நடிகை தேவயானியின் காதல் ரகசியங்கள்! சுவாரசியமான காதல் கதை!

நடிகை தேவயானியின் காதல் ரகசியங்கள்! சுவாரசியமான காதல் கதை!

தேவயானி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக இருந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்த பெருமை தேவயானிக்கு இருக்கிறது. இவரது அமைதியான முகமும் கொஞ்சும் தமிழும் இவருக்கென தனிப்பட்ட ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மார்க்கெட் நன்றாக இருக்கும் போதே காதல் வயப்பட்ட தேவயானி (devayani) நடிப்பைத் துறந்து குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பினார். திரையுலகில் நன்றாக ஜொலித்துக் கொண்டிருக்கும்போதே அதில் இருந்து விலகிக் கொள்ள ஒரு தைரியம் தேவை. அது காதலின் பெயரால் தேவயானிக்கு இருந்தது.

தனது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதிக்காததால் தேவயானி வீட்டை விட்டு ஓடி வந்துதான் திருமணம் செய்து கொண்டாராம். இப்போது காதல் கணவர் ராஜகுமாரனுடன் மகள் பிரியங்கா மற்றும் இனியா உடன் இனிமையாகத் தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார்.

 

Youtube

தேவயானிக்கு பிடித்தது அவரது அம்மா வைக்கும் ரசம் தானாம் . பல நடிகைகள் தனக்கு கான்டினென்டல் உணவுகள் தான் பிடிக்கும் எனும்போது தேவயானிக்கு பிடித்தது ரசம் சாதம்தான் என்பது அவரின் உண்மைத் தன்மை மற்றும் எளிமையை உணர்த்துகிறது.

குடும்பப் பெண்மணி கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்த நடிகை தேவயானிக்கு குடும்ப உறவுகளில் மிகவும் பிடித்தவர் அவரது அப்பாவைப் பெற்ற அம்மாதானாம். பாட்டி நல்ல பாடல்கள் பாடுவதால் தேவயானிக்கு அவரை மிகவும் பிடிக்குமாம்.

தனது குடும்பத்தோடு ஓய்வு எடுக்க என அந்தியூர் தாலுகாவில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார்களாம் தேவயானி ராஜகுமாரன் தம்பதியினர். சின்னமங்கலம் கிராமத்தில் தோட்டத்துடன் கூடிய அந்த வீடுதான் தேவயானிக்குப் பிடித்த இடமாம்.

Youtube

இது தவிர வெளிநாடுகளில் ஸ்விஸ்ச்சர்லாந்து அவருக்கு பிடிக்குமாம். இரண்டு தடவை சென்றிருக்கிறாராம். மற்றபடி பெண் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தேவயானி. தன்னை விட அழகாக இருக்கும் இரண்டு அழகிய பெண் குழந்தைகள்தான் தேவயானியின் பொக்கிஷங்கள்.

தேவயானிக்கு நாய்கள் வளர்ப்பது மிகவும் பிடித்த வேலையாம். தான் 17 வருடங்களாக வளர்த்த பாமி எனும் பொமரேனியன் நாய் இறந்து போதுதான் மிகுந்த மனவலி ஏற்பட்டதாக தேவயானி கூறி இருக்கிறார்.                     

வெள்ளித்திரையில் சிறந்த கதாநாயகி ஆக விளங்கிய தேவயானி சின்னத்திரையில் கோலங்கள் சீரியல் மூலம் நல்ல பெயரைப் பெற்றார். எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களால் மறக்க முடியாத அந்த சீரியல் தனக்குப் பிடித்த சீரியல் என்கிறார் தேவயானி.                                       

கோலங்கள் சீரியல் முடிந்த நிலையில் மீண்டும் எப்போது தேவயானி நடிப்பார் என்கிற ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது. இதற்கு காலம் பதில் சொல்லக் கூடும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                       

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.