இசையை நேசிக்கும் நெஞ்சங்களுக்காக கொஞ்சம்...

இசையை நேசிக்கும் நெஞ்சங்களுக்காக கொஞ்சம்...

இசை என்பது பல்வேறு பரபரப்புக்கு இடையில் தடுமாறும் மனதை இதப்படுத்தும் ஒரு மருந்து. வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர்கள் வரைக்கும் இசை அனைவருக்கும் தேவைப்படும் ஆறுதல் தரும்.


ஆறுதல் வேண்டும்போதுதான் என்றில்லாமல் எப்போதுமே சில பாடல்கள் நம் மனதை மயக்கும். அமைதியாக்கும். அப்படிப்பட்ட ஒரு சில பாடல்களை நீங்களும் கேட்டு பாருங்கள். (Melody) 


இதில் முடிந்தவரை எல்லா இசையமைப்பாளர் பாடல்களையும் இணைத்திருக்கிறேன். இதில் பட்டியலிட்டிருக்கும் பாடல்களின் அளவு என்பது நமது விருப்ப பாடல்களின் ஒரு சதவிகிதம் மட்டுமே. இன்னும் வேற்று மொழி பாடல்கள் வேறு இருக்கின்றன


ராஜபார்வை படம் இன்றைய தலைமுறைக்கு அதிகம் பரிச்சயம் இல்லை என்றாலும் அதில் வரும் அந்தி மழை பொழிகிறது பாடல் மழையைப் போலவே உங்கள் ஒவ்வொரு இதயங்களையும் ஊடுருவி செல்லும் அற்புதம் வாய்ந்தது.

Subscribe to POPxoTV

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வந்த பாடல் ராஜராஜ சோழன் நான்.. இரண்டு பெண்களை மணந்த ஒருவனின் அன்றாட வாழ்க்கை சந்தோஷங்களை மாண்டேஜில் காட்டப்படும் போது இசையோடு அந்த காட்சிகள் ஒன்றிணைந்து பாடலின் அழகை மேலும் ப்ரமாதமாக்கும்.

Subscribe to POPxoTV

கடலோரக்கவிதைகள் படத்தில் எந்த பாடலையும் நாம் ஒதுக்க முடியாத அளவிற்கு அற்புதமான மெலடிகளாக இருக்கும். அது இளையராஜாவின் அற்புதம் கூடவே கவிஞர்களின் வரிகளும் நம்மை எங்கோ கொண்டு செல்லும். ஆனாலும் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் பாடல் எனக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் பிடித்தமான பாடலாக இருக்கும்.

Subscribe to POPxoTV

மௌன ராகம் என்றாலே எல்லோருக்கும் நிலாவே வா தான் நினைவுக்கு வரும். வெகு சிலருக்கே மன்றம் வந்த தென்றல் பாடல் மனதுக்கு வரும். அதில் ஒருவர் நீங்கள் என்றால் எனது ப்ரியங்கள். பாடல் ஒரு ஆலாபனையில் ஆரம்பிக்கும்போதே அமர்ந்திருக்கும் இடத்தில் தலை தானாக சாய்ந்து கொண்டு ஆறுதல் தேடும்.

Subscribe to POPxoTV

ஒரு சில திரைப்படங்கள் சரியாக பேசப்படாமல் போகலாம். ஆனால் அதில் சில பாடல்கள் அந்த படத்தை மக்கள் மனதில் எப்போதும் உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் ஹே ராம். நான் எந்த பாடலை சொல்கிறேன் என்பதை நீங்களும் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆமாம் அதேதான். நம்மை சேர்த்த இசைக்கொரு நன்றி.

Subscribe to POPxoTV

இசையில் இளைஞர்கள் ஏங்கிய மாற்றத்தை கொண்டு வந்தவர் ரஹ்மான். அவரது இசையில் நிறைய மென்மையான பாடல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் கண்ணாளனே பாடல் மிக முக்கியமானது. மதங்களை கடந்து இதயங்கள் நேசிக்கும் போது அந்த ஏக்கங்களை அழகாக இந்த பாடலில் வெளிப்படுத்தி இருப்பார் ரஹ்மான்.

Subscribe to POPxoTV

தீண்டாய் மெய் தீண்டாய் என காதலனின் ஸ்பரிசத்திற்காக ஏங்கும் ஒரு கனவுப்பெண்ணின் பாடலை யாரும் மறக்க முடியாது. இஷா கோபிகரின் அழகில் மயங்குவதா இசையில் மயங்குவதா என இளைஞர்களிடம் பெரிய குழப்பமே இருந்த பாடல் இது.

Subscribe to POPxoTV

ரிதம் படம் மற்றும் அதன் தாக்கம் யாராலும் மறக்க முடியாது. பஞ்ச பூதங்களை பற்றிய ஐந்து பாடல்களில் நதியே நதியே அனைவரின் முதல் விருப்பம். ஆனால் தனியே தன்னந்தனியே பாடல் தனித்துவமானது என்பேன். தனது மகனோடு வாழும் சிங்கிள் மாம் மீனாவும் அவரது கணவரும் தனது மனைவியும் ஒன்றாக இறந்தவர்கள் என்பதை அறிந்த அர்ஜுனின் ஏக்கமும் அற்புதமாக வெளிப்படும் விதம் அழகானது.

Subscribe to POPxoTV
Subscribe to POPxoTV

ஆயுத எழுத்து படம் எதிர்பார்த்தபடி வெற்றியடையவில்லை ஆனாலும் பாடல்கள் எல்லாமே ஹிட்டாகியது. அதிலும் நெஞ்சம் எல்லாம் காதல் பாடல் இளசுகளின் ஸ்பெஷல். காமத்திற்காக எங்கும் காதலர்களுக்கான ஸ்பெஷல் பாடல் இதுதான். உங்கள் காதலுடன் ஆன நைட் அவுட்டில் இருவரும் சேர்ந்து கேட்க வேண்டிய பாடல் இது.

Subscribe to POPxoTV

யுவன் ஷங்கர் என்றாலே மெலடி என்கிற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. அவரது ரகசியம் பேசும் குரலில் வெளியான பாடல்கள் பல எல்லோரின் மனதையும் கொள்ளையடித்தது. அப்பாவை போலவே அவரது குரலில் பாடப்படும் பாடல்கள் எல்லாமே அற்புதம்தான்.


ராம் படத்தில் வரும் நிழலினை நிஜமும் பாடல் அந்த வயது ஆண்களின் விருப்ப பாடலாக இருந்தது. அம்மாவுக்கும் மகனுக்கும் இடையேயான அற்புதங்களை இந்த பாடலில் நம்மால் உணர முடியும்.


புதுப்பேட்டை படத்தில் வரும் ஒரு நாளில் பாடல் மிகமிக முக்கியமானது. இது வாழ்வின் அர்த்தத்தை 5 நிமிடங்களில் நமக்கு சொல்லி தரும் மாய வரிகள் கொண்ட பாடல். அதுவும் யுவனின் குரலில் பாடல் நம்மை வேறெங்கோ கொண்டு செல்லும் என்பது உறுதி.


எஸ்எம்எஸ் சிவா மனசுல சக்தி படத்தில் வரும் ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் நாம் அமைதியாக இருந்தாலும் நமக்குள் எங்கோ ஒளிந்திருக்கும் நமது காதல் வலிகளை வெளியேற்றும் வழியாக மாறியிருக்கும் மாயம் நம்மால் புரிந்து கொள்ள முடியாதது.

Subscribe to POPxoTV
Subscribe to POPxoTV

ஜிவி பிரகாஷின் இசையில் இந்த பாடல் ஒரு பெண்ணின் காதல் ஏக்கங்களை நமக்குள் அற்புதமாக கடத்தி போகும். சைந்தவியின் குரல் மேலும் இனிமை சேர்க்கும். ஜிவிபி மற்றும் சைந்தவியின் சேர்க்கை இருந்தால் பாடல் அற்புதமாக இருக்கும். விழிகளில் ஒரு வானவில்

Subscribe to POPxoTV

இதே போல ஜிவிபி மற்றும் சைந்தவியும் இணைந்த இன்னொரு பாடல் யார் இந்த சாலையோரம்.. தலைவா படத்தில் விஜய் மற்றும் அமலா பால் இணைந்து நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் இந்த பாடலுக்கு ப்ளஸ் ஆக இருக்கும்.

Subscribe to POPxoTV

ஜிவி பிரகாஷின் இன்னொரு மெலடி பாடல் இது அஜித்திற்கான ஸ்பெஷல் மெலடி ரகம். விழியில் உன் விழியில்..


 

Subscribe to POPxoTV

ஹாரிஸின் மெலடிகள் எல்லாமே ஒரே ரிதமாக இருக்கின்றன என்று இளைஞர்கள் கிண்டல் செய்தாலும் கேட்காமல் இருப்பதில்லை இவரது இசையில் பீமா படத்தில் இருந்து முதல் மழை எனை நனைத்ததே ..

Subscribe to POPxoTV

ஹாரிஸின் இன்னொரு அற்புதமான மெலடி.. சிம்புவின் பாடல்களில் சிறந்த பாடல்களில் ஒன்று.. உயிரே என்னுயிரே...


 

Subscribe to POPxoTV

ஹாரிஸ் இசையில் வெளியான படங்கள் எல்லாமே பாடலுக்காகவே படங்கள் ஓடின ரகம்தான். எந்த பாடலையும் தள்ளி விட முடியாது. சில முக்கிய பாடல்களில் ஒன்றுதான் சமீபத்திய என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடல். இன்னமும் படம் வெளிவராத நிலையில் பாடல் ஹிட்டாகி இருக்கிறது.மறுவார்த்தை பேசாதே..

Subscribe to POPxoTV

சந்தோஷ் நாராயணன் இளையராஜாவின் இன்னொரு பரிமாணம் போல இருக்கிறார். இவரது பாடல்களும் அதற்கென அமையும் வரிகளும் காலம் கடந்தாலும் நினைவில் நிற்கும் பாடல்களில் ஒன்றாக இருக்கும்.
ஆகாசத்தை நான் பாக்குறேன் பாடல் அதில் ஒன்று

Subscribe to POPxoTV

மெட்ராஸ் படத்தில் நான் நீ நாம் .. பாடல் எவர்க்ரீன் வரிசைகளில் ஒன்று. நண்பனின் மரணத்திற்கு பழிவாங்க துடிக்கும் காதலனின் மனதை தமது காதலால் ஆற்றுப்படுத்தும் பாடல்தான் இந்த பாடல்

Subscribe to POPxoTV

இவரது இன்னொரு மென்மையான படைப்பு மோகத்திரை .. மூன்றாம் பிறை

Subscribe to POPxoTV
Subscribe to POPxoTV

இந்த பாடல் தேர்வுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள். மேலும் வேறு எந்த மாதிரி பாடல்களை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள்.எனது குறைகளையும் குறிப்பிடுங்கள். நன்றி.


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.