மணிரத்னம் மூலம் வெளியானது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மிஷ்கினின் சைக்கோ பட டீஸர் !

மணிரத்னம் மூலம் வெளியானது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மிஷ்கினின் சைக்கோ பட டீஸர் !

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளம்பியிருக்கும் திரைப்படம் இயக்குனர் மிஷ்கினின் சைக்கோ. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இளையராஜாவுடன் கைகோர்க்கிறார் மிஷ்கின்                                              

உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். உடன் மணிரத்னம் நாயகிகளான நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடிக்கிறார்கள். கேமரா பிசி ஸ்ரீராம் என்றது தகவல். ஆனால் பிசி ஸ்ரீராம் தன்னுடைய அசிஸ்டன்ட் மூலமே முக்கால் வாசி படம் எடுத்ததால் அது அவருக்கே சொந்தம் என விட்டு கொடுத்து விட்டார்.

Youtube

தமிழ் சினிமாக்கள் அதிகம் புழங்காத இடங்களுக்கு சென்று வருவது இயக்குனர் மிஷ்கினுக்கு பிடித்த விஷயம். அதனாலேயே சைக்கோ எனும் திரைப்படத்தை எடுத்திருக்கிறார். டீசரில் வசனங்கள் எதுவும் இல்லை. இளையராஜா மட்டுமே இருக்கிறார்.                                                                                

முதல் காட்சியிலேயே மிஷ்கினின் ஸ்பெஷல் லோ ஆங்கிள் காட்சியில் இருளில் ஒரு கார் வேகமாக செல்கிறது. இரண்டாவது காட்சியில் உதயநிதி முழு நிர்வாணமாக முதுகு காட்டியபடி ஒரு கட்டிலில் நின்று கொண்டிருக்கிறார்.

Youtube

மூன்றாவது காருக்குள் அமர்ந்திருக்கும் பயம் நிறைந்த நித்யா மேனன் ரத்தம் தெரிய மடிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பொட்டலம், பீதி நிறைந்த கண்களோடு எதிலிருந்தோ மறைந்திருக்கும் அதிதி ராவ், துரத்தி வரும் கார் காட்சிகள், முகம் சிதைந்த சடலத்திற்கு முகமூடி போட்டு இறுதி மரியாதை செய்யும் உறவுகள், அடி வாங்கும் அதிதி பேக் செய்யப்படும் பெண் சடலம் என ஒவ்வொரு பிரேமிலும் சைக்கோ பயத்தை விதைத்திருக்கிறார் மிஷ்கின்.                                                 

 

Youtube

கண்பார்வையற்றவராக நடித்திருக்கும் உதயநிதி இந்த திரைப்படம் திருப்பு முனையாக அமையலாம். பெரும்பாலானவர்கள் இந்த சைக்கோ டீஸர் ராட்சசனை நினைவூட்டுவதாக கூறுகின்றனர். எனக்கோ அஞ்சாதே வை நினைவூட்டுகிறது.

காரணம் கேமரா கோணங்கள் மற்றும் இசை யாக இருக்கலாம். எல்லா இயக்குனர்களுக்கும் ஆங்கில படமான psycho மீது பெரும் பாதிப்பு இருக்கும். எப்படியாவது எடுக்க விரும்புவார்கள். அதில் இயக்குனர் மிஷ்கின் இந்தக் கனவை கொஞ்சம் தொட்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

மீதத்தை சைக்கோ படம் வெளியான பின் பேசுவோம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!