கவர்ச்சி உடையில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ப்ரியங்கா!

கவர்ச்சி உடையில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ப்ரியங்கா!

ராணுவ குடும்பத்தில் பிறந்த ப்ரியங்கா(priyanka) 2000ம் ஆண்டு உலக அழகிக்கான பட்டத்தை வென்றார். முதலில் தனது திறையுலக வாழ்க்கையை தமிழில் விஜய் படத்தில் தொடங்கினார். அதன் பிறகு பாலிவுட்டிற்கு சென்ற இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். குறிப்பாக பிலிம் பேரில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.


இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் இனவெறி தாக்குதல்கள் வந்த போதிலும் அதை அனைத்தையும் தைரியமாக கையாண்டார். 2016ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்று மேலும் பெறுமை சேர்த்தார். தற்போது அமெரிக்கா ப்லிம் அன்ட் டெலிவிசன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.


அம்பானி வீட்டு திருமணத்தில் ப்ரியங்காவை(priyanka) கண்டு ரசித்தவர்கள் அடுத்து அவர் எப்படி வருவார் எந்த மாதிரியான உடையில் வருவார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு எப்போதும் உண்டு.


காரணம் பேஷன் என்கிற வார்த்தையை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்வதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் ப்ரியங்கா தான். இவர் அணியும் சில உடைகள் அநேக நேரங்களில் பல சர்ச்சைகளுக்கு சிக்கும். ஆனால் அதை அனைத்தையும் மிகவும் தைரியமாக கையாளுவதில் தேர்ச்சி பெற்றவர் என்றே சொல்லலாம். சில நேரங்களில் மக்களின் கேளிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளார். ஆனால் அது போன்ற நேரங்களில் மீடியாவை பார்த்து ஓடி ஒளியாமல் தைரிமாக சந்திக்ககூடியவர். அவர் பக்கம் இருக்கு  நியாயத்தை அநேக முறை தெரிவித்துள்ளார். சில நேரங்களில் வரும் எதிர்மறையான கருத்துக்களுக்கு குறித்த விளக்கமும் தெரிவித்திருக்கிறார்.


சரி நாங்கள் ஏன் உங்களுக்கு இவ்வளவு விளக்கம் கொடுக்கிறோம் என நீங்கள் யோசிக்கலாம். காரணம் இருக்கு, ப்ரியங்காவை(priyanka) பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சமீபத்தில் நிக்கி(Nick Jonas) உடனான திருமணத்திற்கு பிறகு மேலும் பேஷனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கூடுதல் அழகாகவும் மாறி வருகின்றார்.


சமீபத்தில் நடைபெற்ற கவுஸ் பார்ட்டிக்கு ப்ரியங்கா(priyanka) அணிந்திருந்த ஆடை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. சிலரை வாய் பிழக்கவும் வைத்தது. இதற்கான காரணத்தை கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
 

 

 


View this post on Instagram


 

 

 

A post shared by i love you Priyanka Chopra 📍 (@priyankaaesthetics1) on
கருப்பு நிற பேண்ட் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். X10 OOTN வேலைப்பாடுகள் கொண்ட முன் பகுதி முழுவதும் ஓபன் செய்யப்பட்டிருந்த சட்டை அணிந்திருந்தார். சட்டையில் மேலே சின்ன கூக்கினால் ஆனால் கொக்கி இணைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போன்று தங்க நிற நெக்லஸ் உடைக்கு ஏற்றார் போன்று அணிந்திருந்தார்.


இந்த உடையில் எந்த வித படபடப்பும் கூச்சமும் இன்றி மிகவும் தைரியமாக காணப்பட்டார். இது பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பிலும் ஆச்சரியப்படவும் வைத்தது. இது முதல்முறையாகவும் கடைசி முறையாகவும் கூட இருக்கலாம். இது போன்ற எளிமையான சுலபமான தோற்றத்தை யாராலும் கையாள முடியாவிட்டாலும் கண்டிப்பாக ப்ரியங்காவால்(priyanka) முடியும். தனது ரசிகர்களை மேலும் திருப்த்திபடுத்துயுள்ளார் என்றால் மறுக்க முடியாது.


குடும்பத்தின் அதிக அக்கறை காட்டிவருகின்றார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அந்த பட்டியலில் தற்போது தனது கணவரையும் ப்ரியங்கா சேர்த்துள்ளார். எப்போதும் தனது அம்மாவிற்கும் சகோதரருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தற்போது கணவருக்கும் கொடுத்து வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அழகாக குடும்பத்தை கவனித்துவருகிறார் நமது உலக அழகி ப்ரியங்கா!.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo