நடிகை கல்பனாவை யாராலும் மறந்து விட முடியாது. யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரர். கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதால் இயல்பாகவே கல்பனா அப்பாவி பெண்ணாக இருப்பாரோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கல்பனா (kalpana) . இவரது சகோதரிகள் ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி. இருவருமே நடிகர்கள் என்றாலும் ஊர்வசி பல திரைப்படங்களில் கதாநாயகி அந்தஸ்திலேயே நடித்து வந்தார்.
Youtube
நடிகை கல்பனாவை சின்ன வீடு திரைப்படத்தில் கணவனுக்கு அடங்கிய தியாகங்கள் கொண்ட பெண் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி இருப்பார் இயக்குனர் பாக்யராஜ். சுவாரஸ்யமான அந்தக் கதாபாத்திரத்தை அனைவர் பரிதாபத்தையும் பெற்றவராக மாற்றி நடித்து முதல் படத்திலேயே அசத்தியவர் கல்பனா.
கணவனை நேசிக்கும் பெண்ணாகவும் அதே சமயம் அவன் செய்யும் துரோகங்களை பொறுத்துக் கொள்ளும் பெண்ணாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்திருப்பார் கல்பனா. மனைவின்னா சின்ன வீடு கல்பனா மாதிரிதான் இருக்கணும் என ஆணாதிக்க மனம் படைத்தவர்கள் வெளிப்படையாகவே பேசும் வண்ணம் அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் கே பாக்கியராஜ்.
ஒரு காட்சியில் பாக்கியராஜும் கல்பனாவும் தாம்பத்யம் கொள்ளாததால் மலடி என்கிற பெயர் கல்பனாவிற்கு வரும். அதனால் மனம் இளகிய (!) பாக்கியராஜ் மனைவியோடு கடமைக்கு தாம்பத்தியம் கொள்வார். அதன் பின்னர் சுயமரியாதை காரணமாக கல்பனா தன்னை அவமதித்து விட்டதாகவே அழுவார். மிக மிக இயல்பாக ரொம்ப அசாத்தியமாக அந்த கனமான கதாபாத்திரத்தை கையாண்டிருப்பார் நடிகை கல்பனா
அதன் பின்னர் திருமதி ஒரு வெகுமதி , சிந்து நதி பூ, சதிலீலாவதி போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார். 1998ல் அணில் குமார் என்பவரைத் திருமணம் செய்த இவருக்கு ஸ்ரீமயி (srimayee) என்கிற மகள் ஒருவர் இருக்கிறார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2012ல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
Youtube
கடந்த 2016ம் ஆண்டு ஒரு படப்பிடிப்பின் போது மாரடைப்பு ஏற்பட மரணம் அடைந்தார் கல்பனா. அவரது மகள் ஸ்ரீமயி சித்தி ஊர்வசியின் (oorvasi) பாதுகாப்பில் தற்போது இருக்கிறார். விஸ்காம் மாணவியான இவருக்கு படிப்பை முடிக்கும் முன்னரே மலையாள சினிமாவில் வாய்ப்பு வந்திருக்கிறது.
நடிகை கல்பனாவிற்கு தன்னுடைய மகள் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் பேஷன் ட்ரெஸ் காம்பெடிஷனில் கூட கலந்து கொள்ள ஸ்ரீமயி கூச்சப்படுவாராம். அதனால் தன்னுடைய கனவைப் பற்றி மகளிடம் சொல்லாமலே மறைந்திருக்கிறார் கல்பனா.
மகளுக்கு பிடிக்காத ஒன்றை தன்னுடைய விருப்பத்திற்காக மாற்ற விரும்பாத கல்பனா இதனைப் பற்றிய தன்னுடைய ஆசைகளை அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்திருக்கிறார். அது கல்பனாவின் மறைவிற்கு பின்னரே அவரது மகளான ஸ்ரீமயிக்கு தெரிய வந்திருக்கிறது.
Youtube
இப்போது சினிமா வாய்ப்பு பெற்றிருக்கிரும் ஸ்ரீமயி அம்மா தன்னுடைய கனவை என்னிடம் கூறவே இல்லை. பாட்டியிடம் மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும் குறுகிய காலத்திலேயே எனக்கு நடிகையாகும் வாய்ப்பு அம்மாவின் ஆசி மூலமாகவே எனக்கு கிடைத்திருப்பதாக நம்புகிறேன் என்று நெகிழ்கிறார்.
தாத்தா, பாட்டி , அம்மா, சித்தி , பெரியம்மா என அனைவருமே நடிப்புத்துறையில் நடிப்புத்துறையில் இருந்தாலும் நானும் நடிக்க வருவேன் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்ததில்லை.
சினிமாவில் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அர்ப்பணிப்போடு இருந்தால் மட்டுமே இங்கே ஜெயிக்க முடியும் என்று நடிப்பதற்கு முன்பே தனது தொழில் மீதான மரியாதையை வெளிப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீமயி.
நிச்சயம் ஸ்ரீமயி சொன்னதை போல நடிப்பு குடும்பத்தில் வாரிசாக இருந்தாலும் நேர்மையும் அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே எந்த வேலையாக இருந்தாலும் ஜெயிக்க முடியும். இதனை சரியாக புரிந்து கொண்ட ஸ்ரீமயி வெள்ளித்திரையில் வெற்றிகளைக் குவிப்பார் என்றே தோன்றுகிறது.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!