மொழிகளைக் கடந்து எப்போதும் நம் மக்களின் மனதில் நீக்க முடியாத இடத்தைப் பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. காலம் கடந்து நிற்கும் பல்வேறு திரைப்படங்களில் ஒரு பாகமாவே இருந்த நடிகை ஸ்ரீதேவியையும் காலன் அழைத்துக் கொண்டு போனது நம் அனைவரும் அறிந்த மிக பெரும் சோகம்.
தமிழில் இருந்து இந்திக்கு சென்றாலும் தமிழ் சினிமா மீதான காதல் ஸ்ரீதேவிக்கு எப்போதும் இருந்து வந்தது என்பது தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திற்குப் பின்னர் நடிகர் அஜித்திடம் பேசும்போதெல்லாம் தமிழில் ஒரு நல்ல படம் பண்ண வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பியிருப்பதாக அவரது கணவர் போனிகபூர் கூறியிருக்கிறார்.
அதனை மெய்படுத்தும் விதமாக இந்தியில் வெளியாகிய “பிங்க்” (Pink) திரைப் படத்தை போனி கபூர் தமிழில் தயாரிக்கிறார். இதில் நடிகர் அஜித் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை தமிழில் ஏற்கிறார். டாப்ஸி நடித்த கதாபாத்திரத்தை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே மற்றும் வித்யா பாலன் போன்ற பலர் இதில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்கின்றனர்.
பெண்களின் சுதந்திரத்தை மரியாதையாக நடத்துவது எப்படி எனும் கருவைக் கதையாகக் கொண்ட இப்படத்தின் தலைப்பை முடிவு செய்யாமல் ஷூட்டிங் தொடரப்பட்ட நிலையில் “நேர் கொண்ட பார்வை” எனும் பாரதியின் வரிகளைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்து நேற்று அதன் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இது பெண்களுக்கான பெருமை என்றும் கூறலாம். POPxoWomenWantMore
Boney Kapoor ventures into #Tamil films… Ajith Kumar in #NerkondaPaarvai… Directed by H Vinoth… Official adaptation of #Pink [with some changes]… First look poster: pic.twitter.com/g3bI3Bt565
— taran adarsh (@taran_adarsh) March 4, 2019
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற முக்கிய படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
விறுவிறுப்பான திரைக்கதை அமைக்கும் இயக்குனரும், அற்புதமான இசையைத் தரும் இசையமைப்பாளரும் ,திரைக்கதைக்கேற்ற துல்லியமான ஒளிப்பதிவைத் பதிவு செய்யும் ஒளிப்பதிவாளரும் இப்படத்திற்கு முடிவானது தமிழ் சினிமா ரசிகர்களை ஒரு மாபெரும் விருந்திற்காக போனி கபூர் தயார் செய்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
விஸ்வாசத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித் இதில் நடிப்பது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் வித்யாசமான அஜித்குமாரை பார்க்க விரும்பும் அனைவரையும் சந்தோஷப்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ள “நேர் கொண்ட பார்வை” திரையிலும் வெற்றி பெற வாழ்த்துகிறது POPxo !
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
டு லெட் திரைப்படம் – தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.