மோனல் தற்கொலை வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின் திருப்பம் - கலாமாஸ்டர் மற்றும் மும்தாஜ் கைது ?

மோனல் தற்கொலை வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின் திருப்பம் - கலாமாஸ்டர் மற்றும் மும்தாஜ் கைது ?

தமிழ் சினிமா நடிகைகள் வாழ்வில் சிலசமயம் பல சோகங்கள் பல துரோகங்கள் நிகழ்ந்தபடிதான் இருக்கின்றன. பல நடிகைகள் அதனை தைரியமாக கடந்து செல்கின்றனர். ஒரு சிலரால் அப்படி முடிவதில்லை. அப்படிப்பட்ட நடிகைகளில் பலர் தற்கொலை செய்திருக்கின்றனர்.

சில்க் ஸ்மிதா தொடங்கி சமீபத்திய டிவி நடிகைகள் வரை இந்தப் பட்டியலில் அடக்கம். இதில் நடிகை சிம்ரனின் தங்கை மோனலும் (monal) தப்பிக்கவில்லை. 2002ம் ஆண்டு சென்னை வடபழனி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

 

Youtube

நடிகை மோனல் சில முக்கியமான தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பார்வை ஒன்றே போதுமே திரைப்படம் இவருக்கு நிறைய ரசிகர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதன்பின்னர் அதில் நடித்த நடிகர் குணால் உடன் இவர் சில படங்களில் ஒன்றாகவே நடித்தார்.

நடிப்பு வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில் கடந்த 2002ம் ஆண்டு நடிகை மோனல் தற்கொலை செய்து கொண்ட போது திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது (monal sucide) . அந்த சமயத்தில் மோனலின் வளர்ப்பு தாய் மீது மோனலின் இறப்புக்கான காரணங்கள் சுமத்தப்பட்டது.

Youtube

ஆனால் நடிகை மோனலின் அக்காவான நடிகை சிம்ரன் (simran) அப்போதே அதனை மறுத்திருந்தார். கூடவே தங்கை மோனல் கலா மாஸ்டரின் தம்பியான ப்ரசன்னாவைக் காதலித்ததாகவும் அந்தக் காதலை கலா மாஸ்டர் (kalamaster) வீட்டில் ஏற்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. இதனால் பிரசன்னா (prasanna) தன்னுடைய காதலில் இருந்து விலகிக்கொள்வதாக மோனலிடம் கூறி இருக்கிறார்.

பிரசன்னா மோனலிடம் கடுமையாக நடந்து கொண்ட இரண்டாவது நாளில் மோனல் தற்கொலை செய்து கொண்டார். ஆகவே மோனல் தற்கொலையில் கலா மாஸ்டர் பின்னணி இருப்பதாக சிம்ரன் கூறி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் மோனல் இறந்த வீட்டில் நடிகை மும்தாஜ் (mumtaz) சென்று முக்கிய தடயங்களை அழித்து விட்டதாகவும் குற்றச்சாட்டினை வைத்திருந்தார்.

Youtube

அடிப்படையில் மோனல், சிம்ரன். மும்தாஜ் ஆகியோர் நல்ல நண்பர்களாக இருந்திருக்கின்றனர். தம்பி பிரசன்னா காதல் விவகாரத்தில் கலா மாஸ்டர் குறுக்கிட்டு மோனலை பலமுறை தொலைபேசியில் மிரட்டி இருக்கிறார். இது பற்றியெல்லாம் மோனல் தன்னுடைய டைரியில் குறித்தும் வைத்திருக்கிறார்.

மோனலின் தற்கொலை சமயத்தில் கலா மாஸ்டர் மும்தாஜிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் மோனல் வீட்டிற்கு சென்று அங்கிருந்த டைரி மற்றும் சில காதல் தடயங்களை மும்தாஜ் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக சிம்ரன் புகார் கூறி இருந்தார். இது பற்றி அப்போதைய போலீசார் மும்தாஜிடம் விசாரணை செய்து வந்தனர். ஆனால் சில நாட்களில் இந்த விசாரணைகள் எல்லாம் எதன் காரணமாகவோ நீர்த்து போய்விட்டது.

 

 

Youtube

மோனலின் இறப்புக்கு பிறகு நடிகை மும்தாஜிற்கும் மார்க்கெட் குறைந்தது. சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிக் கொண்டிருந்தவர் அதன் பின்னர் காணாமல் போனார். மீண்டும் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவர் வாய்ப்பை வழங்கியவரும் அதே கலா மாஸ்டர்தான்.

கடந்த பிக் பாஸ் சீசன் 2ல் மும்தாஜ் பங்கேற்ற போதும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து மும்தாஜ் வீட்டிற்கு சென்றபின்னர் கலா மாஸ்டர் மும்தாஜை சந்தித்து பாராட்டி இருந்தார். இது எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது சிம்ரனின் குற்றசாட்டு நியாயமாக இருக்கலாமோ என்கிற ரீதியில் மக்கள் யோசித்து வந்தனர்.

 

மோனல் மறைவிற்கு பின்னர் சில வருடங்களில் சிம்ரனும் திரை உலகில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் இப்போது 17 வருடங்களுக்கு பிறகு சிம்ரன் மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தங்கை மோனலின் வழக்கில் சில முக்கிய ஆதாரங்கள் சிம்ரன் கையில் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதனை வைத்தே இப்போது மீண்டும் அந்த வழக்கை உயிர்ப்பிக்க இருக்கிறார் சிம்ரன். எந்த மும்தாஜ் உடன் விசாரணை முடிந்து போனதோ அங்கிருந்தே மீண்டும் இந்த வழக்கு ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மும்தாஜ் தடயங்களை அழித்த சாட்சிகளை வைத்தே இந்த வழக்கு மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஆதாரங்கள் உறுதியானால் கலா மாஸ்டர் மற்றும் மும்தாஜ் கைதுக்கு வாய்ப்பிருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Youtube
Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!