POPxo வின் ஐந்தாவது பிறந்த நாளை உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் நானும் மகிழ்கிறேன். இதில் POPxo உருவான காரணம் , பெயர் விளக்கம் , மற்றும் செயல்கள் பற்றி நீங்கள் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் மீடியாவில் மிக சக்தி வாய்ந்த ஒரு மீடியாவாக POPxo இன்று செயல்பட்டு வருகிறது. 2014ம் வருடம் இதற்கான முதல் விதை போடப்பட்டது. இந்தியப் பெண்களுக்காக மட்டுமே இந்த மீடியா செயல்படுவது இதன் சிறப்பு. பாஷன் , அழகு, மற்றும் வாழ்க்கை முறை பற்றிய கட்டுரைகள் இங்கே அதிகமாக வெளியிடப்படுகின்றன.
இன்று வரைக்கும் மாதம் 1.8 லட்சம் வாசகர்கள் POPxo வுடன் இணைகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நாள் வரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வந்த POPxo கடந்த 2018 டிசம்பரில் இருந்து 6 இந்திய மொழிகளில் வருவது மிகப் பெருமைக்குரிய செயல்தான் இல்லையா.
பிறந்த நான்கு வருடத்திற்குள் ஆறு மொழிகளில் இது வெளிவருகிறது. பல மொழிகளிலும் வேரூன்றி மிகப் பெரும் ஆலமர விருக்ஷமாக POPxo தனது விஸ்வரூபத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதற்கு பொருளாதார உதவி செய்பவர்கள் கூகிள் இந்தியாவின் தலைவர் ராஜன் ஆனந்தன் மற்றும் Founder of Caratlane.com மிதுன் சஞ்செலி ஆகியோர்.
இதன் ஆதி காரணமாக இருந்தவர் CEO பிரியங்கா கில் அவர்கள். 2014ம் வருடம் மார்ச் மாதம் லண்டனில் இதற்கான முதல் சுழி போடப்பட்டது. பெருமைக்குரிய பிரியங்கா கில் அவர்கள் estylista எனும் தலைப்பில் 2006ல் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்தார். அதன் பின் 2014ல் அது POPxo
என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆரம்ப காலத்தில் விளம்பரங்கள் மற்றும் விற்பனைகளில் கவனம் செலுத்திய POPxo அதன் பின்னர் மெல்ல மெல்ல பெண்களுக்கான தளமாக தன்னை மாற்றியமைத்துக் கொண்டது.
POPxo என்கிற பெயர்க் காரணம் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். பாப் என்பது இன்றைய நவநாகரிக பெண்களுக்கான பெட் நேம். xo என்றால் “Hugs அண்ட் Kisses ” என்பதன் சுருக்கமாகும். இன்றைய பெண்களை முத்தங்களோடு அரவணைத்து வரவேற்கிறது என்பதன் அர்த்தம் தான் POPxo வாகும்.
முதலில் POPxo டெய்லி என்கிற பத்திரிகை வெளிவந்தது. முழுக்க முழுக்க பெண்களுக்கான நாகரிக குறிப்புகள் , விற்பனை பொருட்கள், பிட்னெஸ், உறவுகள் குறித்த கட்டுரைகள் என்று ஆரம்பித்தது POPxo .
அதன் பின் POPxo beauty எனும் பத்திரிகை வெளியானது. இது அழகுக்காக மட்டுமே ஆனது. உச்சி தொடங்கி உள்ளங்கால் ஸ்பா வரைக்குமான பெண்களுக்கு அவசியமான அழகு குறிப்புகள் மற்றும் ஸ்மார்ட் தேர்வுகள் போன்றவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.
பாஷனுக்கு மட்டுமே ஒரு தனி பத்திரிகையை தொடங்கியது POPxo . பெண்களுக்கான விதம் விதமான உடைகள் அதற்கான அக்சஸரீஸ் போன்றவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.
இது மட்டும் இல்லாமல் திருமணத்துக்கு மட்டுமே என தனியாக ஒரு இதழை நடத்தி வருகிறது POPxo . அதில் ஒரு இளம்பெண்ணின் திருமணம் குறித்த அத்தனை விஷயங்களும் மணமகனை எப்படி தேர்வு செய்வது என்பது முதல் திருமணத்தன்று அணிய வேண்டிய உடைகள் வரை நம்மை வழிநடத்துகிறது POPxo .
சமூக வலைத்தளங்களின் சக்தியை சரியாக உணர்ந்த POPxo நிறுவனம் பெண்களுக்கான தனி சமூகமாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது என்று ஊடகங்கள் நிரூபிக்கின்றன.
இப்படிப்பட்ட அற்புதமான நிறுவனத்தில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன் என்பதில் ஒரு பெண்ணாக இருந்து பெருமையும் உவகையும் கொள்கிறேன் என்றால் அது மிகையில்லை.
So , My dear POPxo ! Happy Birth Day !
நாங்கள் POPxo வின் ஐந்தாவது வருடத்தை கொண்டாடி வருகிறோம்.
2018ல் நடந்த சில முக்கிய POPxo கொண்டாட்டங்கள் உங்களுக்காக
வைரலான விடியோக்கள்
லிப்ட்டில் பயணிக்கும் வித்யாசமான மனிதர்கள்
விதம்விதமான கோல்கோப்பா விரும்பிகள்
எண்ணெய் பசை தலைமுடிக்கான சில ஹேர்ஸ்டைல் வகைகள்
பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களை எரிச்சல்படுத்தும் விஷயங்கள்
ஒவ்வொரு பெண்ணும் பிகினி வாக்ஸ் செய்யும்போது நினைக்கும் விஷயங்கள்
சமூகவலைத்தளத்தை கலக்கிய சில மீம்ஸ் வகைகள்
வாழ்க்கை நம்மை ட்ரோல் செய்யும் நேரமிது !
கடவுளே ! உங்கள் அற்புதத்தைக் காட்டுங்கள் !
சரியான துணை நீதான் என் அன்பே!
இந்த வருடத்தின் மிக சிறந்த பெருந்தீனி
என் அம்மாவின் ரகசிய ஆயுதம்
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.