வள்ளுவன் உடை குறித்து சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி! அட என்னம்மா நீ...

வள்ளுவன் உடை குறித்து சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி! அட என்னம்மா நீ...

அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து கூறு அதிக சர்சையில் சிக்கி கொள்பவர் தான் கஸ்தூரி(kasturi). தற்போது தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சணையாக மாறி வரும் திருவள்ளுவர் சிலை குறித்த கருத்து தெரிவித்து நெட்டீசன்கள் மத்தியல் பேசும் பொருளாக மாறி வருகின்றார் நம்ம நாயகி. அப்படி என்ன சொன்னார் என்பதை தெரிந்துக்கொள்ள கீழே முழுவதுமாக படிங்களாமே.

கடந்த இரண்டு நாட்களாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் எந்த மதம்? அவருடைய உடை எந்த வண்ணம்? என திராவிட கட்சிகளும் பாஜகவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உள்ள திருவள்ளுவரின் உருவமே கற்பனையாது என்பது தெரிந்தும், அவருக்கு காவிச்சாயம் பூசுவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் என திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை மக்கள் வெறுப்புடன் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் எந்த ஒரு சமூக பிரச்சனைக்கும் தனது மனதில் தோன்றுவதை தைரியமாக சொல்லும் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கூறியபோது, ‘வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே...-  திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க  பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு.

திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல. இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும்  முடிவு  கிடைச்சிருமா? என்று பதிவு செய்துள்ளார்.

 

Twitter

சும்மா விடுவார்காள நம்ம நெட்டீசன்கள். அதற்கு பதில் அளித்து கஸ்தூரியை திக்கு முக்காட வைத்துவிட்டார்கள். இப்படித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனது கருத்துகளால் சக கவுஸ் மெட்ஸ்களால் வெறுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து அன்பை காட்டிய போதும் ஏனோ சக கவுஸ் மெட்ஸ் அவரை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டினர். இருந்த போதும் மீண்டும் மீண்டும் உறவை புதுப்பிக்க நினைத்தார். வனித்தாவிற்கு இருந்த இனக்கம் கூட இவருக்கு இல்லாமல் போனது வருத்தம் தான்.

இவரை பற்றிய பிம்பம் பிக்பாஸ் மூலமாக உடைக்கப்பட்டது. கமல் கூட அநேக இடங்களில் கஸ்தூரியின் மவுனம் குறித்து கேள்வி எழுப்பினார். மறியாதை இல்லாத இடத்தில் பேசாமல் இருப்பது நல்லது என தெரிவித்திருந்தார். ஆனால் சமூக வளைதளங்களில் மட்டும் தனது கருத்தை தெரிவித்துவிட்டு மறைந்து கொள்வதாகவும் ஒரு கருத்து அவரை சுற்றி வருகின்றது.

ஆனால் இதை அனைத்தையும் தாண்டி கஸ்தூரி மிக சிறந்த திறமைசாலி. நன்கு படித்தவர். 5 மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். நடிப்பு என்பது அவர் விருப்பப்பட்டு வந்த துரை. நல்ல வசதி படைத்த பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். விமானம் ஓட்டும் உரிமம் பெற்ற ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர். நல்ல மேளார் என்கிற பட்டம் பெற்றவர். இரண்டு குழந்தைகளுக்கு தாய். அமெரிக்காவில் செட்டிளானார். ஆனால் இந்தியா அவருக்கு மிகவும் பிடித்த தேசம் என்பதால் இங்கு அடிக்கடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இத்தனை நற்குணங்கள் படைத்த கஸ்தூரிக்கு வழக்கம் போல் வள்ளுவரின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இவருக்கு பொது மேடைகளில் எதை பேச வேண்டும் எதை பேசக்கூடாத என சரியாக புரிவதில்லை என பல திரை உலகத்தை சேர்ந்த நபர்கள் தெரிவித்துள்ளர். இந்த விஷயம் நம்ம கஸ்தூ மேடத்திற்கு தெரியுமா என்று தெரிய வில்லையே!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!