குட்டி நாய்களோடு கொஞ்சி விளையாடி உணவருந்துங்கள்.. சென்னையில் ஒரு வித்யாசமான உணவகம்..!

குட்டி நாய்களோடு கொஞ்சி விளையாடி உணவருந்துங்கள்.. சென்னையில் ஒரு வித்யாசமான உணவகம்..!

நாய்க்குட்டிகள் என்பது பரவலாக எல்லோராலும் நேசிக்கப்படும் உயிரினம். ஆனாலும் அதனை வீட்டில் வளர்க்க எல்லோராலும் முடிவதில்லை. பணி காரணமாக சொந்த ஊரில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்தவர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.

பல வாடகை வீடுகளில் எழுதப்படாத ஒப்பந்தமாக வளர்ப்பு பிராணிகள் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. நாய்க்குட்டிகள் என்பது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்கிற உண்மை எல்லோருக்கும் தெரிவதில்லை. ஒற்றை குழந்தையாக வளர்க்கப்படும் வீடுகளில் நாய்க்குட்டிகள் சிப்லிங்ஸ் இல்லாத வெறுமையை போக்குகிறது.

தன்னை நேசிப்பவர்களை பதிலுக்கு நேசிக்க வேண்டும் என்கிற நாகரிகம் இயல்பாகவே நாய்களுக்கு இருக்கிறது. அதன் டிஎன்ஏக்களில் இது இயற்கையாகவே இருக்கிறது. ஆனால் மனிதர்களில் இப்படியானவர்கள் சில சமயம் கிடைப்பதில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.

குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் எனும் டார்வின் தியரி போலவே ஓநாய்கள் கூட்டத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகி காலசூழ்நிலையால் மனிதனுக்கு அடிமையானவை நாய்கள் என்கிற தியரி ஒன்றும் இருக்கிறது.

அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்பவர்கள் வளர்க்க சில செல்லப்பிராணிகள்!

Youtube

இப்படியான நாய்குட்டிகளுக்கு பல வாடகை வீடுகளில் வாழ அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் சென்னையில் ஒரு உணவகத்தில் வளர்ப்பு பிராணிகளான நாய்க்குட்டிகள் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை தங்களின் அன்பால் நேசித்து மகிழ்கிறது.

வயது வித்யாசம் பார்க்காமல் வரும் வாடிக்கையாளர் அனைவரிடமும் கொஞ்சி விளையாடுகிறது. எந்த ஒரு விஷயமும் பரஸ்பரம் கொடுத்து பெறுவதில்தான் இன்பம் நிறைந்திருக்கிறது என்பதற்கேற்ப தங்களது அன்பை கொடுத்து வாடிக்கையாளர்களின் அன்பை பெற்றுக் கொள்கின்றன இந்த நாய்க்குட்டிகள்.

மோமோஸ் பிடிக்குமா! வாங்க இனி வீட்லயே சுAலபமா சமைக்கலாம் !

Youtube

டிவிஸ்ட்டி டெயில்ஸ் (twisty tails) என உணவகத்தின் பெயரே வாலாட்டும் நாய்க்குட்டிகள் அடையாளத்தை கொண்டே வைக்கப்பட்டது நம்மை மேலும் ஆச்சர்யப்படுத்துகிறது. ஆழ்வார்பேட்டை அருகே இந்த உணவகம் (dog cafe) செயல்படுகிறது.

உணவகத்தின் ஏசி வரவேற்பறையில் இந்த நாய்க்குட்டிகள் வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கின்றன. உணவருந்திய பின்னர் இங்கே செல்லலாம். வருபவர் மடியில் அமர்வதும் கட்டிக்கொள்ள தாவுவதும் என இந்த நாய்க்குட்டிகள் செயல்பாடுகள் அங்கிருப்பவரை அன்பில் நனைக்கின்றன.

காதலின் பெயரால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பதை சொல்லும் 7 அறிகுறிகள்..

Youtube

விருந்தினர்களும் நாய்க்குட்டியை கொஞ்சுவதும் அனைத்துக் கொள்வதும் பார்க்கும்போது நமக்கும் ஆசை வர வைக்கும் செயலாக இருக்கிறது. 16 நாய்க்குட்டிகள் இங்கே இருக்கின்றன. பஞ்சுப்பொதி போன்ற இந்த நாய்குட்டிகளின் வாஞ்சையை அனுபவிக்கவும் ஒரு கொடுப்பினை வேண்டும்தான்.

நாய்குட்டிகளுக்கென்றே இருக்கும் தனிப்பட்ட வரவேற்பறை தாண்டி உணவகத்தில் எங்கு பார்த்தாலும் நாய்க்குட்டிகள் புகைப்படங்களாக போஸ்டர்களாக நிறைந்திருக்கின்றன. இங்கே வருவது மனதிற்கு நிம்மதி தருகிறது என்று பல வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

Youtube

இதன் உரிமையாளர் ரேகா கூறுகையில் மனசோர்வுடன் இங்கே வருபவர்கள் எல்லோரும் புத்துணர்வுடன் செல்வதை பார்க்க முடிகிறது என்கிறார். அடுக்குமாடி குடியிருப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த உணவகம் பெரிய ஆறுதலாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

நாய்க்குட்டிகள் மீதான வெறுப்புகளை நீக்கவும் இந்த உணவகம் துணை புரிகிறது. இறைவன் படைப்பில் நம்மை உண்மையாக நேசிக்கும் பிராணிகளில் நாய்களுக்கு முதலிடம். அவற்றால்தான் தன்னுடைய பதில் அன்பை வாலாட்டி சொல்ல முடிகிறது. மற்ற பிராணிகள் எல்லாம் அதற்கப்புறம்தான்.

அப்படியான நாய்குட்டிகளோடு நீங்களும் சென்று ஒரு நாள் பழகி பாருங்கள். இங்கே மெனுவும் விலை அதிகம் எல்லாம் இல்லை. நடுத்தரமான விலையில்தான் இருக்கிறது. இளைஞர்களின் நேசத்துக்குரிய யாஷிகா , சுஜா வருணி போன்ற பல திரை பிரபலங்களும் கூட இந்த நாய்க்குட்டிகளின் அன்பில் கரைந்து மகிழ்கின்றதை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது.

இளம் அம்மாக்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பாகவும்,ஆரோக்கியமாகவும் வளர்க்க பயனுள்ள குறிப்புகள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!