சமந்தா நாகசைதன்யா காதல் திருமணம் பற்றி சினிமா உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தது. சமந்தாவோ தனியாக தன்னுடைய சந்தோஷங்களை பகிர்கிறேன் என்று முதலிரவு புகைப்படங்களை கூட இன்ஸ்டாகிராமில் ஏற்றி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இவர்கள் இருவரும் நடித்த மஜிலி திரைப்படம் வெற்றிக்காக சமந்தா நேர்ந்து கொண்டார். சொன்னபடி திரைப்படம் வெற்றியடைய இருவரும் நடந்தே திருப்பதிக்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். அதன் பின்னர் சமந்தா நடித்த ஓ பேபி திரைப்படமும் வெற்றி பெற்றது.
96 ரீமேக்கிலும் சமந்தா (samantha) நடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து பிசியாக இருக்கிறார் சமந்தா. அதனை அடுத்து தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் தற்போது நடித்து வருகிறார். தெலுங்கு வட்டாரம் முழுக்க இப்போது பிரபலமாக பேசப்படுவது நடிகை சமந்தா தொடர்ந்து தன்னுடைய புகுந்த வீட்டு விழாக்களை புறக்கணித்து வருவதுதான்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் ஒரு சில சினிமா செய்திகள் கூறுகின்றன. இது பற்றி சமந்தாவோ நாகசைதன்யாவோ மறுப்பு எதுவும் தெரிவிக்காதது மேலும் இந்த பேச்சை வலுப்படுத்துவதாகவே தெரிகிறது.
நாகசைதன்யாவின் (nagachaithanya) பட விழாக்களுக்கு கூட விடாமல் சமந்தா சென்று வந்ததால் இப்போது குடும்ப நிகழ்ச்சிகளை ஏன் புறக்கணிக்கிறார் என்பது மர்மமாக இருக்கிறது. சமீபத்தில் நாகசைதன்யாவின் தம்பி ஆதித்யா நிச்சயதார்த்தத்தை போதும் சமந்தா கலந்து கொள்ளவில்லை.
நாகசைதன்யாவின் தாத்தா நடிகர் நாகேஸ்வராவின் பெயரில் வழங்கப்படும் தேசிய விருது விழா நாகார்ஜுன் குடும்பத்தாரின் குடும்ப விழா போன்றே வருடாவருடம் நடந்து வருகிறது. இந்த வருடம் அதிலும் நடிகை சமந்தா கலந்து கொள்ளவில்லை.
இப்படி தொடர்ந்து குடும்ப விழாக்களை சமந்தா புறக்கணிப்பதன் காரணம் நம்புவதற்கு ஏற்றதாக இல்லை. வெப் சீரிஸில் அவர் தீவிரமாக நடித்து வருவதால் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற காரணம் நம்பக்கூடியதாக இல்லை என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் நாகசைதன்யா மற்றும் சமந்தா இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் விவாகரத்து வரைக்கும் போய் விட்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. எப்போதுமே தன்னைப் பற்றிய கிசுகிசுக்கள் வந்தால் உடனடியாக பதில் சொல்பவர் சமந்தா.
சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கும் பதில் தந்து விஷயத்தை அணைக்கும் சமந்தா இப்போது மிக முக்கியமான வதந்தியை சிக்கி இருந்தும் இது பற்றி இன்னமும் எந்த அறிக்கையும் அனுப்பாமல் மௌனம் காத்து வருவது ரசிகர்களை கேள்விகளுக்கு உரியவர்களாக மாற்றுகிறது. அதனால் இந்த வதந்திகள் உண்மையாக இருக்கலாமோ என ரசிகர்கள் பதறி வருகின்றனர்.
மிகப்பெரிய குடும்பத்தில் மருமகள் ஆகி இருக்கும் சமந்தா அக்கினேனி குடும்பத்தாரின் விழாக்களை தவிர்த்து வருவது திரையுலக பிரபலங்கள் இடையே முணுமுணுப்பை சந்தித்திருக்கிறது. நாகசைதன்யா மட்டுமே விழாக்களில் தனித்து கலந்து கொள்வது சமந்தா வேண்டுமென்றே இப்படி செய்கிறார் என்கிற சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.
இது பற்றி நாகா சைதன்யா பக்கத்தில் இருந்தும் எந்த மறுப்பும் வெளியாகவில்லை. அக்கினேனி குடும்பாத்தாரும் இது பற்றி மௌனம் சாதிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் யாரவது ஒருவர் மௌனம் கலைத்தால் மட்டுமே இந்த தகவல் பற்றிய உறுதித் தன்மை தெரிய வரும்.
இதனிடையில் நாகார்ஜுன் அமலாவின் மகன் அகில் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் சமந்தா கெஸ்ட் ரோலில் வர இருக்கிறாராம். அகில் நடித்த இரண்டு திரைப்படங்கள் நன்றாக ஓடாத நிலையில் பூஜா ஹெக்டே உடன் நடிக்கும் இந்தப் படத்தை அதிகம் நம்பி இருக்கிறார் அகில்.
தன்னுடைய அண்ணி சமந்தாவிடம் அகில் தன்னுடைய காதல் கதையை சொல்வது போல கதை படமாக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில்தான் இப்படி ஒரு சர்ச்சையில் சமந்தா சிக்கி இருக்கிறார். பார்க்கலாம் . சமந்தா இதற்கான பதிலை எப்படி சொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்கிறது தெலுங்கு சினிமா வட்டாரம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!