தயார் என்றார். ஆகவே சூப்பர் டீலக்ஸ் வாய்ப்பை அவர் தவற விடவில்லை. தைரியமான பெண்களுக்கு உதாரணமான பல கதாபாத்திரங்களை அவர் தேர்ந்தெடுத்து நடித்தார். அதே சமயம் பெண்மையின் மென்மை உடையாமல் இருக்கும் கதைகள்தான் அவருடைய தேர்வாகவும் இருந்தது.

திருமணமானவருடன் தவறான தவறான உறவு. ஆண்ட்ரியாவின் வாழ்வில் தொடர்கதையாகும் துயரங்கள்..                

ADVERTISEMENT

Youtube

நடிகர் சித்தார்த் உடன் காதலில் இருந்த சமந்தா பின்னர் பிரிந்தார். அதன் பின்னரே திரையுலகில் ஜொலித்தார். கடைசியாக 2017ல் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா வை மணந்தார். திருமணம் முடிந்த உடன் தனது ஹனிமூன் முதலிரவு உள்பட அனைத்தையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது யாரோ ஒருவரை திருப்திகரமாக பழி வாங்கவே என்று திரையுலகில் பேசப்பட்டது.

தெலுங்கில் வசூல் ராணி ஆக வலம் வந்த சமந்தா ஓ பேபி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படமும் வெற்றி பெறவே அந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதனைத் தவிர தமிழில் எடுக்கப்பட்ட 96 திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் சமந்தா திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்கிற தகவல்கள் தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது. 96 திரைப்படத்திற்கு நடித்துக் கொடுத்த உடன் சிறிது காலம் அவர் பிரேக் எடுக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமந்தாவை திரைப்படங்களுக்காக புக் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு அவர் எந்தப் படத்திலும் நடிக்க இயலாது எனும் காரணங்கள் கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனை சமந்தாவே தன்னை நாடி வரும் இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் க்ரஷ் உங்கள் காதலராக மாற வேண்டுமா? அவரை உங்களுடையவராக்க சில உதவிகள்!

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                            

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                      

14 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT