நயன்தாரா மட்டுமின்றி ஐஸ்வரியா ராயையும் கெடுத்திருப்பேன்! சர்ச்சையை கிளப்பிய ராதாரவி

நயன்தாரா மட்டுமின்றி ஐஸ்வரியா ராயையும் கெடுத்திருப்பேன்! சர்ச்சையை கிளப்பிய ராதாரவி

நயன்தாரா பற்றி சமீபத்தில் திரைப் பட விழா ஒன்றில் அசிங்கமாக பேசி அனைவரின் வெறுப்பையும் அதிகமாக சம்பாதித்து கொண்டவர் ராதாரவி(Radha ravi). இவரை பற்றி வெளிவராத சர்ச்சைகளே இல்லை எனலாம். இவர்களது குடும்பமே சர்ச்சைகளுக்கு பேர் போன குடும்பம் தான். ராதிகா உட்பட அனைவரும் அவ்வப்போது எதாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்வார்கள்.


ஆனால் விஷயம் அது இல்லை தற்போது பொது மேடையில் முன்னனி நட்சத்திரமாக இருக்கும் நடிதை நயன்தாராவை மிகவும் கீழ் தரமாக பேசியது மட்டும் இன்றி பொள்ளாச்சி வழக்குகளையும் பற்றி நாகரீகம் இன்றி பேசி அனைவரின் வெறுப்பையும் அதிகமாக சம்பாதித்தார் ராதாரவி(Radha ravi). தற்போது போர் கொடி தூக்கும் அனைவரும் அந்த மேடையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்ப்பை தெரிவிக்க கூட இவர்களுக்கு ஒரு கூட்டம் தேவைப்படுகின்றது என சமூக வாசிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களை விளாசி தள்ளி இருந்தார்கள்.


இது குறித்து நயன்தாராவும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். நடிகர் சங்கமும் அதற்கான நடிவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் சட்ட ரீதியா நடிவடிக்கையை நயன்தாரா விரும்புவதாக நடிகர் சங்கத்தை சேர்ந்த பொன்வன்னன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் சட்டப்படி நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் பொண்வன்னன் தெரிவித்திருந்தார்.


தற்போது நயன்தாராவை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் ராதாரவி(Radha ravi). ஆனால் அவர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. காரணம் ராதாரவியிடம்(Radha ravi) தற்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதில் தற்போது நயன்தாராவை தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளீர்கள். முன்பு ஒரு மேடையில் ராதாரவி(Radha ravi) எனக்கு மட்டும் ஹிந்தி தெரிந்திருந்தால் ஐஸ்வரியா ராயையும் கெடுத்து இருப்பேன் என்று சொன்னீர்களே இதற்கு மன்னிப்பு கேட்க தயாரா என கேட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த ராதாரவி(Radha ravi) நான் ஐஸ்வரியாவையும் கெடுத்திருப்பேன் என்று சொன்னதற்கு ஐஸ்வரியா தான் பெருமை பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


அவர் அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார் என்பதை தான் அப்படி சொன்னேன் என்று சொல்லி சிரித்திருக்கிறார்.


அதாவது அவர் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் என்பதை குறிப்பிட்டேன்’ என அவர் கொடுத்த விளக்கம் அனைவருக்குமே ஷாக் தான்.


அதற்கு அந்த பத்திரிக்கையாளர் இதை நீங்கள் தவறாக உணரவில்லையா என கேள்வி எழுப்ப நான் என்ன தவறு செய்தேன் என பதில் கேள்வியை ராதாரவி(Radha ravi) கேட்டுள்ளார். வர வர ராதாரவி(Radha ravi)க்கு தான் என்ன செய்கிறோம் என்றே புரியவில்லை என் புலம்பி விட்ட அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.


 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo