logo
ADVERTISEMENT
home / Astrology
‘செழிப்பா’ இருக்கணுமா ! ரொம்ப சிம்பிள்! இந்த ‘நம்பர்’ல பிறந்தவங்க ‘இத’ மட்டும் செய்ங்க!

‘செழிப்பா’ இருக்கணுமா ! ரொம்ப சிம்பிள்! இந்த ‘நம்பர்’ல பிறந்தவங்க ‘இத’ மட்டும் செய்ங்க!

செல்வசெழிப்பா வாழ யார்தான் விரும்ப மாட்டாங்க. என்னதான் போதும்னு நெனச்சாலும் புதுசு புதுசா வர பொருட்கள் விளம்பரங்கள் நம் ஆசையை தூண்டத்தான் செய்யுது இல்லீங்களா.

ஏற்கனவே நல்ல போன் இருந்தாலும் நஷ்டப்பட்டாவது புது போனை அப்க்ரேட் பண்ண எல்லாரும் நினைக்கறீங்க. ஆக நாம சந்தோஷமா இருக்க பணமும் ஒருவகையில் தேவைப்படத்தான் செய்யுது. அந்த காலத்துல எல்லாம் குறிப்பிட்டவங்க மட்டும் செல்வ செழிப்போடு இருந்தாங்க அதுக்கு காரணம் அவங்க சில ரகசிய பூஜை முறைகளை கடைபிடிச்சு மஹாலக்ஷ்மியோட அருளை பெற்றாங்க. அந்த ரகசியம் அவங்க பரம்பரைக்குள்ள மட்டுமே செயல்பட்டு அவங்க மட்டுமே ஐஸ்வர்யத்தோட வாழ்ந்தாங்க.

இப்ப அந்த ரகசியத்தை நீங்க எல்லோரும் தெரிஞ்சு புரிஞ்சு பயன்படுத்துனீங்கன்னா அந்த பணத்தை நம்ம கிட்ட ஈர்க்கற சக்தி நமக்கும் வசப்படும்.  நிச்சயம் பணம் நம்மகிட்ட நிரந்தரமா தங்கும்னு எண்ணியல் நிபுணர்கள் கூறியிருக்காங்க.

அந்த வகையில் உங்க பிறந்த தேதிக்கு ( Numerology) ஏற்ப ரொம்ப சுலபமா செய்யக் கூடிய சின்ன சின்ன பரிகாரங்கள் உங்களுக்கு சொல்றோங்க. நிச்சயம் நீங்க மனசுல மகாலக்ஷ்மி அருள் வேணும்னு பக்தியோட முழு அர்ப்பணிப்போட கொடுக்கப்பட்ட பரிகாரங்களை செய்ங்க நிச்சயம் உங்கள் வீட்ல செல்வச்செழிப்போட நீங்க இருப்பிங்க.

ADVERTISEMENT

எண் 1 (1,10,19,28)

நீங்க எண் ஒன்றில் பிறந்திருந்தால் உங்க பக்கத்துல நடக்கற விஷயங்கள் உங்கள பாதிக்கும். இதை தவிர்க்க நீங்க ஞாயிற்றுக் கிழமை நாட்கள்ல இனிப்பு சாப்பிடுங்க. உங்க விரல் ல மாணிக்கம் இருந்தா இன்னும் அதிர்ஷ்டம் பலமாகும்.

எண் 2 (2,11,20,29)

நீங்கள் என் இரண்டில் பிறந்தவர்கள் என்றால் உங்கள் மனம் லேசாக இருக்காது. இதனை சரி செய்ய நீங்க திங்கள்கிழமைல விரதம் இருங்க. அப்படி முடியலைன்னா உப்பு அதிகமா உள்ள ஊறுகாய் உணவை அன்னிக்கு அதிகமா சேர்த்துக்குங்க. உங்க விரலில் முத்து இருந்தா உங்களுக்கு இன்னும் சீக்கிரம் செல்வம் கிடைக்கும்.

ADVERTISEMENT

எண் 3 (3,12,21,30)

உங்க பிறந்த எண் மூன்றா இருந்தா மஞ்சள் நிற ஆடைகள் உங்களுக்கு செல்வ செழிப்பை ஏற்படுத்தும். மேலும் வியாழக்கிழமைல ப்ரஹஸ்பதியான குருவை வணங்குவது உங்களுக்கு ரொம்ப நன்மைகளை கொண்டு வரும்.

எண் 4 (4,13,22,31)

உங்க பிறந்த எண் 4 என்றால் நீங்க விநாயகரை கும்பிடனும். அவரை எங்க பார்த்தாலும் ஒரு வணக்கம் போடுங்க. ஓம் ப்ரஹ்ம் புரிஷ் பிரஹ்ம்மான் சாஹ் ரஹ்வ் நாமாங்கற மந்திரந்த அடிக்கடி உச்சரிங்க. அப்புறம் பாருங்க உங்க வீட்ல பணமழை தான்.

ADVERTISEMENT

எண் 5 (5,14,23)

நீங்க பிறந்தது எண் 5ல் என்றால் நீங்களும் விநாயகரை வழிபடணும். அதோட கூடவே புதன் கிழமைகள்ல பசு மாட்டிற்கு அருகம்புல் இல்லைனா வெல்லம் கொடுங்க. நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் பிராம்ம் ப்ரின்ம் பிரவும் ஸால் புதயே நாமா. நிச்சயம் ஐஸ்வர்யம் வீட்டு வாசல் கதவை தட்டும்.

எண் 6 (6,15,24)

உங்க பிறந்த எண் 6 என்றால் நீங்க வியாழக்கிழமை மகாலக்ஷ்மிய கும்பிடனும். கூடவே அவங்களுக்கு பிடிச்ச சுவையான இனிப்பை நீங்க சாப்பிடணும். நீங்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் டிராம்ம் டிரின்ம் ட்ரான்ம் சாஹ் ஷுக்ரேரே நமாஹ். இதை நீங்க தொடர்ந்து செய்ங்க. உங்க வாழ்க்கைல ரொம்ப உயரம் போவீங்க.

ADVERTISEMENT

எண் 7 (7,16,25)

உங்க பிறந்த எண் 7ன்னு வைங்க நீங்க ஒரு கருப்பு நாய்க்கு உணவு கொடுக்கணும். நீங்க விரும்பினது நடக்கணும்னா அல்லது பணவரவு அதிகம் இருக்கணும்னா சிவனுக்கு நீங்க அபிஷேகம் பண்றது ரொம்ப நன்மை தரும். ஐஸ்வர்யம் பெருகும்.

எண் 8 (8,17,26)

நீங்க பிறந்த எண் எட்டு அப்படின்னா நீங்க அரசமரத்துக்கு நெய் விளக்கு ஏத்தணும். சனீஸ்வரருக்கு ஊதுபத்திகள் கொளுத்தணும். இப்படி செய்து வந்தா வெகு சீக்கிரத்துலயே உங்க வீட்ல மகாலக்ஷ்மி தங்குவாங்க.

ADVERTISEMENT

பிறந்த எண் 9 (9,18,27)

நீங்க பிறந்த எண் 9 என்றால் நீங்க செவ்வாய்கிழமைகள்ல ஆஞ்சநேயரை கும்பிடனும். நீங்க தங்கம் அணிந்தால் உங்களுக்கு வெற்றி விரைவில் வரும். இந்த செயல்களை நீங்க தொடர்ந்து செய்ங்க. நிச்சயம் மஹாலக்ஷ்மி உங்க கூடவே தங்கிடுவாங்க.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

  

 

ADVERTISEMENT

 

 

 

29 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT