இனி எங்களுக்குள் எதுவுமில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவருக்கானது..ப்ரியங்காவின் பிரேக்கப் நோட்

இனி எங்களுக்குள் எதுவுமில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவருக்கானது..ப்ரியங்காவின் பிரேக்கப் நோட்

சீரியல்களில் பெரும்பாலான மக்களின் வரவேற்பு பெற்ற சீரியல் ரோஜா. இதில் இணைந்து நடித்தவர்கள் பிரியங்கா மற்றும் ராகுல் ஜோடி. ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாக்களில் நடித்தவர் ப்ரியங்கா. ஹைதராபாத் இவரது சொந்த ஊர். 

முன்னணி நாயகர்கள் பலருக்கு தங்கை வேடத்தில் நடித்த பிரியங்காவை (priyanka) தமிழகம் ரோஜா சீரியல் மூலம் நாயகியாக ஏற்றுக்கொண்டது. இதனிடையே இவர் பற்றி பல பரபரப்பு செய்திகள் வெளியாகின. இவர் உடன் நடிப்பவரான ராகுல் உடன் காதலில் இருக்கிறார், லிவ் இன்னில் இருக்கிறார் எனப் பல செய்திகள் பரவியது. 

இதனை அடுத்து கடந்த வருடம் மே 10ம் தேதி அன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. ஆனால் சில நாட்களிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைப் பற்றி முன்னணி நாளிதழ் ஒன்று ப்ரியங்காவை பேட்டி கண்டபோது அவர் சில உண்மைகளை கூறி இருக்கிறார்.                                                        

Youtube

நாங்கள் இருவரும் காதலித்தது உண்மை. இருவருக்கும் மே மாதம் பத்தாம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. சில சொல்ல முடியாத காரணங்களால் கல்யாணம் தள்ளி போனது. யார் மீது தவறு இருந்தாலும் பேசி சரி செய்து மீண்டும் திருமணம் நடைபெறும் என நான் எதிர்பார்த்தேன். 

அவர்களுக்குள் நடந்த விஷயங்களை வெளியில் சொல்ல விரும்பாத ப்ரியங்கா நடந்ததை எல்லாம் மறந்து விடும்படி ராகுலுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ப்ரியங்கா தரப்பிலான இந்த முயற்சியும் எடுபடவில்லை. மனக்கசப்புகள் மேலும் அதிகமானதால் ராகுல் ஹைதராபாத்தில் இருந்து மலேசியா சென்று விட்டாராம்.                                                                                   

Youtube

அதன் பின்னர் ப்ரியங்காவின் தொடர்பிலிருந்து முழுவதுமாக தன்னை ராகுல் துண்டித்துக் கொண்டார். இதனை பற்றி பிரியங்கா கூறும்போது கடைசி முயற்சியா ராகுலை லைனில் பிடிச்சு பேசினேன். ஆனால் அதிலும் சரியான முடிவு கிடைக்கவில்லை. இதுக்கு மேல நான் என்ன செய்ய முடியும்.

இனிமேல் எங்களுக்குள் எதுவுமில்லை. நடந்த நிச்சயதார்த்தத்துடன் எல்லாமே முடிஞ்சுபோச்சு. ஸோ, அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துட்டுப் போக வேண்டியதுதான். ஆல் தி பெஸ்ட் ராகுல் என்று ப்ரியங்கா தனது பேட்டியை முடித்திருக்கிறார்.                                                                                  

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!