பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான காப்பான் - திரை விமர்சனம்

பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான காப்பான் - திரை விமர்சனம்

இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர்  நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் இன்று காலை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான காப்பான் படத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். 

கே.வி. ஆனந்த், சூர்யா காம்பினேஷனில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், காப்பான் மூன்றாவது படமாகும். இந்த படத்தில் ஸ்பெஷல் ப்ரோடெக்ஷன் குரூப் (SPG) என்றழைக்கப்படும் கமாண்டோக்களின் பணிகள் குறித்து காட்டப்பட்டுள்ளது. ஸ்பெஷல் ப்ரோடெக்ஷன் குரூபில் இருப்பவர்கள் நாட்டின் பிரதமரை  பாதுகாக்கின்றனர். 

twitter

அவர்களின் கடின உழைப்பு மற்றும் அன்றாட பணிகள் குறித்து விவரிக்கப்பட்டுளளது. அதில் ஒருவராக சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு அருமையாக உள்ளது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்க முடியும் என்பதை சூர்யா நிரூபித்துள்ளார். இதற்கு முந்தைய படங்களை விட, காப்பான் படத்தில் சூர்யாவின் நடிப்பு திறமை வெளிப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். அவருடைய வசனங்கள், பாடி லாங்குவேஜ் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. திரையில் மோகன்லால் வரும் காட்சிகளில் அரங்கமே அதிர்கிறது. மோகன்லால், சூர்யா மட்டுமின்றி அனைவரும் தங்கள் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர். சயீஷா, ஆர்யா மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். 

 

twitter

காப்பான் திரைப்படம் ரோலர் கோஸ்டர் ரைடு போன்று உள்ளது. அனைவரும் தங்கள் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். படத்தில் டல்லான நிமிடங்கள் என்பதே இல்லை. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும். சூர்யா மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என்றே கூற வேண்டும். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பிஜிஎம் மற்றும் பாடல்கள் அருமையாக வந்துள்ளது. 

அடுத்து என்ன நடக்கும் என்று தியேட்டரில் உள்ளவர்களை ஆவலுடன் அமர வைத்துள்ளது காப்பான் திரைப்படம். ஆக்ஷன் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. பாகிஸ்தானை எதிர்க்கும் வழக்கமான நாட்டுப்பற்றாக இல்லாமல் இந்த படம் மூட நம்பிக்கைகளை உடைக்கும் வகையில் இருக்கிறது. 

பிரதமர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு, விவசாயிகள் போரட்டம், காஷ்மீர் பிரச்னை, இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனை உள்ளிட்ட அனைத்து சமூக பிரச்சனைகள் குறித்தும் படத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். படத்தில் பலம் வசனங்கள் தான். 

twitter

சிங்கம் சூர்யாவுக்கு புலிமுருகன் மோகன்லால் கை கொடுத்துள்ளார். சூர்யா எதிர்பார்த்த வெற்றி கிடைத்துவிட்டது என்று திரையுலகினர் தெரிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட என்ஜிகே திரைப்படம் தோல்வி அடைந்ததால், காப்பானின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் சூர்யா. 

அவரது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை என்றே தெரிகிறது.  இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படம் பார்த்த சூர்யா ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். 

"காப்பான் நிச்சயம் பிளாக்பஸ்டர் படம். விறுவிறுப்பான திரைக்கதையும், சண்டைக் காட்சிகளும் நிறைந்திருக்கிறது. அயன் படம் போல் ஒரு சரியான கமர்சியல் எண்டர்டெயினர் படமாக வந்துள்ளது காப்பான். சிங்கம் 2 போல் இந்த படமும் மாபெரும் வெற்றி அடையும்" என சூர்யா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

தான் ஒரு தரமான இயக்குனர் காட்டியிருக்கிறார் கே.வி.ஆனந்த். நிறைய அதிரடி திருப்பங்கள் செமையாக உள்ளன. அயன் மாதிரி ஒரு படம் இது. சூர்யா, மோகன் லால், ஆர்யா என அனைவரையும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்" என கர்நாடகாவை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். 

மொத்தத்தில் காப்பான் படம் திரைப்பட ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைத்துள்ளது! 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!