முதல் முத்தத்தின் போது என் உதடுகள் உறைந்து விட்டன.. 'தலைவி' கங்கணாவின் காதல் அனுபவங்கள்!

முதல் முத்தத்தின் போது என் உதடுகள் உறைந்து விட்டன.. 'தலைவி' கங்கணாவின் காதல் அனுபவங்கள்!

சர்ச்சைக்குரிய பிரபலங்களில் முதலிடத்தில் இருப்பவர் கங்கணா ரணாவத். பாலிவுட் நடிகையான இவர் சில சமயம் தைரியமாக சில விஷயங்களை சொல்லி விடுவார். அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும் கவலைப் பட மாட்டார்.

அப்படிதான் சமீபத்தில் டெல்லியில் JNU ஸ்டேடியத்தில் நடந்த இளைஞர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்கணா (kangana ranaut) தன்னுடைய முதல் காதல், முதல் முத்தம் பற்றியெல்லாம் பேசி இளைஞர்க இளைஞிகளை கவர்ந்து விட்டார்.

தன்னுடைய முதல் பாய் பிரென்ட் பற்றி நினைவு கூர்ந்த கங்கணா , அப்போது அவருக்கு 18 வயது என்றும் அவருடைய பாய் பிரெண்டிற்கு 28 வயது என்றும் தன்னுடைய தோழியின் டேட்டிற்கு கூட சென்ற போது தன்னைப்போலவே நண்பனுடன் வந்த அவளின் டேட் உடைய பிரென்ட்டை கங்கணாவிற்கு பிடித்து விட்டதாம்.

Youtube

அவர் ஒரு பஞ்சாபி. அவர் என்னை பார்க்கும் பார்வையிலேயே நீ ஒரு குழந்தை என்பதான அர்த்தம் இருந்தது. அது என் இதயத்தை உடைய செய்தது. நான் அந்த டேட்டிங் விளையாட்டிற்கு புதியவள் என்பதை பார்த்த உடனே அந்த அழகான பஞ்சாபி கண்டுபிடித்து விட்டார்.

அதன் பின்னர் அவருக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்புவேன். ஒரு வாய்ப்பு கொடுங்கள் நான் வளர முயற்சிக்கிறேன் நான் காதலில் ஒரு obsesseive என்றெல்லாம் அனுப்பி இருக்கிறார் கங்கணா.              

அதைப் போலவே தன்னுடைய முதல் முத்தம் பற்றிக் குறிப்பிட்ட கங்கணா எல்லோரும் சொல்வதை போல சிலாகிப்பதை போல அது magic ஆக இல்லை messy ஆக இருந்தது என்று கூறினார் கங்கணா. முதல் முத்தத்திற்காக உள்ளங்கைகளில் முத்தம் கொடுத்து பயிற்சி எடுத்த கங்கணா அதனை செயல்படுத்த முயன்ற போதுதான் பல்ப் வாங்கி இருக்கிறார்.

Youtube

முதல் முத்தத்தின் போது கங்கணாவின் உதடுகள் இறுகி உறைந்து விட்டதாம். அதன் பின் அந்தப் பையன் கொஞ்சம் லேசாக உன் உதடுகளைத் திறக்க முடியுமா என்று கேட்டானாம்! இப்படித் தான் தன்னுடைய முதல் முத்தம் அலங்கோலமாக முடிந்தது என்று கூறியிருக்கிறார்.

அதைப் போலவே தன்னுடைய 15வது 16வது வயதில் தனக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியருடன் காதல் வயப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். சக மாணவர்களுக்கெல்லாம் அப்போதுதான் மீசை முளைக்க ஆரம்பித்த சமயத்தில் அழகான மீசையுள்ள ஆசிரியர் மீது தனக்கு காதல் ஏற்பட்டது என்றும் சாந்த் சுப்பா பாதல் பாடல் அப்போதுதான் வெளிவந்தது என்றும் அப்பாடலை ஆசிரியரை நினைத்தபடி கற்பனை செய்து கொண்டேன் என்றும் எக்ஸ்ட்ரா தகவலையும் கங்கணா வெளியிட்டார்.                      

Magical லோ messy யோ எது எப்படியோ முதல் முத்தம் யாராலும் மறக்க முடியாது என்பதை கங்கணாவும் நிரூபித்துத்தான் இருக்க்கிறார்,

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                              

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!