ஒரு சாதாரண பெண்ணான ஜீவஜோதியை அசாதாரண பெண்மணியாக மாற்றியது அவர் வாழ்வில் புயலாக வந்த சரவணபவன் (saravana bhavan) முதலாளி அண்ணாச்சி என்றால் அது மிகையில்லை. ஒரு நல்ல குடும்பத்து பெண்ணாக காதலித்த சாந்தகுமாருடன் திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையில் நுழைந்தவரை அண்ணாச்சியின் மோகவெறி சீரழித்து போட்டது.
ஏற்கனவே இரண்டுபேரை திருமணம் செய்திருந்த அண்ணாச்சிக்கு மூன்றாவதாக தன்னிடம் மேலாளராக வேலை பார்த்தவரின் மகளான ஜீவஜோதி மீதும் மோகம் ஏற்பட்டது. ஆனால் ஜீவஜோதி பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரைக் காதலித்து வந்தார். தன்னை மூன்றாவதாக திருமணம் செய்யுமாறு சரவணபவன் அண்ணாச்சி மிரட்ட உடனடியாக காதலித்த பிரின்ஸ் சாந்தகுமாரை கைப்பிடித்தார் ஜீவஜோதி (jeevajothi).
Youtube
பிரச்னை தீர்ந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும்போது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரைக் கடத்தி கொடைக்கானல் சென்று அங்கேயே அவரை அடித்து கொலை செய்ய ஆள் அனுப்பி இருக்கிறார் சரவணபவன் அண்ணாச்சி. கணவரை காணவில்லை என ஜீவஜோதி வேளச்சேரி போலீஸ் நிலையத்தை அணுகி புகார் அளித்திருக்கிறார்.
இதன் பின்னணியில் சரவணபவன் அண்ணாச்சி இருக்கலாம் என சந்தேகமும் கொண்ட ஜீவஜோதி அதனையும் போலீசில் சொல்லி இருக்கிறார். 2001 ஜனவரி மாதம் புகார் கொடுத்தார். 2001 அக்டோபர் மாதம் பிரின்ஸ் சாந்தகுமாரின் உடல் கொடூரமான முறையில் பொலிஸாருக்கு கிடைத்தது.
2001 நவம்பர் சரவணபவன் அண்ணாச்சி மற்றும் கொலை செய்த அடியாட்கள் கைது செய்யப்படுகின்றனர். 2004ல் பூந்தமல்லி நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்து 10 வருட ஜெயில் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.2009ம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றம் அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற அண்ணாச்சிக்கு கடந்த மார்ச் 2019ம் ஆண்டு அதே ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
Youtube
கடைசி வரை தண்டனையை அனுபவிக்காமல் ஜாமீனில் இருந்த சரவணபவன் அண்ணாச்சி இந்த தீர்ப்பின் காரணமாக மாரடைப்பினால் ஜெயிலுக்கு செல்லாமலே மரணமும் அடைந்தார். அப்போது ஜீவஜோதி இப்போதுதான் தனக்கு நிம்மதியாக இருப்பதாகவும் ஆனாலும் அண்ணாச்சி தண்டனையை அனுபவிக்காமல் இறந்தது வருத்தம் எனவும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தற்போது ஜீவஜோதி தஞ்சாவூரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே பெரிய அளவில் தன்னுடைய தந்தை பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கி இருக்கிறார். அதே கையோடு அரசியலிலும் இணைய இருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் தஞ்சையில் ஜீவஜோதி உணவகத்தை திறந்து வைக்க பாஜக முக்கிய புள்ளியான கருப்பு முருகானந்தம் வருகை தந்திருந்தார்.
Youtube
சிறிய அளவில் தையல் தொழிலை செய்து வந்தவர் ஜீவஜோதி. அதனை ஆரம்பித்துக் கொடுத்ததும் வழக்கில் உதவி செய்த துணைக்கமிஷனர் ராமச்சந்திரன் அய்யாதான் என அடக்கமாக சொல்லும் ஜீவஜோதி பின்னர் ஆரி முறைப்படி டைலரிங் செய்ததால் அதிக ஆர்டர்கள் கிடைக்கவே தொழிலை விரிவுபடுத்தி ஆட்களை அழைத்து வந்து தங்க இடம் கொடுத்து பணிக்கு அமர்த்தும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
முதலில் அப்பா பெயரில் சைவ ஓட்டல் தொடங்கிய ஜீவஜோதி அது சரியாக நடத்த முடியாமல் அதனை மூடி இருக்கிறார். மீண்டும் மகன் பெயரில் சிறிய அளவில் அசைவ உணவகம் ஆரம்பித்தார். அதுவும் சில நாட்களில் மூடப்பட்டு இருக்கிறது. ஆனால் விதம் விதமாக ருசியாக சமைக்கும் அம்மாவிற்காக என்று இந்த ஹோட்டலை பெரிய அளவில் திறந்திருக்கிறார் ஜீவஜோதி.
Youtube
அரசியல் ஈடுபாடு குறித்து கேட்டபோது ஆரம்பத்தில் இருந்தே அம்மா ஜெயலலிதா மீது எனக்கு மிகுந்த மரியாதை. அவர் என் வழக்குக்கு செய்த உதவிகளை நான் மறக்க மாட்டேன். காவல்துறைக்கும் நீதித்துறைக்கு எனது நன்றி எப்போதும் இருக்கும். ஜெயலலிதா அம்மா மீது தனிப்பட்ட ஈர்ப்பு எனக்கு இருக்கிறது. என் கணவர் மூலமாகவே பாஜகவில் (bjp) உள்ள கருப்பு முருகானந்தம் அண்ணா (karuppu muruganandham) எனக்கு பழக்கம் ஆனார்.
நான் ஏற்கனவே பாஜகவில் இணைந்து விட்டேன். எதுவாக இருந்தாலும் அண்ணா கருப்பு முருகானந்தம் அவர்களை கேட்டுத்தான் செய்கிறேன். இன்னமும் வெளிப்படையாக நான் இணைந்ததை சொல்லாமல் இருக்கவும் அதுவே காரணம் என்கிறார். அரசியலில் ஈடுபட்டால் நிரந்தர வருமானதுக்கு என ஏதாவது செய்து வைக்க வேண்டும் என்றுதான் இந்த ஹோட்டலையும் திறந்திருக்கிறேன் என்று புன்னகைக்கிறார் ஜீவஜோதி.
நம்மை கடந்து செல்லும் துன்பங்கள் எல்லாம் நம்மை செதுக்கி செல்லவே வருகின்றன என்பதற்கு இத்தனை வருட போராட்டத்திற்கு பின்னர் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவஜோதி ஒரு வாழும் உதாரணம். என்ன கஷ்டம் நேர்ந்தாலும் நேர்மை இருப்பின் நிச்சயம் நாம் வெல்வோம் என்பதற்கான தன்னம்பிக்கை பெண்மணியாக ஜீவஜோதி ஜெயித்துக் கொண்டே இருக்க வாழ்த்துகிறோம்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!