பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!

பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!

நடிகை சாய்பல்லவி தனக்கென தனியாக ஒரு பாணியை உருவாக்கி அதில் வெற்றிகரமாக நடித்து வருபவர். மலையாளத்தில் இருந்து வந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து தனக்கென தனியான ரசிகர்களை பெற்றிருக்கிறார். 

எந்த கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் இப்படி எதிலும் சிக்காதவர் சாய் பல்லவி. பணத்திற்காக கிடைத்த படங்களை ஒப்புக் கொள்வதிலும் அவருக்கு விருப்பம் இருந்ததில்லை. தேர்ந்தேடுக்கப்பட்ட திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் தருகிறோம் சில நிமிடங்கள் சிகப்பழகு விளம்பரத்தில் நடிக்க வாருங்கள் என்று ஒரு நிறுவனம் அழைத்திருந்தது. 

ஆனால் நிறப்பாகுபாடு என்பது சாய்பல்லவிக்கு பிடிப்பதில்லை. அவரது தங்கை அவரை விட நிறம் கம்மியாக இருப்பதால் அவரது தங்கை பல நேரங்களில் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் அதனால் இந்த செயற்கை நிற மேம்பாடுகள் மீது சாய் பல்லவிக்கு (sai pallavi) எப்போதும் நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை எனவும் அவரே தெரிவித்திருக்கிறார்.  

இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

Youtube

இப்படி பல இடங்களில் சாய்பல்லவி கறார் காட்ட காரணமே அவரது மருத்துவ படிப்புதான். டாக்டர் ஆன சாய் பல்லவிக்கு ஒருவேளை நடிப்பு வாய்ப்புகள் இல்லையென்றால் மீண்டும் மருத்துவர் வேலைக்கே திரும்பி விடுவதாக இருக்கிறார். அதனாலேயே இந்த சினிமா தொழிலில் அவரது விருப்பம் போல நடந்து கொள்ள முடிகிறது.  

இப்படி இருந்த சாய்பல்லவி மீது இப்போது மீடியா வதந்திகள் பரவ ஆரம்பித்திருக்கிறது. பிரபுதேவா (prabhu deva)  மீது சாய்பல்லவி காதலில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் சாய்பல்லவி சின்னத்திரைக்கு முதலில் வந்தவர். அப்போதில் இருந்தே நடனப்புயல் பிரபுதேவா மீது சாய்பல்லவிக்கு நல்ல மரியாதை இருந்திருக்கிறது.  

ஆனால் இயக்குனர் நடிகர் பிரபு தேவாவோ நயன்தாரா மீது அப்போது காதலில் இருந்தார். இவர் தனது காதல் மனைவி ரம்லத்தை 2011ம் வருடம் விவாகரத்து மூலம் பிரிந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு திருமணம் வரை வந்த நயன்தாராவையும் பிரிந்து விட்டார். நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.  

முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!  

Youtube

நடிகரும் நடன இயக்குனரும் ஆன பிரபுதேவா உலகப்புகழ் பெற்ற பாடலான ரவுடி பேபி பாடலுக்கு நடனம் அமைத்து கொடுத்திருந்தார். அப்போதில் இருந்து பிரபுதேவா உடன் நட்பில் இருக்க ஆரம்பித்திருக்கிறார் சாய் பல்லவி. அன்றில் இருந்து பிரபுதேவாவை ஒரு வாரம் பார்க்க முடியவில்லை என்றாலும் தவித்து போகிறார் சாய்பல்லவி என்று பேச்சு அடிபடுகிறது. 

கேரளாவில் இருந்தாலும் வாரம் ஒருமுறை பிரபுதேவா எந்த ஷூட்டிங்கில் எந்த ஊரில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அங்கே சென்று சர்ப்ரைஸ் கொடுக்கிறாராம் சாய்பல்லவி. பிரபுதேவாவின் காதலுக்கு ஏற்கனவே வேறொரு நடிகை காத்துக்கொண்டிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. அந்த பேய்படத்தில் நடித்த அவரேதான். 

இப்போது சாய் பல்லவி பெயரும் இதில் அடிபடத் தொடங்கி இருப்பதால் கோலிவுட் மக்கள் எங்கே செல்லும் இந்த பாதை என்று ஜாடையாக பேசி வருகிறார்களாம். சாய்பல்லவியின் கூர்மையான அறிவுத்திறன் இந்த விஷயத்தில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.  

இந்த 2020 வருஷம் யாருக்கெல்லாம் நன்மை செய்யபோகுது! யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும் ! 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!  

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!