சீக்கிரமே டும் டும் டும்! காதலரை மணக்கவிருக்கும் நிக்கி கல்ராணி!

சீக்கிரமே டும் டும் டும்! காதலரை மணக்கவிருக்கும் நிக்கி கல்ராணி!

நடிகை நிக்கி கல்ராணியை (nikki galrani)  தெரியாத சினிமா ரசிகர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழுக்கு வந்த வேகத்திலேயே அதிக படங்களில் புக் ஆகி குறுகிய காலத்தில் நிறைய தமிழ்ப்படங்களில் நடித்த பெருமையை பெற்றவர்.

மரகத நாணயம், டார்லிங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாகின. இதில் சமீபத்தில் ஒரு மலையாள படத்தின் விழாவின் போது நிக்கி கல்ராணியிடம் காதல் பற்றிய கேள்வி ஒன்று வைக்கப்பட்டது.                                                                        

Youtube

மேடையில் அனைவர் முன்னிலையிலும் தனக்கு காதல் அனுபவம் இருப்பதாக நிக்கி கல்ராணி ஒப்பு கொண்டார். இதனால் கேள்வி கேட்டவர் மேலும் உற்சாகமாய் அடுத்த கேள்வியை வீசினார். அந்த அதிர்ஷ்டக்காரரை எங்கே சந்தித்தீர்கள் என்று கேட்டார்.

இதற்கு நேரிடையாக நிக்கி கல்ராணி பதில் சொல்லவில்லை. ஆனால் அவர் சென்னையில் இருப்பதாக சொன்னார். திருமணம் எப்போது என்கிற வழக்கமான கேள்வியும் எழுந்தது மூன்றாண்டுகளுக்கு பிறகு என்று பதில் அளித்திருக்கிறார் நிக்கி கல்ராணி.                                                                          

Youtube

இவ்வளவும் சொன்னவர் காதலனை எங்கே சந்தித்தீர்கள் என்கிற கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார். காதலர் சென்னையை சேர்ந்தவர் என்பதால் அவர் திரைத்துறையை சார்ந்தவராகத்தான் இருக்க முடியும் என்பது இதில் இருந்து தெரிகிறது.

சின்ன பட்ஜெட் படமா பிரச்னைகள் இல்லாமல் நடித்துக் கொடுக்க நிக்கி கல்ராணி இருக்கிறார் என்கிற பெயர் வாங்கி இருக்கும் நடிகையான இவரை கோடம்பாக்கம் இன்னும் மூன்று வருடத்திற்குள் பயன்படுத்திக் கொண்டால் உண்டு.                                                                                 

இனி எங்களுக்குள் எதுவுமில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவருக்கானது..ப்ரியங்காவின் பிரேக்கப் நோட்

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!