கருவுற்ற பெண்கள் வேலைக்கு செல்லும்போது கவனிக்க வேண்டியவை

கருவுற்ற பெண்கள் வேலைக்கு செல்லும்போது கவனிக்க வேண்டியவை

பெண்மையின் மேன்மையே அவள் தாங்கும் கருவில்தான் இருக்கிறது. கர்ப்பம் என்பது பெண்மையை முழுமையாக்கும் ஒரு செயல்.


முன்பெல்லாம் பெண்கள் வீட்டில் இருந்தனர். அதனால் அவர்களை பூவை போல பத்திரமாக பார்த்துக் கொள்ள பெரியவர்கள் இருந்தனர். பிரசவம் என்பது இயல்பாக இருந்தது.


இப்போது பொருளாதார சூழல் காரணமாக ஆண் பெண் இருவருமே வேலைக்கு சென்றாக வேண்டிய நிர்பந்தங்கள் இருப்பதால் பிரசவ நேரம் நெருங்கும் வரை பல உடல் அசௌகரியங்களை தாண்டி பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.


இதில் கர்ப்ப காலத்தில் (pregnancy) அவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை அலசி ஆராய்ந்து பட்டியல் இட்டுள்ளோம்.


மன அழுத்தங்கள்


பொதுவாக கர்ப்பமான நேரத்தில் மன அழுத்தம் நேராமல் பார்த்துக் கொள்வது பிறக்க போகும் குழந்தையின் மன நிலைக்கு நன்மை தரும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையில் அழுத்தங்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும். மனதை அமைதியாக வைத்து வேலையை பதட்டம் இல்லாமல் முடிப்பது இவர்களுக்கு மனம் அழுத்தங்கள் இல்லாமல் இருக்க உதவி செய்யும்.பக்க விளைவுகள் அற்ற உணவு


உணவென்பது கர்ப்ப சமயத்தில் மிக முக்கியமானது. ஊட்ட சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது குழந்தைக்கு மிக நல்லது. புரதம் அதிகம் உள்ள உணவுகள், இரும்பு சத்து மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளை விடாமல் சாப்பிடுங்கள்.


வேலைக்கு செய்யும்போது வீட்டில் இருந்தே சமைத்த ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் அல்லது சுகாதாரமான முறையில் செய்யப்பட்ட ஹோம்மேட் பொருட்களை வாங்கி வைத்து கொண்டு அதனை அலுவலகத்துக்கு கொண்டு செல்லுங்கள்.


வேகவைத்த தானியங்கள் , முட்டை மற்றும் வெண்ணையால் செய்யப்பட்ட பாப்கார்ன்கள் எடுத்துக் கொள்ளுங்கள். கருவுற்ற சமயம் குமட்டல்களை குறைக்க பசி வரும் முன்பே சாப்பிடுவது நல்லது. அதிகமான குமட்டல் மற்றும் வாந்தி தொந்தரவு உள்ளவர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படி மாத்திரைகள் எடுக்கலாம். எலுமிச்சை நீரை கைவசம் வைத்து கொள்ளலாம்.அட்டவணை போட்டுக் கொள்ளுங்கள்


உங்களை பற்றிய அணைத்து தகவல்களையும் ஒரு அட்டவணை போட்டு அலுவலக டிராயரில் வைத்து விடுங்கள். அவசர நேரங்களில் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். மருத்துவர் தொலைபேசி எண் , அவர் கூறிய விதிமுறைகள் போன்றவற்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.


வேலையையும் மருத்துவர் குறித்து கொடுத்த படி நீங்கள் பொறுப்பாக அட்டவணை போட்டு பிரித்து செயல்படுங்கள். அதற்கேற்ற படி வேலை செய்தால் உடல் சோர்வுகள் குறையும். வேலை பளுவும் இருக்காது.மாத்திரைகள்


மருத்துவர் அனுமதித்த மாத்திரைகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை மறந்து விடாமல் இருக்க சிறிய குறிப்புகளாக எழுதி மேஜையில் ஒட்டி வைத்து விடுங்கள். முடிந்தவரை ஊட்ட சத்துக்கள் உங்கள் உணவின் வழியாகவே செல்லுமாறு பார்த்து கொள்ளுங்கள். பழங்கள் சாலட்கள் உங்கள் அலுவலக இடைவேளைகளை நிரப்பட்டும்.


கர்ப்ப காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் சில ஆச்சர்யமான விஷயங்கள்!போதிய உறக்கம்


அலுவலகத்து வேலைகளை வீடு வரை கொண்டு வருவதை இந்த சமயங்களில் நிறுத்தி விடுங்கள். நிம்மதியான உறக்கம் இந்த நேரத்தில் மிக மிக முக்கியம். வீடுகளில் இருக்கும் பெண்கள் மதியம் உறங்க வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு அது இல்லை என்பதால் இரவு நேர உறக்கத்தை சிறப்பாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை


செய்ய வேண்டியது : உடற்பயிற்சி மற்றும் யோகாக்களை அதற்குரிய பயிற்சியாளரின் அறிவுரையோடு எடுத்து கொள்வது உங்களுக்கு ஆரோக்கியமான மனம் மற்றும் உடல்நிலை உள்ள குழந்தை பிறக்க வழி வகுக்கும்.


செய்யக் கூடாதவை : கர்ப்ப நேரத்தில் புகை பிடிப்பது அல்லது புகைபிடிப்பவர் அருகில் இருப்பது போன்றவை செய்யவே கூடாது. மேலும் மது அருந்துவதையும் நீங்கள் இந்த சமயங்களில் நிறுத்த வேண்டியது அவசியம்.


தாய்மை என்பது தியாகத்தின் அடையாளம். ஆகவே சில தியாகங்கள் உங்களுக்குள் உள்ள உயிரை அற்புதமான முறையில் வளர செய்யும் மலர செய்யும் .சிசேரியன் பிரசவத்திலிருந்து சீக்கிரம் மீள்வது எப்படி?


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.