ஒரே பிரசவத்தில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!

ஒரே பிரசவத்தில் 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!

அதிசயமான நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டிருந்தாலும் சில அதிசயங்கள் நம்மை முற்றிலுமாக மெய்சிலிர்க்க வைத்து விடுகின்றன. ஒரு பிரசவத்தில் இரண்டு குழுந்தைகள்(babies) மூன்று குழந்தைகள் பிறந்து பார்த்திருப்போம் கேள்விபட்டிருப்போம். ஏன் நான்கு கூடு சமீபத்தில் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தெல்மா சியாகா. இந்த பெண்மணி கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர் சமீபத்தில் டெக்சாஸில் உள்ள வுமன்ஸ் ஆஸ்பிட்டல் ஆஃப் டெக்சாஸ் எனும் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்த பெண்ணிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4.50 மணியிலிருந்து 4.59 மணி இடைவெளிக்குள் நான்கு ஆண் குழந்தைகள்(babies), இரண்டு பெண் குழந்தைகள்(babies) பிறந்தது. தற்போது தாயும், குழந்தைகளும்(babies) நலமாக இருக்கின்றனர். இருப்பினும் குழந்தைகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இது 490 கோடி பிறப்புகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசயம் என சொல்லப்படுகிறது.


குழந்தை(babies) பெற்றெடுத்த கலைப்பில் இருந்தாலும் மிகப்பெரிய சாதணையை படைத்த சந்தோஷத்தில் தாய் மிகவும் தெம்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பதால் குழந்தகளின் ஆரோக்கியத்திற்கு ஏதேனும் குறைவு ஏற்படுமா என் அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.


ஆரோக்கியத்திற்கு குறைவு ஏற்படுவது உண்மை தான். காரணம் தாயின் முழு ஒத்துழைப்பும் தாய் பால் அரவணைப்பும் குழந்தைகளுக்கு(babies) கிடைப்பதில் சிரமம் ஏற்படும். பிறந்த முதலே குழந்தைகள் புட்டி பாலை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். காரணம் ஆறு குழந்தைகளுக்கும்(babies) ஏற்ற உணவு தாயிடம் இருந்து கிடைப்பது மிகவும். அதற்கு தாய் மிகவும் பலம் பொருந்தியவராக இருக்க வேண்டும். ஆறு குழந்தைகளை(babies) பெற்றெடுத்த களைப்பில் தாயில் பெலன் முழுவதும் உறுஞ்சப்பட்டிருக்கும்.
ஆறு குழந்தைகளை(babies) பாதுகாப்பது மிகவும் சிரமாக காரியம் தான். இதற்காக தான் அரசே முன்வந்து இது போன்று அசாதாரான காரியங்கள் நடக்கும் போது தம்மால் முயன்ற உதவிகளை செய்கின்றது.
பிறந்த குழந்தைகளின் எடைகள் 1 கிலே முதல் 2 கிலோ வரை உள்ளன. தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும்(babies) தாய் ஷின்னா மற்றும் ஷீரியல் என பெயரிட்டுள்ளார். மற்ற நான்கு ஆண் குழந்தைகளுக்கும் என்ன பெயர் வைப்பது என யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.


சரி நீங்கள் கேட்பது சரி தான் பிரசவம் எப்படி நடக்கிறது?
நிலை 1:
முதல் நிலை என்பது சுருக்கத்தில் தொடங்க, கருப்பை திறக்கும் வரை காத்திருக்கும். இதனை தான் முதல் நிலை என நாம் அழைக்கிறோம். இந்நிலையில் கர்ப்பப்பை வாய்பெருக்கம் என்பது 6 சென்டி மீட்டருக்கு குறைவாக இருக்க, இரண்டாம் கட்ட நிலையில் கருப்பை விரிந்து 10 சென்டி மீட்டராக இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட நிலையை அடைய, 20 மணி நேரம் ஆகிறது. முன்பே குழந்தை பிறந்த தாய்க்கு இந்த நிலை அவகாசமாக 14 மணி நேரமும் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த நேரம் மாறவும் செய்கிறது.
அதேபோல் இந்த நேரம் என்பது சிசேரியன் போது தேவைப்படுவதுமில்லை.
நிலை 2:
இந்த இரண்டாம் நிலை என்பது குழந்தையை தள்ளி வெளியில் எடுப்பதாகும். முதல் முறை தாயாக நினைப்பவர்கள், 3 முதல் 4 மணி நேரம் வரை இந்த நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.
நிலை 3:
இந்த மூன்றாவது நிலையில் தான் நச்சுக் கொடி வெளிவருகிறது. இதற்கான கால அவகாசமாக 30 நிமிடங்கள் காணப்படுகிறது.


சுகப்பிரசவத்தின் போது காணப்படுவது?
1. கர்ப்பத்தின் போது உடல் எடையை பராமரிக்க வேண்டியது அவசியம். குழந்தை அளவு பெரிதாக இருந்தால் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
2. உங்கள் மனதில் பயமிருந்தால்... அது சரிதானா? என்பதை உங்களுக்கு மிகவும் விருப்பமானவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். தேவையற்ற குழப்பம் வேண்டாம்.
3. உங்கள் பிரசவத்தின் நிலை அறிந்து அதற்கு ஏற்ப மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம்.
4. பிரசவத்தின் போது என்ன நடக்கும் என்பதை நீங்கள் முன்கூட்டியே யோசிக்க எண்ணினால், அதற்கு ஏற்ப உங்கள் மன நிலையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
5. பிரசவ அறையில் உங்களுடன் ஒருவர் உதவிக்காக இருத்தல் வேண்டும்.


இவை அனைத்தும் ஒரு குழந்தை பெற்றுடுக்க தாய் மார்க்கள் படும் கஷ்டத்தை தெரிவித்துள்ளோம். ஆனால் மேலே குறித்த தாய் 6 குழந்தைகளை 9 நிமிடத்தில் பிரசவித்திருப்பது மிகவும் ஆச்சரியமே. அதானால் தான் இது அதிசயமாக கருதப்படுகின்றது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo